நிகழ்வுகளால் நினைவுகள்
அலங்கரிக்கப்படுகிறது…
இதயங்களை சுகப்படுத்தி
எண்ணங்கள் சுத்திகரிக்கப்படுகிற…
ஒரு புனித யாத்திரை இது….
இருபாலின இருதயங்களின்
ஒருமித்த பயணமிது…
அன்பார்ந்த பூக்கள்
அர்ச்சிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்படுகிற
அருந்தவ நிகழ்விது…
நிக்காஹ் முடிந்த கையோடு
முற்றுப்பெறலாகுமா?
மணவாழ்வினுள்
மனங்கோணாது
பிஸ்மியுடன் திருப்பாதம் பதியுங்கள்
இயன்றவரை முழுமனதாய்
புன்னகை கொடுங்கள்
உங்கள் துணைகொண்டு
இதயவரிகளை இன்பப்படுத்துங்கள்…
விட்டுக்கொடுத்து
நேசக்கரங்களால் நீவி விடுங்கள்…
ரணங்களை விரட்டியடித்து
மனங்களை ஆளப்பழகுங்கள்…
அன்பை மட்டுமே
போதிக்கப் பழகுங்கள்...
இன்சொல்லை மாத்திரம்
உச்சரியுங்கள்...
இயன்றவரை
பாசத்தை சுவாசியுங்கள்...
இருதயங்களை வசீகரிக்கிற
வித்தைகொண்டு
கணவானின் கருத்தோடு
ஒன்றித்துப் போங்கள்...
இறைவனின்
திருப் பொருத்தம் நாடுங்கள்…
குடும்ப வாழ்க்கையும்
ஓர் இபாதத் ஆகும்
6 comments:
//
இதயங்களை சுகப்படுத்தி
எண்ணங்கள் சுத்திகரிக்கப்படுகிற…
ஒரு புனித யாத்திரை இது….
//
அருமையான வரிகள்
நல்ல கவிதை
///
விட்டுக்கொடுத்து
நேசக்கரங்களால் நீவி விடுங்கள்…///
இது இருந்தாலே வாழ்க்கை சுவர்க்கம்தான்...
உங்கள் வருகைக்கு நன்றி...
தாம்பத்ய வாழ்விற்கோர் இலக்கணம்
அழகிய கவிதை சகோதரி.
உண்மைதான்....
அன்பினால் எதையும் சாதிக்கலாமே....
Post a Comment