செவ்வதனத்தின்
எழில் செளிக்க
தீஞ்சுவை கக்கும்
செவ்வாயின் தாள் திறந்து
உன்னை
“செப்பு“ என்றது யாரம்மா...?
கானகத்துக் காரிருளை
கரைத்துவிட்ட உன்
கயல் விழிகளை அகல
திரக்கச்சொன்னது யாரம்மா...?
தூர்ந்துபோன
நட்சத்திரத்துணுக்குகளை
இரவுகளின் ஆக்கிரமிப்பில்
அசைந்து கொடுக்கும்
உன் கூந்தலில்
ஆங்காங்fகே
பதித்ததும் யாரம்மா...?
பார்...
அதனால் இங்கே
எத்தனை விபத்துக்கள் என்று....
இந்தக்கூர் முனை மூக்கில்
அப்படியென்ன
பிரகாசத்திட்டு
ஓ....
ஒற்றைக்கல் மூக்குத்தி
அதனால் தானோ இத்தனை
உதடுகளின் அசைவில்
தெரித்த துகள்களால்
வெளிக்கிட்டது மின்னல் கீற்று
அந்த
கீற்றுகளை இழையோடி
ஓராடை செய்வதில்
திருப்தி கண்டது
இந்தப் பொல்லாத இதயம்...
உன்
நீண்ட நெடிய பார்வை
என்னில் எதைத்தேடிற்றோ
இப்பொழுது
குற்றுயிராய் கிடப்பது
இந்த உயிர்தான்....
இதோ என் கை
நீளவும் துணிகிறது
உன்
சிவப்பு நிறத்துப்பட்டாவைக்
கொஞ்சம் கொடேன்
இங்கே
ஆபத்தென்ற அறிவிப்பை
அம்பலப்படுத்தத்தான்...
5 comments:
கவிதை அருமை......
சிலவரிகள் மிகவும் சிறப்பா இருக்குது...வாழ்த்துக்கள்
இனி தொடருவோம்..
நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)
சிலவரிகள் மிகவும் சிறப்பா இருக்குது.////
கவிதை நல்லாயிருக்கு
மிக்க நன்றி
Post a Comment