நித்திரை பதிக்கிற
நேரத்தில்தான்-என்
உணர்வுகளின் வேலிகள்
என்னை
மேய்க்கத்துவங்குகின்றன…
புரியாத சில
புதினங்களை
புரிந்துகொள்ள
முடியாதபோதுகளில்
என்னை நானே
சபித்துக்கொள்கிறேன்…
விழியோ
கனவுகளை விழுங்குவதிலும்
கண்ணீரை துப்புவதிலும்
கில்லாடி….
துயரங்களை
வெல்லநினைத்து
தோல்விகண்டது உள்ளம்
துன்பப்படுவது கண்டு
துயரப்பட்டது விழிகள்…
ஞாபகங்களின் அழுத்தங்கள்
என்-வழிநெடுகிலும்
காணும் குழிகளை
நிரப்பிவிட்டு
அமிழ்ந்துபோகிறது
அதற்கே உரிய அமைதியில்…
உறவுகளை
பலப்படுத்தும் முயற்சியில்
என்
நெடிதான நாட்களை
தின்று
சிறைவைக்கிறது சுற்றம்…
அடிநெஞ்சில்
படிந்துகிடக்கும்
லட்சியக்கீற்றை
அறுத்தெரிந்து விடுகிறது
காலத்தின் நகர்வுகள்…
ஏமாற்றங்களும்
ஏக்கங்களும்
தாவணித்தலைப்பில் முடிந்துள்ள
சில்லரைமுடிச்சுப்போல…
தோல்விகளை மறந்து
புரண்டெழ நினைத்தால்
பெண்சாதியென்று
பின்தள்ளும்
நம் சமூகம்
No comments:
Post a Comment