Wednesday, July 20, 2011
எனது முதல் நுால் வெளியீடு...
எனது கண்ணோட்டத்தில்
கண்ணீர் வரைந்த கோடுகள்;
இன்று எத்தனையோ படைப்பாளிகள் தங்களது திருமணபந்தத்தின் பின் இலக்கியத்தேடல்களை தொலைத்துவிட்டு முடங்கிக் கொள்கிறார்கள் அல்லது முடக்கப்படுகிறார்கள்.அந்த வகையில் திருமணத்தின் பின்னரான எனதிந்த இலக்கியப்பயணத்திற்கு…துனைபுரிந்த அல்லாஹ்விற்கும் அடுத்து துணைவர் அவர்கற்கும் என் நன்றிகள்.
இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்துகொண்டு கடும் முயற்சியின் பிரதிபளிப்பாக வேகம் பத்திரிகையின் ஆசிரியரான சகோதரர் பஹமுன அஸாம் தனது வேகம் பதிப்பகத்தின் மூன்றாம் வெளியீடாக எனது கன்னித்தொகுப்பான கண்ணீர் வரைந்த கோடுகள்.கவிதைத்தொகுதியை வெளியீட்டுத்தந்து என்னை கைதுாக்கிவிட்டதில் மிக்க மகிழ்ச்சி
கலை உலகில் முதன்முதலில் காலடி எடுத்துவைக்கும் என்னை யாரென்று தெரியாமலேயே….கலையை ஊக்குவிக்கும் நல்லெண்ணத்தில் அணிந்துரை தந்து புத்தகத்துக்கு பெருமை தேடித்தந்த கெகிராவ ஸஹானா ஆசிரியையின் இலக்கிய உள்ளதடதைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை…
மூங்கிலுக்குள் ஒழிந்திருந்த
புல்லாங்குழலை இனம் பிரித்த
பெற்றோர்க்கும்…
இந்தப் புல்லாங்குழலின்
பும்பல்களை மொழி பெயர்த்த
அன்புக் கணவர்க்கும்…
பாரபட்சம் இல்லாமல் என் கன்னித்தொகுதியை சமர்ப்பித்திருக்கிறேன்
அன்றலர்ந்த பெண்ணாயினும்….கூந்தல் நரைதட்டி கூண் விழுந்த பெண்ணாயினும் பெண்மை என்கிற அந்தஸ்தைப் பெறுகிறபோது புன்னகையை சேமிக்கும் முயற்சியில் கண்ணீரைக் கொஞ்சம் இரைக்கத்தான் வேண்டியுள்ளது….கன்னம் வழியே வரையப்பட்ட கண்ணீரின் கோடுகளையும் அதனைத்துடைக்கும் கரங்களையும் படம்பிடித்துக்காட்ட வேண்டும் என்கின்ற அவாதான் இன்று கண்ணீர் வரைந்த கோடுகளாக உங்கள் பார்வையில்…
62 பக்கங்களோடு 24 கவிதைத் தலைப்புகளை தன்னகத்தே உள்ளடக்கிய இந்தக் கன்னித்தொகுப்பில்…..பெண்களின் ஒவ்வொரு பருவத்தையும்…அதற்கே உரிய சுபாவங்களையும்…அவர்பளுக்கே உரிய அபிலாஷைகளையும்..உலவ விட்டிருக்கின்றேன்.
சாயம் போகும் நினைவுள் மூலம் ஒரு ஏழைத்தாய்க்கும்….நாகரிக மோகத்தில் தில்திளைக்கும் தன் மகளுக்கும் இடையிலான மனப்போராட்டத்தைக்கூற எத்தனித்திருக்கிறேன்.
இதில் எததுனைதுாரம் வெற்றிகண்டேன் என்கதில் சந்தேகம் இருந்தாலும்….நான் கூறவந்த ஒரு விடையத்தையேனும் இன்றைய இளசுகள் இருக்கிப்பிடித்திருக்கிறார்கள் என்பதில் மட்டும் எனக்குத் தெள்ளத்தெளிவு….
“வானொலியின் முழக்கமும்
பிளேயரின் பிரளயமும்
அவளிருக்கும் நாளிகளை
வெளிப்படையாய் பறைசாட்டும்….“
மகளது ஒருபிடிக்கனவால் தாய்மையின் அவஸ்தையுமான நாட்கள்…ரணங்களால் நனைந்திருக்கும்.தாய்மையின் இயலாமைகள் எப்படியெல்லாம் பிரதிபளிக்கிறது பாருங்கள்.
“பழுத்த ஐம்பதிலும்
கோப்புக்களோடு மாரடித்து
பாடம் நடத்துகையில்
இடைகிகிடை வரும் தளர்ச்சி…….
……..
மூன்று நேரத்தட்டுக்காய்
இவரிடம் வாங்கும் குட்டு
கண்ணீர் கொப்புளிக்கும்….
இயலாமையில்
ரோசம் சுரனை இழக்கும்….“
பெண்மை என்கிற மென்மையை அணிந்துகொள்கிறவர்கள் விரக்தியின் உச்சத்தை அடைந்து தத்தம் விருப்பங்களில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப்பார்க்கிறார்கள்.சின்னச்சின்ன விடயங்களுக்கு கண்ணீரை விரயமாக்கும் பலகீனமான பெண்களுக்கு கண்ணீர் ஒரு பலமாக அமைந்த சந்தர்ப்பங்களும் உள
.
இந்த மானுஷ்ய புத்திரர்களின் அடாவடி அடக்கத்தருணம் பார்க்கும் பொழுதுகளில் அவளைச்சுற்றியுள்ள உறவுகளில் ஏனோ….துாரங்கள் அதிகரிப்பதை அவளால் உணரமுடிகிறது.இப்படிப்பட்ட பெண்களின் அடக்குமுறைக்கும் வெற்றிக்கும் இடையிலான இடைவெளி…அங்குல அளவுதான் என்று சிலபெண்களே பெருமூச்சோடு பொறுமையை தமதாக்குவர்.
பெண்கள் அவர்களின் இதயத்தாகிப்புகளை புலம்பாமலில்லை.நானும் என் கவிதைகளில் புலம்பியருக்கிறேன்
.“இது அங்குல இடைவெளி“
என்ற தலைப்பிலிருந்து…..
“புரிந்துகொள்ளாத வீடுகள்…
அன்புகாட்டாத நேசங்கள்
முளைக்கப்பார்க்கும்
பெண்மையின் அபிலாஷைகள்
கண்முன்னே கழையப்படும்போது-அது
தருகிற வலியும்….ரணமும்…
வேதனையாகி விரக்தியாகிறது…“
அதுபோல் இந்தத் தலைவலி இருக்கிறதே…அது மனிதரை படுத்துகிற பாடு இருக்கிறதே….அப்பப்பா….நானும் அனுபவித்திருக்கிறேன்…
.இதோ….
“போதும் என்னை விட்டுவிட்டுவிடு“
என்ற தலைப்பிலிருந்து…
“நிம்மதியை குழைக்கிறது….
நினைவை கழைக்கிறது…
உணர்வை சிதைக்கிறது…
மரணவாயிலை கண்முன்னே கொணர்கிறது…“
துன்பங்களை மட்டுமன்றி இனிமையான நினைவுகளையும் அசைபோடுகிறது என் கவி..
“விழியால் தொட்டுக்கொள்“
மூலம் காலத்தால் அழியா ககலாசாலை நினைவுகளையம்
செய்த குறும்புகளையும் கண்முன்னே நிழலாய் படரவிட்டிருக்கிறேன்….கல்லுாரி வாழ்வை கடந்தபிறகு..
அதை அனுபவிக்கவில்லையே என்கிற ஏக்கம் கூடாதில்லையா….? அந்த நப்பாசையில்…..
“கலாசாலைத்தோப்பில்
திருட்டு அனிலாய்
பறித்த பழத்தை
பத்துப்பேர் பகிர்ந்தது…
ஐஸ்பழம் வாங்க
காத்திருந்து
கதைகள் கேட்டதும்…
காரியாலயத்தில்
மண்டியிட்டு
மன்னிப்புக்கேட்டதும்…
நொந்து போன பொழுது
மனம்விட்டழுதது…
தோழிகள் தோள் கொடுத்து
தேற்றிவிட்டதும்…..
இந்த வரிகளில் எத்தனைபேர்களின் ஞாபகத்தட்டுக்கள் துாசுதட்டப்பட்டிருக்கும்….
இவைகள் மாத்திரமின்றி…யுத்தக்கொடுமைகள்
“காளையரின்
காடைத்தனத்தால்
கற்பிழந்தவர்கள்…
அநியாயமாய் தீக்குளித்த
சீதைகள்…
மழழை என்றும்
மாதரென்றும் வேறுபாடின்றி
வெறுமையாய் போனவர்கள்…“ பற்றி
“அக்கரைச்சீமையில் எம்மவர் கண்ணீர்“
“இனியொரு துன்பமில்லை“
உரிக்கப்படும் உரிமைகள்“
போன்ற தலைப்புகளின் மூலம் காட்சிப்படுத்த முனைந்திருக்கிறேன்.
இயலாமையும் வலியும் கொப்புளிக்கும் வரிகளை உள்வாங்க…அவற்றை நாம் அனுபவிக்கத்தான் வேண்டும் என்றில்லையே…
அதுபோல்…பருவகாலக் கனவுகளுடன் நாட்களைத்தள்ளும் இளசுகளின் உள்ளத்தை ஆற்றுப்படுத்தவும் முயற்சித்திருக்கிறேன்.
’’பெண்ணாய் பிறந்திட்டோம்“…..
“என் மீதான சதிகள்“…
அந்த இரவுக்குமட்டும்“.
போன்ற தளைப்புகள் குறித்து இவற்றைத்தான்.
“இளமை…
தடைபோடப்படும் சுதந்திரம்…
வெறுமை…
அதை நிரப்ப விரக்தி…
நிம்மதி…
கலைந்துபோன கனவாய்…
அற்ப சந்தோஷமாய்…“
பெண்களின் இதய மொழி பெயர்ப்புக்கள்…அது வெளியே தெரியா வன்னம் தினக்குறிப்புகளில் பதிகின்றவேளை வரண்ட கண்ணீர் திவளைகள் அதனை சுவைப்பது…இவை எவ்வளவு உண்மையென்று காயப்பட்ட உள்ளங்களைக்கேளுங்கள்…
இளமை அதன் துடிப்பு …
காதல் அதன் பிரதிபளிப்பு..
திருமணம் அதன் தடயங்கள்…
தாய்மை அதன் ஏக்கங்கள்…
வேலைப்பளு….இயற்கை…ரசனை….வலி…வேதனை…
பெண்மை தம் வாழ்க்கை வட்டத்தை
இத்தோடு நிறுத்திக்கொள்கிறது.
அதனைத்தாண்டிய தேடல்களை வார்த்துக்கொள்ள வாழ்வின் மீதானபற்றுதல்களில் பிடிப்பை ஏற்படுத்தவேண்டும்..
இந்த கண்ணீர் வரைந்த கவிதைத்தொகுதி…வெறும் கற்பனை அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
சமூகத்தில் உலவித்திரியும் பெண்களின் அபிலாஷைகள்தான் இவை…
நிறைவேறாத எண்ணக்குவியல்கள்….
அடிமைத்தன்திலிருந்து விடுதலையை நோக்கிய சாமானிய நகர்விது…
சமூகத்துள் வேரோடியிருக்கும் விஷக்கொடிகளை இனம் காட்டி வேரறுக்கும் சின்ன கன்னிமுயற்சி இது……
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கண்ணீர் வரைந்த கோடுகள் என்ற உங்கள் கவிதைத் தொகுப்பை வாசித்துப் பார்க்க ஆசையா இருக்கு..
Post a Comment