இதயத்தின் ஆணிவேரை
ஆட்டம் காண்பிக்கும்
இந்தப் பொல்லாத கோபம்
வேண்டாமே…
பழிக்குப்ப்ழி என்கிற
அறியாமையை
அறிவுடைமையென
எண்ணுகின்ற
பாமரர்களின்
உள்ளங்கைளத்தான்
அச்சகதித் துர்க்குணம்
சீரழித்துச் சின்னாபின்னமாக்கும்
கோபக்கனி
கொந்தழிக்கும் போதுகளில்தான்
ஷாத்தானின் குணங்கள்
தாண்டவமாடத்
தருணம் பார்க்கும்…
சினங்கொண்டோரின் நா
அடங்காது
நெறிகெட்ட வார்த்தைகளை
அபிஷேகிக்கும் இழி நிலைக்கு
உந்தப்படுவாய்….
நிதானம் துறந்து
மதியிழக்க வேண்டுமா…
அக்கினித்தடாகத்தில்
விழ வேண்டுமா….
ஈமானிய ஒளி
சூரையாடப்பட வேண்டுமா…
நீ தாரலமாய்
கோபப்படு….
ரப்பின் கடும் கோபம்
உனை
சுட்டெரிக்கட்டும்
நீ கோபப்படு…
எண்ணற்ற தீமைகளை
சுவைக்கத்தோன்றும்
நீ கோபப்படு….
கோபம் பகுத்தறிவின்
விரோதியாம்
பொன்மொழி அறிந்ததில்லையா….
கோபத்தை
நெறிப்படுத்துபவன்
சிறந்த வீரனாம்
தெரிந்ததில்லையா….
கோபச்சுடரை தன்னுள்
அனைப்பவனின் மானம்
காப்பானாம் ரப்பு
உணர்ந்ததே இல்லையா…
கோபத்தை அழித்துவிடு
இல்லையேல் பலகீனப்படுத்து
பலகீனத்தை இதயம்
இயல்பாய்
ஒதுக்கித்தள்ளும்…
முடியவில்லையா….
உடனே வுழூ செய்துகொள்
கோப நெருப்பை வுழூ
அணைத்துவிடும்…
கோபம் முகாமிடும் பொழுதுகளில்
வாய்முடி மௌனியாகு…
கோபத்தை அடக்கிக்கொண்டால்
இறைவன்
தண்டணையை
அடக்கிக்கொள்கிறானாம்….
இத்தனை தெறிந்தும்
வேண்டுமா இந்தக் கோபம்….
3 comments:
கோவம் ரொம்பக் கொடியதுதான்...
அருமையான கவிதை
pls remove " Word verification"
enakkum vendam inthk kobam
Post a Comment