Wednesday, October 12, 2011

நீயே என் சுவாசம் 07

அத்தியாயம் 07

கண்கள் அசதியில் முடியிருந்தாலும்….
நினைவுகளும்…எதிர்பார்ப்புகளும்…சதா..விழிப்பிலேயே இருந்தது மானிஷாவுக்கு….
தொலைபேசி அலறவும் பதட்டமாய்..எழுந்து அமர்ந்துகொண்டாள்.
விடாமல் ஒலித்தது மணி….மணியைப்பார்த்தாள்
 இன்னும் காலை ஐந்தைத்தாண்டியிருக்கவில்லை….யாராக இருக்கும் அழுத்துக்கொண்டே கையில் தாங்கி காதுகளில் பதித்தாள்….

“ஹலோ…”

“ மோனிங் மானிஷா…..கோச்சுக்காதடா…
.என் பியூட்டிக்கு பெட்கோஃபி வேணுமாம்….ரெண்டு போட்டுத்தறியா….”

“ சீ வெக்கமாயில்ல உனக்கு….”

“கொண்டுவரப்போறியா…இல்லயா…இல்லன்னா  
விளைவுகள் என்ன என்று நான் சொல்ல தேவலைனு நெனக்கிறேன்….” வார்த்தைகளில் மிரட்டல் அதிகமாகவே இருந்தது

வேண்டா வெறுப்புடன் எழுந்த மானிஷா…
கையில் தேனீருடன் அறையை நெருங்கினாள்…
.பரணி யாருடனோ தொலைபேசியில் பேசுவது மானிஷாவின் காதுகளில் மெலிதாய் விழுந்தது…காதுகளைக் கூரிமையாக்கிக்கொண்டாள்…

“ சே.. என்ன பண்றே…நேத்து ஒரு ஆள் வேனுமென்றேன்…மப்புல இருந்துட்டு இப்பவா கோல் பண்றே….”

 “…….”

“ஓக்கே…அவனுக்கிட்ட போஃனைக் கொடு…..”

“……..”

“என்ன நான் சொன்னது புரிஞ்சுதா….
இந்த எட்ரஸ்ஸை நோட் பண்ணிக்க…..
அறைமணி நேரத்துல…நீ அங்க இருக்கனும்…புரிஞ்சுதா….”

தொடர்பை துண்டித்தான் பரணி….குறிப்பிட்ட விலாசத்தை மானிஷா…
.மனதுக்குள் குறித்துக்கொண்டாள்….சிறிது நேரம் தாமதித்து….பின்..
அவர்களது அறைக்குள் நுழைந்தாள்.
.தேனீரை மேசை மீது வைத்துவிட்டு திரும்பிப்பாராமலேயே வெளியே வந்தாள்…

“ஏய் நில்லு…."

மானிஷாவை தடுத்து நிறுத்தின அவளது அகங்காரக் குரல்…
சற்றே தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தாள் மானிஷா.

“இப்படி  வந்து என் காலைக் கொஞ்சம் பிடிச்சுவிடு…”

 வந்த மிடிகவுன் கட்டளை போட கொதித்துப்போனாள் மானிஷா…

“ பொண்ணுங்களாடி நீங்க…மானங்கெட்ட பிழைப்பு 
பொலைக்கிற உனக்கே திமிறு இப்படினெ்னா…எங்களுக்கு எப்படி இருக்கும்….”

“என்னடி சொன்னே…இப்படி வாய் நீளுது…”

மானிஷாவின் கன்னத்தைப் பதம் பார்த்துவிட்டது பரணியின் முரட்டுக்கை.
நடப்பது நடக்கட்டும்…என தைரியத்தை வரவழைத்துக்கொண்டாள் மானிஷா….

“ என்ன பரணி….எந்த தைரியத்துல இப்படி துள்ளுரீங்க….
நான் வாய்பேசாம இருந்துட்டா…எனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு அர்த்தமா
 உங்க மெடிகள் ரிப்போட் எல்லாம் பொய்யாயிடுமா..…”

“என்னடி…நீ என்ன கதைவிட்றே..நீ சொல்லிட்டா நா பயந்திடுவேனா…”

“ போதும் பரணி இந்த நாடகம்….உனக்கு எயிட்ஸ் இருக்கு….
ஒரு ரிப்போட்டில்  சந்தேகமென்று எத்தனையோ…மருத்துவமனைல 
டெஸ்ட் எடுத்திருக்கே……அத்தனை ரிப்போட்டும் என்ன சொல்லிச்சு…
 உனக்கு எயிட்ஸ்…. ஆரம்பக்  கட்டத்தை தாண்டியாச்சு என்று சொல்லலை?
 உன் சபல புத்திக்கு கிடைச்ச தண்டணைடா இது…”
 அவிழ்த்துவிட்டாள் ஒரு முடிச்சை

“என்னடி…என்ன கதை அளக்குறே…எனக்கு எயிட்ஸா….” 

நா தட்டுத்தடுமாறினாலும்…. பெரிதாக சிரித்து வார்த்தைகளில் கம்பீரத்தை நிலைநாட்டமுற்பட்டான்

“ நான் கதைவிட்றேனா…எங்க பாதி சொத்துகளை கரைச்சு….வெயிநாட்டுக்குகப் போயிட்டே….அங்க பொண்ணுங்களோட போட்ட கும்மாளத்தில்
…உன் நோய் அம்பலமாச்சி…அப்புறமென்ன… சொந்த நாட்டுக்குத் தொரத்திட்டாங்க…
இங்க வந்து உன் சுயநலத்துக்காக
…எங்க வாழ்க்கையை சின்னாபிண்ணமாக்கிட்டே…
எத்தனைநாளுக்குடா உன் ஆட்டமெல்லாம்…” தனது ஆவேசத்தை வார்த்தைகளில் கொட்டினாள் மானிஷா…..

“ என்னடி மிரட்டுறியா…” வெறித்தனமாய் கேட்டான் பரணி.

“ ஒரு மிரட்டலுமில்லை….இனியெனக்குப் பயமும் இல்லை….உனக்குப் பயப்பட்ற காலம் இனி எனக்கு வரவே வராது….என் தங்கையைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்…”

முச்சுவிடாமல் கூறிய மானிஷா….அவ்விடத்தைவிட்டகன்றாள்… தனது அறைக்கு வந்து தன்னை தயார் படுத்திக்கொண்டாள்…
மானிஷா…ரிஷியின் செல்போஃன் நம்பரை சுழற்றினாள்….
சீக்கிரம் சந்திப்பதாகக் கூறி…. விடைபெற்றாள்……
வேகமாக வெளியேறினாள்..வீட்டைவிட்டு… பல முடிவுகளை தன்னிலே சுமந்தவளாய்.…

பரணிக்கு மேல் முச்சு கீழ் முச்சு வாங்கியது…
பக்கத்திலிருந்த மிடிகவுன் இவனை அற்பமாய் பார்ப்பது புரிந்தது…அவளைப் பொருட்படுத்தாது ஓடிச்சென்று தன் அலுமாரியின் லாச்சுகளைத் திறந்தவன் அதிர்ந்தான்…அனைத்து ரிப்போட்டுகளும்…
அடுக்கப்பட்ட நிலைக்கு மாற்றமாக சிதறிக்கிடந்தது

உடனே மானிஷாவின் அறைக்குச் சென்றான்….
விகாரமான புன்னகையுடன் வெளிவந்தவன் தன் வண்டியை ஸ்டார்ட் செய்து….
சாலைக்குள் ஓடவிட்டான்….

                                        தொடரும்.....
                                     நீயே என் சுவாசம் 08

6 comments:

K.s.s.Rajh said...

கதை கிளைமாக்ஸை நெருங்குது போல

Mohamed Faaique said...

ஆஹா... இந்தப் பதிவு ஆக்சன் த்ரில்லர் ஆயிடுச்சு... அடுத்த பதிவு இன்னும் சிவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறேன்..

அர்ஜூனோட கேரக்டர்`தான் புரிய மாட்டேங்குது...

ஆமினா said...

சுவாரசியம் ஏற்றி தந்திருக்கிறீர்கள்............

F.NIHAZA said...

கதையை ரசிச்சு பிண்ணூட்டம் இட்டிருக்கீங்க....
வருகைக்கு மிக்க நன்றி....

நிரூபன் said...

வணக்கம் அக்கா,
நலமா?
கதை விறு விறுப்புடனும், கொஞ்சம் திரிலிங்குடனும் நகர்கிறது.

சமூகத்தில் எயிட்ஸ் நோயினை வாங்கிய ஒருவன் அதனை மறைத்து செய்யும் தில்லு முல்லுகளையும் நாசூக்காக சொல்லியவாறு கதை நகர்கிறது.

அடுத்த பாகத்தில் மீட் பண்றேன்.

F.NIHAZA said...

என்ன செய்ய...நிரூபன்.... நாசூக்காகச்சொல்லத்தான் முடிகிறது....பெண் பதிவர் எனும் போது....எத்தனையோ விடயங்களை கருத்தில்கொள்ள வேண்டியிருக்கே.....