Saturday, August 13, 2011

வேண்டாம் இந்தக் கோபம்

இதயத்தின் ஆணிவேரை
ஆட்டம் காண்பிக்கும்
இந்தப் பொல்லாத கோபம்
வேண்டாமே…

பழிக்குப்ப்ழி என்கிற
அறியாமையை
அறிவுடைமையென
எண்ணுகின்ற
பாமரர்களின்
உள்ளங்கைளத்தான்
அச்சகதித் துர்க்குணம்
சீரழித்துச் சின்னாபின்னமாக்கும்

கோபக்கனி
கொந்தழிக்கும் போதுகளில்தான்
ஷாத்தானின் குணங்கள்
தாண்டவமாடத்
தருணம் பார்க்கும்…

சினங்கொண்டோரின் நா
அடங்காது
நெறிகெட்ட வார்த்தைகளை
அபிஷேகிக்கும் இழி நிலைக்கு
உந்தப்படுவாய்….

நிதானம் துறந்து
மதியிழக்க வேண்டுமா…
அக்கினித்தடாகத்தில்
விழ வேண்டுமா….
ஈமானிய ஒளி
சூரையாடப்பட வேண்டுமா…
நீ தாரலமாய்
கோபப்படு….
 
ரப்பின் கடும் கோபம்
உனை
சுட்டெரிக்கட்டும்
நீ கோபப்படு…

எண்ணற்ற தீமைகளை
சுவைக்கத்தோன்றும்
நீ கோபப்படு….

கோபம் பகுத்தறிவின்
விரோதியாம்
பொன்மொழி அறிந்ததில்லையா….

கோபத்தை
நெறிப்படுத்துபவன்
சிறந்த வீரனாம்
தெரிந்ததில்லையா….

கோபச்சுடரை தன்னுள்
அனைப்பவனின் மானம்
காப்பானாம் ரப்பு
உணர்ந்ததே இல்லையா…

கோபத்தை அழித்துவிடு
இல்லையேல் பலகீனப்படுத்து
பலகீனத்தை இதயம்
இயல்பாய்
ஒதுக்கித்தள்ளும்…

முடியவில்லையா….
உடனே வுழூ செய்துகொள்
கோப நெருப்பை வுழூ
அணைத்துவிடும்…

கோபம் முகாமிடும் பொழுதுகளில்
வாய்முடி மௌனியாகு…

கோபத்தை அடக்கிக்கொண்டால்
இறைவன்
தண்டணையை
அடக்கிக்கொள்கிறானாம்….

இத்தனை தெறிந்தும்
வேண்டுமா இந்தக் கோபம்….

இதயத்தின் ஆணிவேரை
ஆட்டம் காண்பிக்கும்
இந்தப் பொல்லாத கோபம்
வேண்டாமே…

பழிக்குப்ப்ழி என்கிற
அறியாமையை
அறிவுடைமையென
எண்ணுகின்ற
பாமரர்களின்
உள்ளங்கைளத்தான்
அச்சகதித் துர்க்குணம்
சீரழித்துச் சின்னாபின்னமாக்கும்

கோபக்கனி
கொந்தழிக்கும் போதுகளில்தான்
ஷாத்தானின் குணங்கள்
தாண்டவமாடத்
தருணம் பார்க்கும்…

சினங்கொண்டோரின் நா
அடங்காது
நெறிகெட்ட வார்த்தைகளை
அபிஷேகிக்கும் இழி நிலைக்கு
உந்தப்படுவாய்….

நிதானம் துறந்து
மதியிழக்க வேண்டுமா…
அக்கினித்தடாகத்தில்
விழ வேண்டுமா….
ஈமானிய ஒளி
சூரையாடப்பட வேண்டுமா…
நீ தாரலமாய்
கோபப்படு….
 
ரப்பின் கடும் கோபம்
உனை
சுட்டெரிக்கட்டும்
நீ கோபப்படு…

எண்ணற்ற தீமைகளை
சுவைக்கத்தோன்றும்
நீ கோபப்படு….

கோபம் பகுத்தறிவின்
விரோதியாம்
பொன்மொழி அறிந்ததில்லையா….

கோபத்தை
நெறிப்படுத்துபவன்
சிறந்த வீரனாம்
தெரிந்ததில்லையா….

கோபச்சுடரை தன்னுள்
அனைப்பவனின் மானம்
காப்பானாம் ரப்பு
உணர்ந்ததே இல்லையா…

கோபத்தை அழித்துவிடு
இல்லையேல் பலகீனப்படுத்து
பலகீனத்தை இதயம்
இயல்பாய்
ஒதுக்கித்தள்ளும்…

முடியவில்லையா….
உடனே வுழூ செய்துகொள்
கோப நெருப்பை வுழூ
அணைத்துவிடும்…

கோபம் முகாமிடும் பொழுதுகளில்
வாய்முடி மௌனியாகு…

கோபத்தை அடக்கிக்கொண்டால்
இறைவன்
தண்டணையை
அடக்கிக்கொள்கிறானாம்….

இத்தனை தெறிந்தும்
வேண்டுமா இந்தக் கோபம்….

Thursday, August 11, 2011

நீ நானாகும் தருணம்

நீ ஏன்

நீங்கிப்போனாய்….!!!
நீ
நானாகும் தருணம்
அதோ அந்த
மைல்கல் தூரம்தான்….

எட்டிப்பிடிக்கும் தூரத்தில்
நீ
தூரவாகிப்போன
துயரம்
தொண்டைக்குள்
சிக்கிக்கொள்ளும்…

முன் பனி இரவுகளில்
எனை போர்த்திய
உன்
கம்பளி நினைவுகள்
இதயத்தை நெருட
இதோ…!!!
என்னில் புல்லரிப்பு
இன்னும் மறைவதாயில்லை…

மௌனம் அடங்கிய
பௌர்ணமி இரவுகளில்
என் பேனா கிறுக்கும்
ஒவ்வொரு வரியிலும்
உன்
மூச்சுக்காற்றின் சூடு
என்னை தகிக்க வைக்கும்…

மெத்தென்ற இதழ்களால்
பூபாளம் தொடங்கி
குத்துகின்ற முற்களால்
முகாரியை ஏனடி
முடிவுரையாக்கினாய்…

உன் நினைவுகொண்டு
நெருப்பு மூட்டி
குளிர் காய்ந்து கொண்டும்…

என்னை நானே
ஒளித்தொகுப்பு செய்துகொண்டும்
அவஸ்தையுமான
என் நாட்களை
கஷ்டப்பட்டு நகர்த்துகின்றேன்…

நகர்கின்ற நாட்களுக்கு
இத்தனை விஷப்பற்களா
பார் !!!
என் தேகமெங்கிலும்
சல்லடைபோட்டு
சலித்தெடுத்த
வடுக்களோடும்…
உன் நினைவுகளோடும்
மரணப்படுக்கைகயில்…

நீ ஏன்

நீங்கிப்போனாய்….!!!
நீ
நானாகும் தருணம்
அதோ அந்த
மைல்கல் தூரம்தான்….

எட்டிப்பிடிக்கும் தூரத்தில்
நீ
தூரவாகிப்போன
துயரம்
தொண்டைக்குள்
சிக்கிக்கொள்ளும்…

முன் பனி இரவுகளில்
எனை போர்த்திய
உன்
கம்பளி நினைவுகள்
இதயத்தை நெருட
இதோ…!!!
என்னில் புல்லரிப்பு
இன்னும் மறைவதாயில்லை…

மௌனம் அடங்கிய
பௌர்ணமி இரவுகளில்
என் பேனா கிறுக்கும்
ஒவ்வொரு வரியிலும்
உன்
மூச்சுக்காற்றின் சூடு
என்னை தகிக்க வைக்கும்…

மெத்தென்ற இதழ்களால்
பூபாளம் தொடங்கி
குத்துகின்ற முற்களால்
முகாரியை ஏனடி
முடிவுரையாக்கினாய்…

உன் நினைவுகொண்டு
நெருப்பு மூட்டி
குளிர் காய்ந்து கொண்டும்…

என்னை நானே
ஒளித்தொகுப்பு செய்துகொண்டும்
அவஸ்தையுமான
என் நாட்களை
கஷ்டப்பட்டு நகர்த்துகின்றேன்…

நகர்கின்ற நாட்களுக்கு
இத்தனை விஷப்பற்களா
பார் !!!
என் தேகமெங்கிலும்
சல்லடைபோட்டு
சலித்தெடுத்த
வடுக்களோடும்…
உன் நினைவுகளோடும்
மரணப்படுக்கைகயில்…

எனக்கொரு குழந்தை வேண்டும்

என் நெஞ்சக் குளத்தில்
நீராட…
என் இதயச்சிறகு
படபடக்க…
எனக்கொரு குழந்தை வேண்டும்

என் மார்மீது
தூக்கிப்போட்டு
தாளாட்டுப்பாட…
நான் போடும்
ஆடையை அழுக்காக்க…
செல்லமாய் எனை
சீண்டிக்கொள்ள…
எனக்கொரு குழந்தை வேண்டும்

என் கோபச்சுடரை
கொஞ்சம் பற்றவைக்க…
பால் முகம் பார்த்து
நான் பசிமறக்க…
எனக்கொரு குழந்தை வேண்டும்

மௌனம் குழையா வீடு
சப்திக்க…
அடுக்கிவைத்த அழகுப்பொருள்
எடுத்துப்போட…
வாரி முடிந்த கூந்தல்
சிலுப்பிவிட…
எனக்கொரு குழந்தை வேண்டும்

நான் கொஞ்சமாய்
அதட்ட..
அழுகைச்சத்தம்
வீட்டினில் தவழ…
என்னவன் எனைமிரட்ட…
வீடு ரெண்டாக…
எனக்கொரு குழந்தை வேண்டும்

அம்மா !!!
என்ரெனை அழைத்து…
கட்டியெனை இழுத்து…
அழுத்தம் அழுத்தமாய்
முத்தம் பதிக்க…
பால்பற்களால்
பல் பதிக்க…
எனக்கொரு குழந்தை வேண்டும்

பிஞ்சுக் கரங்கலால்
எனை காயப்படுத்த…
தங்கக் கைபிடித்து
என் இதழ் பதிக்க…
என் ஆத்மாவின் தாகம்
தீர்ப்பதற்கு…
எனக்கொரு குழந்தை வேண்டும்

கலைந்துபோன சுவடுகளை…
தொலைந்துபோன தடங்களை…
மீண்டும் பதிக்க
உதிர்ந்துபோன ஆனந்தங்கள்
திரும்பவும் எனை
தழுவிக்கொள்ள…
என்னவனின் வாரிசாய்…
எனக்கொரு குழந்தை வேண்டும்

என் நெஞ்சக் குளத்தில்
நீராட…
என் இதயச்சிறகு
படபடக்க…
எனக்கொரு குழந்தை வேண்டும்

என் மார்மீது
தூக்கிப்போட்டு
தாளாட்டுப்பாட…
நான் போடும்
ஆடையை அழுக்காக்க…
செல்லமாய் எனை
சீண்டிக்கொள்ள…
எனக்கொரு குழந்தை வேண்டும்

என் கோபச்சுடரை
கொஞ்சம் பற்றவைக்க…
பால் முகம் பார்த்து
நான் பசிமறக்க…
எனக்கொரு குழந்தை வேண்டும்

மௌனம் குழையா வீடு
சப்திக்க…
அடுக்கிவைத்த அழகுப்பொருள்
எடுத்துப்போட…
வாரி முடிந்த கூந்தல்
சிலுப்பிவிட…
எனக்கொரு குழந்தை வேண்டும்

நான் கொஞ்சமாய்
அதட்ட..
அழுகைச்சத்தம்
வீட்டினில் தவழ…
என்னவன் எனைமிரட்ட…
வீடு ரெண்டாக…
எனக்கொரு குழந்தை வேண்டும்

அம்மா !!!
என்ரெனை அழைத்து…
கட்டியெனை இழுத்து…
அழுத்தம் அழுத்தமாய்
முத்தம் பதிக்க…
பால்பற்களால்
பல் பதிக்க…
எனக்கொரு குழந்தை வேண்டும்

பிஞ்சுக் கரங்கலால்
எனை காயப்படுத்த…
தங்கக் கைபிடித்து
என் இதழ் பதிக்க…
என் ஆத்மாவின் தாகம்
தீர்ப்பதற்கு…
எனக்கொரு குழந்தை வேண்டும்

கலைந்துபோன சுவடுகளை…
தொலைந்துபோன தடங்களை…
மீண்டும் பதிக்க
உதிர்ந்துபோன ஆனந்தங்கள்
திரும்பவும் எனை
தழுவிக்கொள்ள…
என்னவனின் வாரிசாய்…
எனக்கொரு குழந்தை வேண்டும்

Tuesday, August 9, 2011

Monday, August 8, 2011

என் கவிதை

 wednesday, 03 rd Augest 2011  கட்டாரில் பதிப்பாகும் வீரகேசரி பத்திரிகை  கவிச்சோலை பகுதியில் பிரசுரமான என் கவிதை
   
Sunday, August 7, 2011

கொஞ்சவா தென்றலே….

டேய் ஆகாஷ் …அம்மாகிட்ட ஓடிவாடா……சீக்கிரம் வாடா கண்ணா…” 
அழைத்த பவானி, கொஞ்சும் மழழையுடன் ஓடிவந்த ஆகாஷைத் தூக்கியணைத்து முத்தமிட்டாள்.
”என்னடா செல்லம் இது… உடம்புபூரா அழுக்கா இருக்கே…ட்ரெஸ்ஸைப்பாரு கலரெல்லாம் பூசிக்கிட்டு…என்னடா கோலமிது…ஒழுங்கா பண்ணக்கூடாதா…?” 
பவானி செல்லமாய்த்திட்ட ,
 ”இல்லம்மா..இனிமே…ட்ரெஸ்ஸெல்லாம் அழுக்காக்க மாட்டேன்…நீ சொன்னதெல்லாம் கேட்டுக்குறேன்.ஆகாஷ் நோட்டி போய் இல்லம்மா…”
ஆகாஷ் தன் பெரிய கருவிழிகளை உருட்டிக்கொண்டே பவானியின் கன்னத்தில் தன் பிஞ்சு இதழ்களைப் பதித்தான்.
பவானியின் கண்கள் ஆனந்தக் கண்ணீரைச் சொறிந்தன.
  சரிடா… என்னிக்குமே நீதான் என் உசுரு…இப்ப நாம போய் வொஷ்பண்ணிட்டு வந்துடுவோம்…அப்பா வந்தால்…திட்டுவாங்கவேண்டியதுதான்..” 
சேலைத் தலைப்பை இடுப்பில் சொருகிக்கொண்ட பவானி துண்டை தோளிலும் ஆகாஷை இடுப்பிலும் சுமந்து குளியலரைக்குள் நுழைந்தாள்.
ஆகாசுக்கென்று வாங்கிய ஆடைகளை அணிவித்து அழுகு பார்த்தாள்.அவனின் குறும்புச்சேட்டைகளை ரசித்துப் பூர்த்துப்போனாள் பவானி் .
”கண்ணா…நீ என் கன்னுக்குட்டியில்ல…இந்த ஸோபாவில் உட்காந்து பேசாம கார்டூண் பாரு..நான் கிச்சனுக்குப் போய் உனக்கு  நூட்ல்ஸ் போட்டுட்டு வறேன்…”
ஆகாஷை அமர்த்திவிட்டு சமையலரைக்குள் நுழைந்தாள் பவானி.
      நூட்ல்ஸ் உடன் வந்த பவானி்…
.”என்னடா ஆகாஷ்…நான் என்ன சொன்னேன்…இந்த ஸ்டோர் ரூம்கிட்ட நீ என்ன பண்றே…நேத்துக்கூட சொன்னேன்…இந்த ரூம் பக்கம் வராதேன்னு..இந்த ரூம்ல எல்லாமே அழுக்குடா…கொக்ரோஜ் கூட நெரய இருக்கு…” 
கூறியவாறே…ஆகாஷைத்தூக்கி வந்து இருக்கையில் அமர்த்தி உணவை ஊட்டினாள்…
” எனக்கு நூட்ல்ஸ் வேணாம்மா…நான் இந்த எப்பளை சாப்பிடட்டா…”
 கேட்டவாறே நறுக்கிய ஆப்பிள் துண்டங்களிலிருந்து ஒன்றை எடுத்து வாயில் போடப்போனான் ஆகாஷ்.
கையிலிருந்த தட்டைப்பார்த்ததும் பதறினாள் பவானி்…
”என்னடா கெட்ட பழக்கமிது…இத எப்படிடா  நீ எடுத்துத்தொலச்சே…“ 
கோபம் கொப்புழிக்க கையிலிருந்த தட்டை தட்டிப் பறித்தாள்…வாயறுகே கொண்டுபோன  சிறிய துண்டங்களை அவசர அவசரமாய் தட்டிவிட்டாள்…
இதை சற்றும் எதிர்பாராத ஆகாஷ் பயந்துவிட்டான்.ஆத்திரம் பொறுக்காது வீரிட்டு அழுதான்.
       எதேர்ச்சையாய் அங்கு வந்த மரகதம் பதறியே போனாள்… ஏற்கனவே வெறுப்பை உமிழ்ந்துகொண்டிருந்த மரகதமும் இதுவே தருணனமென்று…திட்டித்தீர்தாள் பவானியை.
  என்னடி அப்படிப்பண்ணிட்டே…எம்பேரனுக்கு என்னடி கொறச்சல்…போயும் போயும் ஒரு எப்பளுக்காக இவன அழ வெச்சிட்டியேடி…இவங்கம்மாகிட்ட …...அதான்டி எம்மருமவள்கிட்ட …. படிச்சிப்படிச்சி.சொன்னேன் .கேட்டாளா அந்தப்பாவி மக…”
கரித்துக்டிகாட்டினாள் மரகதம்
பவானியால் பேசக்கூட முடியவில்லைதுக்கம் தொண்டையை அடைக்க…
” இல்லைங்க…நான் தப்பானவ இல்லை..என்னை.. புரிஞ்சிக்கொங்க…”
திக்கித்திணறினாள். இந்தக்கலவரத்தில் ஆகாஷின் அழுகையும் தீவிரமானது.மரகதம் இன்னும் பேயாடினாள்
“ என்னடி நாடகமா ஆடுறாய்…போதும் உன் நீலிக்கண்ணீர்….ஏமாத்தப்பார்க்குறியா…உங்களவிட எம்மகனுக்கு சம்பாத்தியமும் சொத்தும் குறைவா இருக்கலாம்…ஆனா..திங்கக்குடிக்க இல்லாம அல்லல் படலை…ஏம்புள்ள இவனை அப்படி வளர்க்வுமில்லை…இவன் உன்னை அம்மான்னு கூப்பிட்டா நீ அம்மா ஆயிடுவியா..? மலடிக்கெங்கடி மாங்காய்ட ருசி தெரியும்…முன்னப்பின்ன நீயும் ஒரு கொழந்தய பெத்திருந்தாதானே அருமை தெரியும்..பக்கத்துவீட்டு கொழந்ததானேன்னு அழவெச்சிப்பார்த்தியாக்கும்…”
காரி உமிழ்ந்தாள் மரகதம்.
“ ஐயோ மாமி… நீங்க என்னை …என்னை…தப்பா…”
 பவானி கூறிமுடிக்கவில்லை…
 ” என்ன பவானி…என்ன நடக்குது இங்க…பாரு வீட்டு வாசலை…அக்கம் பக்கத்து ஆட்கள் வந்து வேடிக்கை பார்க்குறதை…மாமி அவ செஞ்ச தப்புக்கு நான் மன்னிப்புக்கேட்டுக்குறேன் எங்களை மன்னிச்சிறுங்க…இப்ப நீங்க கிளம்புங்க மாமி இத பெரிசுபண்ண வேண்டாம்”
ஓபிஸ் விட்டுவந்த ரஞ்சித் மரகதத்திடம் மன்னிப்புக்கேட்டான்.
  அவமானத்தில் தலை குனிந்தாள் பவானி…கட்டுக்கடங்காமல் வந்த அழுகையினூடு ஏதோ சொல்ல வந்த பவானி்ய மரகதம் விடுவதாயில்லை…
  ”ம்கும்…ரோஷம் மட்டும் பொத்துக்கொண்டு வருமே…டேய் ஆகாஷ்…இங்க வாடா.. எல்லாம் உன்னாலதான்…இனிமே..நீ இந்த வீட்டு வாசப்படிய மிதிச்சே…கால் ரெண்டையும் ஒடச்சிடுவேன்…வாடா…” 
    ஆகாஷின் கைகளை இழுத்துக்கொண்டு போனாள் மரகதம்.
ரஞ்சித் பேயறைந்தவன் போலானான்.ஆகாஷ்க்கென்று பார்த்துப்பார்த்து வாங்கிய பொருட்கள் அனைத்தும் கையிலிருந்து நழுவி கீழே சிதறியது.அவனது மனதைப்போன்றே….
 ”போகாதீங்க… நில்லுங்க…நான்…நான்…தப்பானவ இல்லை….” 
வாயில் நுரைதள்ள மயங்கிச்சரிந்தாள் பவானி். கையில்..ஆகாஷ் தின்னமுனைந்த அதே ஆப்பிள் துண்டங்கள்.ரஞ்சித் அதிர்ச்சியில் உறைந்தான்.பதறியடித்து மனைவியைத்தாங்கினான்.பவானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
     சில மணித்தியாலங்களை கஷ்டப்பட்டுகடத்தினான் ரஞ்சித்.அவனை  நெருங்கிய வைத்தியர் .
” .மிஸ்டர் ,உங்க மனைவி ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டா…கடுமையான விசத்தை சாப்பிட்டிருக்கா.….இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன் .இன்னும் கொஞ்சத்துல மயக்கம் தெளிஞ்சிறும் நீங்கபோய் பார்க்கலாம்.”
வைத்தியர் விலக,சுபத்திராவின் அருகே சென்றான் ரஞ்சித்.
   அரை மயக்கத்தில் கூட புலம்பிக்கொண்டே இருந்தாள் பவானி.ரஞ்சித் மெதுவாய் அவளருகே சென்று…அவளது வாடிய முகத்தைக் கைகளில் ஏந்தி கேசங்களை நீவிவிட்டான்
…” என்ன காரியம் பண்ணிட்டே…”
முணுமுணுத்த  ரஞ்சித்தின் கண்ணீர் பவானியின் கன்னங்களை நனைக்க….பவானி மெதுவாய் கண் திறந்தாள்.
   ” என்னங்க…என்னை மன்னிச்சிடுங்க…எனக்கு என்னபண்றதென்றே புரியலை.நான் அவ்வளவு நெஞ்சலுத்தக்காரியா..? நான் அவமானத்தால அழலைங்க.இனிமே ஆகாஷை எங்கவீட்டுக்கு வரவேணாண்டுட்டாங்களே…அதத்தங்க என்னால தாங்கிக்க முடியலை.வெந்த புண்ல வேல் பாச்சுறமாதிரி இருந்திச்சிங்க.எனக்கு என்ன நடந்தாலும் பரவலை.ஆகாஷைப்பிரியிரத நெனச்சிக்கூட பார்க்க ஏலாதுங்க…“ 
விம்மினாள். விசும்பலினூடே…
”இந்த ஏழெட்டு வருஷமா என் வயித்துல ஒரு புலு பூச்சிகூட தங்கலைங்குறது உண்மைதான்.ஆனா…அந்தக்குறை எனக்குத் தெரியலைன்னா அதுக்கு ஆகாஷ்தான் காரணம்.வீட்டை சுத்தி சுத்தி வந்தானே…நீங்க பழக்கி கொடுத்த மாதிரியே நம்மை உரிமையோட கூப்பிடுறானே…அவனுக்காக நான் எதையும் இழக்கத்தயாரா இருக்கேனே…”
பவானி புலம்பவும் ரஞ்சித் உள்ளுக்குள் துடித்துப்போனான்.அவளை ஆசுவாசப்படுத்தும் முயற்சில் தோற்றுப்போனான்.
    உள்ளத்துவேதனையை கொட்டித்தீர்க்கட்டுமென்று மௌனம் காத்தான் ரஞ்சித்

  ”என்னங்க நேற்று ஆகாஷ்கு எப்பள் கட் பண்ணிக் கொடுத்தேன்.அத எடுத்துட்டு ஸ்டோர் ரூம்கு போயிருக்கான் பந்தெடுக்க.பந்தைக் கண்டதும் கொண்டுபோன தட்டை மறந்து வெச்சிட்டு வந்திருக்கான் நேத்து நான் கூட அத கவனிக்கலைங்க…“ விம்மினாள்.
” ஓக்கேடா…மேல சொல்லு…” அது ரஞ்சித்
”இன்னிக்கு … இன்னிக்கு காலைல.. .அந்த ரூம்கு மருந்தடிக்கும் போதுதான் நான் கண்டேன்.எடுத்து வீசனும் என்று நெனச்சேன்..மறந்துட்டேங்க…திரும்ப அத ஆகாஷ்ட கைல பார்த்ததும்…நான் ஆடிப்போய்ட்டேங்க….நான் அப்படி செய்யலைன்னால்…இன்னிக்கு…இந்த கட்டில்ல  ஆகாஷ்தானே படுத்திருப்பான்…அத தாங்கேளுமா நம்மலால…பலியோட நிம்மதியாத்தான் வாழேலுமா…?“விம்மித்தணிந்தது பவானியின் நெஞ்சக்கூடு.
   “ எனக்குத் தெரியும் பவானி நீ தப்பு செஞ்சிருக்க மாட்டாயென்று…அதான் நடந்தது என்ன என்று நீயா சொல்லும் வரை இருந்தேன்….நான் மரகதத்தைப் பற்றி கவலை படலை…  உன் தோழி சுபத்திராதான் என்னசொல்லிடுவாளோன்னு பயமா இருக்கு…“
மரகதத்தின் பேச்சைக்கேட்டு ஒரு கை பார்க்கலாமென்று வந்த ஆகாஷின் தாய் சுபத்திரா…உள்ளே…இருவரும் பேசப்பேச உரைந்து தெளிந்தது போனாள்.
  ஆகாஷ் உள்ளபோடா…உனக்கு உண்மையான பாசத்தைக் காட்டுறவங்க உள்ளதானிருக்காங்க..”உள்ளே அனுப்பிவிட்டு குற்ற உண்ர்ச்சியோடு வெளியே காத்திருந்தாள் சுபத்திரா…
 
 யாவும் கற்பனை