செல்லக் கிறுக்கல்
நமது
ஞாபகக் கிறுக்கல்கள்
சந்திக்கின்றபோது
ஜனித்துவிட்டது
நமது நேசம்…
நமது
ஒற்றை விழிகளால்
நீடித்துவிடப்பட்டது
பாசப்பிணைப்பு…
உனது மௌனத்தின்
தவிப்புகள்
என்னை
தகிக்கவைக்கும்…
இரவுகளை உருக்கி
உனது கூந்தலுக்கு
நிரம் கொடுப்பதிலும்
விடியலை ஒடுக்கி
உனது பார்வைக்கு
வெள்ளையடிக்கும்
முயற்சியிலும்
உண்மையில் நான்
தோற்றுத்தான்
போய் விடுகிறேன்…
தனிமைகளில்தான்
உனது
சில்லரை நினைவுகள்
என்னை உன்னில்
அமிழ்த்திவிடுகின்றன….
அந்த
நொடிப்பொழுதுகளில்
நம்மை
பிரித்தறியமுடியாதபடி
பற்றிப்பிடித்திருக்கிறது
நம்
பொல்லாத நினைவுகள்
000 000 000
No comments:
Post a Comment