Thursday, October 13, 2011

நீயே என் சுவாசம் 08

அத்தியாயம் 08

போக்குவரத்தும் சன நெருக்கடியும் குறைந்த சாலை ஓரம்.அந்த வெள்ளை நிற டொயோட்டா நிறுத்தப்பட்டிருந்தது…
அதிலிருந்து மானிஷாவின் மெல்லிய விசும்பல் சன்னமாகக் கேட்டது.
“ எனக்குப் பயமா இருக்கு ரிஷி….” விசும்பினாள் மானிஷா.

“ மானிஷா நான் உங்களை லவ் பண்றேன்….யார் என்ன சொன்னாலும் உங்க மேலவெச்ச அன்பில் மாற்றங்கள் வந்துபோகாது….என்கிட்ட வந்துட்டீங்க….இனி உங்களுக்கு ஆருதலா இருப்பேன் மானிஷா…”அவளது தளிர்க்கரம் பற்றி……ஆறுதல் கூறினான் ரிஷி.

“ரிஷி இந்தக் கொஞ்சநாள் பழக்கத்தில்…என்னைப்பற்றி உங்களுக்கு என்னதெரியும்….ட்ரெயினிங் முடிஞ்சு இப்பதானே சேர்ந்திருக்கேன்…”

“ இது என்ன கேள்வி மானிஷா….ஒருவரின் நடத்தைன்றது….அந்த நபரின் அடிப்படைக் குணவியல்புகளால உருவாகிறது…அது போலியா இருந்தால் …எல்லா நேரமும் எல்லா சந்தர்ப்பத்துலயும் ஒரேமாதிரி நிலைச்சிருக்க முடியாது….…ஏதாவது ஒன்று அவர்களின் சுயருபத்தை  காட்டிக் கொடுத்துவிடும்….ஆனால்….என் மானிஷா எப்பவும் மானிஷாவாகத்தான் இருந்திருக்கா…என்ன நான் சொல்றது…சரிதானே…”

இருக்கையில் சாய்ந்து… மெல்லக் கண்களை மூடினாள்….மானிஷாவைப் பார்க்கையில் பாவமாக இருந்தது ரிஷியிற்கு….
மெதுவாய் காரை முன்னோக்கி நகர விட்டான்….பாதை பிரிந்து ஹைவேயில் தொடர்ந்தது…
அவர்களது வண்டி ப்ளாஸா கோனரை அன்மிக்கவும்….

“ரிஷி….நான் இங்க இரங்கியாகனும்….முக்கியமான ஒரு ஃபிரண்டை சந்திக்கனும்….”

“ “துணைக்கு நானும் வரட்டா மானிஷா…..”

“வேணாம் ரிஷி…அவசியப்படாதுன்னு நெனக்கிறேன்…என்ன நடக்குதுன்னு இதுவறை நீங்களா என்கிட்ட எதுவும் கேட்டதில்லை…அது உங்க கள்ளமற்ற மனச பிரதிபளிக்குது… இனிமே அப்படி கேட்கிற நிலமைக்கு  இடம் வைக்காமல் என் காதலைப் புரியவைப்பேன்…  நல்லதே நடக்குமென்று நம்புவோம்…  இனிமே நமக்குள்ள எந்த ஒளிவுமறைவும் இருக்கப் போறதில்லை….”

“ என்ன மானிஷா…இன்னிக்கு இப்படி தத்துவமெல்லாம் பேசுறீங்க…கலங்கடிக்குற சோகம் வந்தால் இப்படித்தான் பேசுவாங்களோ….”

“ என்னை ரொம்ப நல்லா புரிஞ்சு வெச்சிருக்கீங்களே…”

“ புரிஞ்சு எந்தப் பயனுமில்லையே….உங்க சோகத்துல பங்கெடுக்க…நீங்க வாயைத்திறந்து ஒன்றும் சொல்ல மாட்டேங்குறீங்களே…. முடியலை மானிஷா….”

“நான் தொடக்கிவெச்சது…இதை நான்தான் முடிவுக்கு கொண்டுவரணும்… அதான் சொன்னேனே….ரிஷி….இனிமே நமக்குள்ள இப்படியொரு நிலமை வர விடமாட்டேன்…அதுக்காகத்தான் இந்தக் கஷ்டங்களை பொறுத்துக்கிறேன்….”

 “ மானிஷா…எனக்கென்னவோ…இது சரியாகப்படலை….”

தன் கைப்பையை மறந்து….காரைவிட்டிரங்கினாள் மானிஷா.கார் கண்ணாடியை கீழிறக்கினான் ரிஷி….குனிந்து ரிஷியைப் பார்த்து

 “ இல்ல ரிஷி….நீங்க போங்க…இனி எல்லாம் நல்லதே நடக்கும்….ஈவினிங் ஸிக்சுக்கெல்லாம் நான் வந்திடுவேன்….பயப்படாம இருங்க….”

மானிஷா கூறிவிட்டு ரிஷியின் பதிலுக்குக் காத்திருக்காமல் பளிச்சிடும் ப்ளாஸா கோனருள் நுழைந்தாள்….ஒரு சோடிக் கண் அவர்களை பழிவாங்கும் வெறியுடன் நோட்டமிட்டதகை் காணுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை….

ரிஷி சிவப்பு நிற சிக்னலில் சில நிமிடங்களைக் கரைத்து…யூ டேர்னில் திரும்பி வரும்போது….ப்ளாஸா கோனர் முன் அர்ஜுனும் மானிஷாவும்…சைகைகளால் ஏதோ காரசாரமாக பேசிக் கொள்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக விளங்கிற்று…என்னசெய்வதென்று ரிஷியிற்குப் புரியவில்லை….மானிஷாவின் பேச்சை மதிக்காது அவர்களைப் பின் தொடருவது நாகரிகமாகப் படவில்லை ரிஷியிற்கு….மலைபோன்ற கணமான சோகத்தோடு….தனது வண்டியை வீடு நோக்கி நகரவிட்டான்

                                                 தொடரும்... 

                                                நீயே என் சுவாசம் 09

6 comments:

Mohamed Faaique said...

எப்படியோ தெரியல... ஒவ்வொரு பதிவுலும் எப்படியாலும் குழப்பி விட்டுர்ரீங்க...

Mohamed Faaique said...

இனி.. அடுத்த பதிவு வர வெயிட் பன்னனுமே....

K.s.s.Rajh said...

சுவாரஸ்யம் அடுத்த பகுதியில் என்ன நடக்கும் என்று ஆவலுடன் வெயிட்டிங் அக்கா

F.NIHAZA said...

அடுத்தவர்களை குழப்பிப் பார்ப்பதில் ஒரு சின்ன திருப்தி....

அப்படியெல்லாம் இல்லை....கதை சுவாரசியத்திற்குத்தான்...இப்படி குழப்பிவிட்றேன்....

வருகைக்கு மிக்க நன்றி....

நிரூபன் said...

இனிய கலை வணக்கம் அக்கா,

பட்டெனப் பத்திக் கொள்ளும் காதலும், அதனூடே ஏற்படும் நம்பிக்கையும், அவர்களை யாரோ பின் தொடர்வதாக சொல்லும் திரிலிங்கும் இப் பதிவிற்கு அழகு சேர்த்திருக்கிறது.

அடுத்த பாகத்தில் மர்மங்கள் அவிழும் எனும் நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

F.NIHAZA said...

மர்மங்கள் நிச்சயம் திரை விழகும்....
வருகைக்கு மிக்க நன்றி....