நீ
என்னைப் பாராமல்
இருந்தால்
நான் எழுதும் எழுத்துக்கு
கவிதையென்று
பெயர் வந்திருக்காது....
என்னோடு
பழகாமல் இருந்தால்
இந்தக் கவிதைகளில்
ஏற்ற இரக்கங்கள்
இருந்திருக்காது....
எனக்குள் உன்னை
திணிக்காதிருந்தால்
சமூகம் என்னை
அறிந்துவிடும் வாய்ப்பை
இழந்திருப்பேன்....
என்னைவிட்டும்
நீ
பிரியாமல் இருந்தால்
என் கவிதைகளில்
இத்துனைசோகம்
முகாமிடுவதற்கு
அவகாசமே இருந்திருக்காது....
நான்
நீயாகிப்போனபோது
எனக்குள் இருந்த
நீ
விலகிப்போனதைத்தான்....
இன்னும் நம்பமுடியாதவளாய்....
00000
2 comments:
கவிதை ரொம்ப அழகா இருக்கு...
அசத்தல் கவிதை., வாழ்த்துக்கள்.
Post a Comment