என் நெஞ்சக் குளத்தில்
நீராட…
என் இதயச்சிறகு
படபடக்க…
எனக்கொரு குழந்தை வேண்டும்
என் மார்மீது
தூக்கிப்போட்டு
தாளாட்டுப்பாட…
நான் போடும்
ஆடையை அழுக்காக்க…
செல்லமாய் எனை
சீண்டிக்கொள்ள…
எனக்கொரு குழந்தை வேண்டும்
என் கோபச்சுடரை
கொஞ்சம் பற்றவைக்க…
பால் முகம் பார்த்து
நான் பசிமறக்க…
எனக்கொரு குழந்தை வேண்டும்
மௌனம் குழையா வீடு
சப்திக்க…
அடுக்கிவைத்த அழகுப்பொருள்
எடுத்துப்போட…
வாரி முடிந்த கூந்தல்
சிலுப்பிவிட…
எனக்கொரு குழந்தை வேண்டும்
நான் கொஞ்சமாய்
அதட்ட..
அழுகைச்சத்தம்
வீட்டினில் தவழ…
என்னவன் எனைமிரட்ட…
வீடு ரெண்டாக…
எனக்கொரு குழந்தை வேண்டும்
அம்மா !!!
என்ரெனை அழைத்து…
கட்டியெனை இழுத்து…
அழுத்தம் அழுத்தமாய்
முத்தம் பதிக்க…
பால்பற்களால்
பல் பதிக்க…
எனக்கொரு குழந்தை வேண்டும்
பிஞ்சுக் கரங்கலால்
எனை காயப்படுத்த…
தங்கக் கைபிடித்து
என் இதழ் பதிக்க…
என் ஆத்மாவின் தாகம்
தீர்ப்பதற்கு…
எனக்கொரு குழந்தை வேண்டும்
கலைந்துபோன சுவடுகளை…
தொலைந்துபோன தடங்களை…
மீண்டும் பதிக்க
உதிர்ந்துபோன ஆனந்தங்கள்
திரும்பவும் எனை
தழுவிக்கொள்ள…
என்னவனின் வாரிசாய்…
எனக்கொரு குழந்தை வேண்டும்
5 comments:
கவிதை அருமை
மாஷா அல்லாஹ்... குழந்தை மிக அழகு!!!
நன்றி சகோதரி
ஹி ஹி
ரொம்ப பெரிய மனசுங்க உங்களுக்கு
Good poem keep it up and any more?>>>>
அருமை.. அருமை...
STC Technologies
Post a Comment