இப்பொழுதெல்லாம்
மனம்
விரும்புவதில்லை தெரியுமா?.....
நீலக்கடல்…..
அதன்மேல் சாயத்தருணம்
பார்க்கும்
ஓங்கி வளைந்த தென்னை…..
என்னை ரணப்படுத்தும்….
எத்தனை ஆசையோடு
காத்திருக்கிறது தெரியுமா
ஆழிக்கடல்….
ஆனால்….
அருகில் இருந்தும்
தொட எத்தனிக்காது….
காற்றின் உந்துதலால்
வேகம்கொண்டு மாத்திரமே
கடல் பெண்ணை வழைந்து முகரும்
தென்னைமீது
எனக்கொரு வெறுப்பு…..
நீலக்கடல் மீது அப்படியொரு
பச்சாதாபம்.
ஏன் தெரியுமா?
காற்றின் வேகம்
சீதனப் பேயாகவும்
என் கண்களை
உருத்துவதனால்…..
............
2 comments:
அருமையான வார்த்தை வடிவமைப்பு நன்றி சகோ!
உங்கள் வாழ்த்து எங்கள் முன்னேற்றம்.
Post a Comment