இறைநேசர்கள்
இன்முகத்துடன்
எதிர்பார்க்கின்ற
விருந்தாளி…
உலகத்தீஞ்சுவையில்
ஊரிக்கிடப்போர்
உதரித்தள்ளும்
வேண்டாவிருந்தாளி…
உள்ளச்சம் கொண்டோர்க்கு
அத்தாட்சி…
மறுமையை நினைவுருத்தும்
ஞாபகச்சிதறல்…
உறவுகளின் பினணப்புக்களை
தளர்த்திடும்
விசித்திரக்கயிறு…
மரணத்திற்காக அழுது
ஆர்ப்பாட்டம்
பண்ணிவிடவேண்டாம்..
கண்ணீரை
குவியல்களாக
இரைக்கவும்வேண்டாம்
மையத்திற்காக
உங்கள்
சலாத்தினை
நன்முகத்துடன்
நவின்றுவிடுங்கள்
ஏனெனில்…
எங்களை அறிந்த நினையில்
உறங்குகின்ற
ஆழ்ந்த உறக்கம் அது…
இரு உலகிலும்
சஞ்சரிக்கின்ற
அG+ர்வ நிலை அது…
மையத்திற்காக
அழுது ஆர்ப்பரிப்பது
அறியாமை…
அறியாமையிலிருந்து
தம்மை மீட்டுக்கொள்வதுதான்
அறிவுடைமைக்கு
அழகல்லவா…?
No comments:
Post a Comment