அத்தியாயம் 06
“ என்னடா ரிஷி….இப்படி சீக்கிரமா மீட் பண்ண என்னடா காரணம்….வொய்ஸ் மெயிலைப் பார்த்ததும் அலரி அடிச்சிட்டு ஓடி வந்தேன்…நீ என்னடான்னா…கூலா உக்காந்திட்டு இருக்கே…என்னடா மேட்டர்…”
தோள்களை தட்டியபடியே வந்தமர்ந்தான் அர்ஜுன்
ரிஷி மௌனமாய் கண்களாலேயே… அவனை அளந்தான்….சிறிது நேர மௌனம்…ரிஷியே அந்த மௌனத்தை உடைத்தான்….
“ டேய்….மானிஷா நல்லவளா…கெட்டவளான்னு எனக்குத் தெரியலை..எனக்கு அவளை புடிச்சிருக்கு…அவள் எப்படிப்பட்டவளா அருந்தாலும் எனக்கு ஓக்கே….அவள் இல்லாம நா இல்லைடா….”
“ இப்போ இதை ஏன் என்கிட்ட சொல்றே….”
“நீ என் உயிர் நண்பன்டா….உன்கிட்ட சொல்லாம….எங்க சீஃப் டொக்டர் கிட்வாடா சொல்லச் சொல்லுறே….”
“ அப்போ நான் சொன்னா கேட்பியா…மானிஷாக்கு கல்யாணம் ஆயிடுச்சி…”

ரிஷி கூறவும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான் அர்ஜுன்.
“ சரிடா…இப்ப நீ என்னதான் சொல்ல வர்றே…சொல்லு….பொறுமையா கேட்க நான் தயார்….”
கூறிய ரிஷி அர்ஜுனின் முகத்தை உற்றுப் பார்த்தான்….இருண்டு கருத்திருந்தது….அவனே சொல்லும் வரை ரிஷி தன் மனக்குமுறலை அடக்கியே வாசித்தான்….
“ ம்…சொல்லு அர்ஜுன்…”
“ டேய் ….வேணாம்டா…விட்டுடு….அவள் நல்லவள் இல்லை…அவள் சூழ்ச்சிக்காரி….நம்பவெச்சி ஏமாத்திடுவாடா….”
ரிஷியிற்கு அதிர்ச்யை தாங்க முடியவில்லை. சுதாகரித்துக் கொண்டான்.
“ நீ எதை வெச்சி இப்படி அவளை எடை போடுறே….நீ சொல்றதை நான் எப்படிடா நம்புறது…”
ரிஷியின் கேள்வியிற்கு அர்ஜுனின் விடை மௌனமே…
“ டேய்…என்னடா ஸைலன்ட்….சொல்லுடா…”
பதற்றத்தை வார்த்தையில் சுமத்தவில்லை ரிஷி.
என்றான் கண்கள் குளமாக
தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டான் ரிஷி….அர்ஜுன் தெடர்ந்தான்
“ உன் நண்பன் நான் சொல்றேன்….என்னை நீ நம்பு….என் வாழ்க்கையின் மாற்றத்துக்கு காரணம் அவளேதான்…வாழ்க்கையை இழந்து…காதலை இழந்து…குடும்பத்தை இழந்து நிக்கிறேன் என்றால் காரணம் மானிஷாதான்… அவளை பழிவாங்கத் துடிக்குதுடா மனசு….”
ரிஷி அழைப்பதையோ…தடுப்பதையோ…காதில் வாங்கும் மனநிலையில் இல்லைாமல்…
தனது ஆதங்கத்தையும்…ஆவேசத்தையும்….கொட்டிக்கொண்டிருந்திருந்தான் அர்ஜுன்…
விக்கித்துப்போய் நின்றான் ரிஷி……
8 comments:
குழப்ப நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கும் ரிஷியின் மன உணர்வுகளையும், அவனைத் தேற்றி ஆதரவாய் அவன் மனதினுள் இருக்கும் மானிஷா பற்றிய விம்பங்களை உடைத்தெறியும் அர்ஜூனின் செயல்களையும் தாங்கு இந்தப் பகுதி நகர்கிறது. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.
டுவிஸ்டு மேல டுவிஸ்டா இருக்கே!!! அடுத்த பதிவு வர வெயிட் பண்ணித்தான் ஆகனும்,, வேற வழி..
இப்பதான் முதல் பாகத்தில்...விரைவில் பிடித்துவிடுவேன்....சுவாரஸ்யம்...
“ உன் நண்பன் நான் சொல்றேன்….என்னை நீ நம்பு….என் வாழ்க்கையின் மாற்றத்துக்கு காரணம் அவளேதான்…வாழ்க்கையை இழந்து…காதலை இழந்து…குடும்பத்தை இழந்து நிக்கிறேன் என்றால் காரணம் மானிஷாதான்… அவளை பழிவாங்கத் துடிக்குதுடா மனசு….”/////////
கதை ரொம்ப விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் போகுது சிஸ்டர்! வாழ்த்துக்கள்! அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்!
அக்கா கதை மிகவும் சூடுபிடித்துள்ளது அதுத்த பாகத்தில் என்ன நடக்கும்?இப்பவே வெயிட்டிங்
அருமையான கதை ..
Udanz சிறுகதை போட்டியில் கலந்து கொள்கின்றிகளா ?
உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html
வாழ்த்துக்கள்
Post a Comment