Monday, October 17, 2011

நீயே என் சுவாசம் 09

அத்தியாயம் 09

 இருப்புக்கொள்ளவில்லை ரிஷியிற்கு…மணி ஆறைத்தாண்டிவிட்டது….இன்னும் மானிஷாவைக்காணவில்லை.குட்டிபோட்ட பூனைமாதிரி குறுக்கும் நெடுக்குமாக நடந்து வராண்டாவை அளந்துகொண்டிருந்தான்…அவளது கையடக்கத் தொலைபேசிக்கு முயற்சித்தான் …

“ரிங் போகுது…ஏன் ஆன்ஸர் பண்றாளில்லை…”முணுமுணுத்தவன்

 ஸோஃபாவில் அமர்ந்து பத்திரிகைகளைப் புரட்டினான்….மனம் ஒட்டவில்லை எதிலும்..
அவனது விழிகள் முன் கதவிலும் கடிகாரத்திலும்…தாவித்தாவியே கலைத்துப்போய்…இளைப்பாரத்துவங்கியது… தன்னை அறியாமலேயே உறங்கிட்ட ரிஷி…எழுந்துபார்த்தான் என்ன ஆச்சரியம் மணி காலை நான்கு என்பதை …சந்தேகமின்றி கடிகாரம் சுட்டிக்காட்டியது.திடுக்கிட்டான் ரிஷி….மானிஷா வந்துபோனதற்கான எந்தவித அடையாளமும் இருக்கவில்லை.பதரிய ரிஷி குளியலுக்காக ஓரிரு நிமிடங்களை செலவிட்டு பின் டீ சேர்ட் பேன்ட் இற்கு மாறினான்.
முன் கூடத்தில் தொலைபேசி மணி அடிக்கவும்….பதறிப்போய் பற்றிக்கொண்டான்

“ ஹலோ….மானிஷா….எங்க இருக்கே….ஏன் வரலை…” வார்த்தையில் பரபரப்பு

“  ரிஷி நீங்கதானா..?”

“ ஆமாம் நீங்க…” எதிர்முனையில் ஒரு கரகரத்த குரல்…. ரிஷியின் வார்த்தைகளில் ஒரு தெளிவின்மை தெரிந்தது

“ நான் இன்ஸ்பெக்டர் பாலாஜி…..மானிஷா என்கிறது…யாருன்னு தெரிஞ்சுக்கலாமா….”

“நான் கட்டிக்கப்போற பொண்ணுதான் மானிஷா …ஏன் இன்ஸ்பெக்டர்….ஏதாச்சும் பிரச்சனையா….”
“ஸொரி மிஸ்டர்…..சின்ன எக்சிடன்ட்…அந்தப்  பெண்ணின் மொபைலுக்கு கடைசியா கோல் பண்ணி இருப்பது நீங்கள்தான்… அதான் கோல் பண்ணினேன்….கண்போஃம் பண்ணிக்க ஜெனரல் ஹொஸ்பிடல்க்கு  வர வேண்டிஇருக்கும்….“

“வர்றேன் இன்ஸ்பெக்டர்….” கூறி முடிக்கையில்…..உலகமே சுழல்வதாய் உணர்ந்தான்….

“மிஸ்டர் ரிஷி….விபத்துக்குக் காரணமானவன் தப்பிச்சிட்டான்…..வேணுமென்று இடிச்சிட்டு தப்பிட்டதாகத்தான் எக்ஸிடன்ட்டை நேரில் பார்த்தவங்க சொல்லுறாங்க….அந்த வண்டிக்கும் நிறைய சேதம் ஏற்பட்டிருக்கலாம்…நிச்சயமா  அவன் தப்பிக்க வழி இல்லை….பக்கத்து ஹொஸ்பிடல்ஸ்….ஹெல்த் ஸென்டர்…எல்லாமே செக்பண்ணிட்டிருக்கோம்…நீங்க….சந்தேகப்படும்படியா யாராச்சும் இருக்காங்களா….”

அப்படியே இருக்கையில் அமர்ந்தவனுக்கு…சுற்றுப்புற சூழல் இருளக்கண்டான்….

“ இல்..லை…இல்லை ”

“ ஓக்கே..சீக்கிரம் சந்திக்கலாம்…”தொடர்பு துண்டிக்க…தொண்டையின் வரட்சியை உணர்ந்தான்….மெல்ல எழுந்து….ஃபிரிஜ்ஜைத்திறந்து ஜில்லென்ற தண்ணீர் போத்தலை எடுத்து மடமடவென்று அருந்தினான்…பின் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.
“ இது நிச்சயமா அர்ஜுனின் வேலையாகத்தானிருக்கும்….இனியும் தாமதிக்கக்கூடாது…நட்பையே கலங்கப்படுத்திட்டான் பாவி….. அர்ஜுனுக்கு அலைப்பை ஏற்படுத்தினான்…..“ நொட் ரீச்சபல்….” என்றது…..மொத்த சந்தேகமும் அர்ஜுனின் மேல் பதிந்தது…

“ கன்போஃமா இவன்தான்…எங்க தப்பிச்சிட்டானோ….வீட்டுக்குப் போனால் ஏதாச்சும் தடயம் கிடைக்கும்….”உடனே அர்ஜுனின் வீட்டை அடைந்தன் ரிஷி…..

“ பாட்டி அர்ஜுன் இருக்கானா….”

“ இல்லையேப்பா….நேற்று போனவன் இன்னும் வீடு திரும்பலை…..“
எக்ஸிடன்ட்டைப் பண்ணிட்டு எப்படி வீட்டுக்கு வருவான்….மனதுக்குள் புலம்பினான்

“என்னப்பா நீயா ஏதோ பேசிக்குறே….”

“இல்லைபாட்டி….நான் அர்ஜுனுக்கு ஒரு ஃபைல் கொடுத்திருந்தேன்….அது இப்ப எனக்குத் தேவைப்படுது….அதான் எப்படி எடுக்குறதுன்னு யோசிக்கிறேன்…” ஒரு பொய்யை கஷ்டப்பட்டு அவிழ்த்துவிட்டான்

“இதுல யோசிக்க என்ன இருக்கு… அவன்ட ரூமுக்குப் போயி நீயே தேடி எடுத்துக்க….”

“ சரி பாட்டி…”பாட்டி சொன்னதுதான் தாமதம் அவசர அவசரமாய் தேடுதல் வேட்டையில் இறங்கினான் ரிஷி….

ஒன்றும் தட்டுப்படவில்லை….அந்த போஃட்டோ உற்பட.சோர்ந்து போனான் ரிஷி….இதற்குமேல் என்ன செய்யப்போகிறோமென்று துளியும் புரியவில்லை…..

அங்கே மானிஷா என்ன பாடோ….கவலை வேறு அவனை வருத்த…. அர்ஜுனின் மேல் கட்டுக்கடங்காத கோபம் பீரிட்டது….ஒட்டுமொத்த கோபத்தையும் அடக்க முடியாமல்….கட்டிலில் இருந்த தலையணையை எடுத்து சுவற்றுக்கு நேரே வீசி…தனது கோபத்தை குறைத்துக்கொண்டான்…

தலையணைக்கு கீழிருந்த டயரியும் பேனாவும் சுவற்றில் பட்டுத் தெரித்து ரிஷியின் காலருகே வந்து விழுந்தது…..
குனிந்து எடுத்தான் …பிரித்தான் …அது அர்ஜுனின் டயரி….முகம் மலர….ஒவ்வொரு பக்கமாய் பிரித்து வாசித்தான்…..அதிர்ந்தன்…..

டயரியில்…..

                                                தொடரும்....
                                               நீயே என் சுவாசம் 10

8 comments:

மகேந்திரன் said...

தமிழ்மணம் இணைத்து ஓட்டும் போட்டாச்சு சகோதரி.

மகேந்திரன் said...

மூச்சிரைக்காமல் போகிறது சுவாசம்...

K.s.s.Rajh said...

சுவாசம் சுவாசிக்கத்தொடங்கிவிட்டது போல

நிரூபன் said...

வணக்கம் அக்கா, நலமா?

குட்டிகோட்ட பூனைமாதிரி குறுக்கும் நெடுக்குமாக நடந்து வராண்டாவை அளந்துகொண்டிருந்தான்…அவளது கையடக்கத் தொலைபேசிக்கு முயற்சித்தான் …//

இங்கே குட்டி போட்ட பூனை என்று வந்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா?

நிரூபன் said...

திரிலிங்கோடு, கொலையாளியைத் தேடும் பட படத்த ரிஷியின் உணர்வுகளை வெளிப்படுத்தியவாறு கதை நக்ர்கிறது.

Mohamed Faaique said...

//கன்போஃமா இவன்தான்…எங்க தப்பிச்சிட்டானோ….வீட்டுக்குப் போனால் ஏதாச்சும் தடயம் கிடைக்கும்….”உடனே அர்ஜுனின் வீட்டை அடைந்தன் ரிஷி…..

“ பாட்டி ரிஷி இருக்கானா….”///

இந்த வரிகள் சரியா????

Mohamed Faaique said...

தமிழ் மண சண்டைல உங்க ப்லாக் படிக்க முடியல.. கதை எக்ஸ்பரஸ் வேகத்துல போகுதே!!! இந்த வாரம் சுவரஸியமும் எதிர் பார்ப்பும் கூடி இருக்கு..

F.NIHAZA said...

வஐக தந்த அனைவருக்கும் மிக்க நன்றி....

எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டிய தம்பி நிரூபன்.பாயிக் இற்கு மிக மிக நன்றி....