Sunday, July 24, 2011
தளிர்விடும் துயரும் ஒற்றை நினைப்பும்....
நம்மைப்பிரித்த
அந்த
மௌனத்தின்
இடைவெளிகளில்தான்
நம்
அன்பின் ஆழம்
உணர்ந்தேன்…
இறுக்கமான அந்த
தருணங்களில்
கன்னமேட்டில்
கசிந்துவிட்டதெல்லாம்
உப்புக்கரித்துவிட்ட
கண்ணீரேதான்…
சுகந்தமான சூழலை
சூரையாடிவிட்ட
மகிழ்வில்
கொப்புளிக்கும்
சூராவளியில்
சிக்கியதொரு
சிட்டுக்குருவிபோல..
திக்குத்தெரியாமல்
நான்…
இரவின் ஏகாந்தம்
சுட்டுவிட்டு நகரும்…
பொறிந்து தள்ளும்
நிலவினைப்போல்
தனிமையில்
நான்…
நினைவுகள் வரும்
ஆனால்..
வானம்தான்
கருமேகம்
சூழ்ந்ததுபோல்
நிலவினைமட்டும்
உள்வாங்கும்
இரவினைப்போல்
ஒற்றை நினைப்பில்
உரைந்துகிடக்கும்
000 000 000
Subscribe to:
Posts (Atom)