Saturday, May 21, 2011

அறிமுகம்

படைப்பாளி அறிமுகம்-10-கவிதாயினி நிஹாஸா நிஸார்;
kavingar-asmin.blogspot.com 
இல் வெளியான எனது நுால் பற்றி...

இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் ''கஹட்டோவிட்ட'' என்ற இடத்தை பிறப்பிடமாக கொண்ட 'நிஹாஸா நிஸார்' ஒரு வளர்ந்து வரும் கவிஞரும், எழுத்தாளருமாவார்.

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம், மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவியான இவர் தனது தீவிரமான வாசிப்பின் ஊடாகவும் ஆசிரியர்களின் வழிநடத்தல் போன்றவைகளாலும் இன்று ஒரு எழுத்தாளராக பரிணமித்திருக்கின்றார்.

கற்கின்ற காலத்தில் எழுத்துத்துறைக்குள் நுழைந்த  இவரின் கவிதை, சிறுகதைகள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் களம்கண்டுள்ளன.
உயர்தரம் கல்வி கற்கும் காலத்தில் இலக்கிய போட்டிகளில் கலந்துகொண்டு பல தடவை வெற்றியீட்டியுள்ளார்.குறிப்பாக இவர் 2002 ம் ஆண்டு அகில இலங்கை மட்டத்தில்  நடாத்தப்பட்ட தமிழ் தினப்போட்டியில் கவிதைப் பிரிவில் 2ம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுள்ளார்.

இவரது முதலாவது கவிதை நூல் 'கண்ணீர் வரைந்த கோடுகள்'' அண்மையில் 'வேகம்' பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்து இலக்கிய ஆர்வலர் பலரதும் கவனத்தை பெற்றுள்ளது.

இவர் தனது அடுத்த வெளியீடாக 'பூமாலையாகாமல்....' என்ற நாவலை தர இருக்கின்றார். கணவரோடு கட்டாரில் வசித்து வரும் இவர் அங்கிருக்கும் தனிமை,வெறுமை மட்டுமல்லாது  வாழ்வின் பல கூறுகளையும் கவிதைகளால் மொழி பெயர்க்க முயல்கின்றார்.
இவரது படைப்புலக பணி மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.

புத்தகம் வெளியீடு

kahatoweta.blogspot.com

இல் வெளியான எனது புத்தக வெளியீடு பற்றி...

கண்ணீர் வரைந்த கோடுகள்--கஹட்டோவிட நிஹாஸா நிஸாரின் புத்தக வெளியீடு

கஹட்டோவிட மண்ணின் மைந்தர்கள் பலர் பல துறைகளில் பிரகாசித்து ஊரின் புகழை உச்சிக்கு ஏற்றிய வரலாறுகள் பல பொன் எழுத்துக்களால் பதியப்பட்டுள்ளன.

இந்த வகையில் எமதூரிற்குப் பெருமை தேடித்தரும் இன்னுமொரு பதிவாக கஹட்டோவிட அல் பத்ரியா மகாவித்தியாலயம் ஈன்றெடுத்த கவிச் செல்வியான நிஹாஸா நிஹாரின் கண்ணீர் வரைந்த கோடுகள் என்ற கவிதைத் தொகுப்பு புத்தக வெளியீட்டு விழா கடந்த 13.03.2011 ஆம் திகதியன்று கொழும்பு தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வேகம் பதிப்பகத்தினால் இப்புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இச்சகோதரியன் இலக்கியப் பிரவேசம் எமதூரின் இன்னும் பல இலை மறை காய்களாக உள்ள பலருக்கு முன் உதாரணமாய் அமைய வேண்டும் என்பது எமது அவாவாகும். இச்சகோதரியின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு நாம் துஆச் செய்வோமாக!

குறிப்பு - இவரது புத்தக வெளியீடு சம்பந்தமான செய்தி கடந்த 12.03.2011 ஆம்திகதியன்று சுயாதீன தொலைக்காட்சியின் தமிழ் செய்தியில்  ஒளிபரப்பப் பட்டது.  

நுால் விமர்சனம்

www.keetru.com
கீற்றில் வெளியான எனது புத்தக விமர்சனம்....;

'கண்ணீர் வரைந்த கோடுகள்' மீதான விமர்சனப் பார்வை

கஹட்டோவிட்ட நிஹாஸா நிஸார் எழுதியிருக்கும் 'கண்ணீர் வரைந்த கோடுகள்' என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதைத் தொகுதி அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. இது இவரது கன்னித் தொகுப்பாகும். கஹட்டோவிட்ட மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்தக் கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கிறது. வேகம் பதிப்பகத்தின் வெளியீடாக, 62 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் 24 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 
nihaza_450சாயம் போகும் நினைவுகள், இது அங்குல இடைவெளி, நெஞ்சத்திடம் ஒரு கேள்வி, தாகிக்கும் இதயம், போதும் என்னை விட்டுவிடு, விழியால் தொட்டுக்கொள், உரிக்கப்படும் உரிமைகள், அந்த இரவுக்கு மட்டும், காத்திருப்பு, முக்காட்டைப் போட்டு மூலையில் குந்துங்கள், கிராமத்து விருந்து,  வையத் தலைமை கொள்வோம், அக்கரைச் சீமையில் எம்மவர் கண்ணீர், தளிர்விடும் துயரும் ஒற்றை நினைப்பும், என் மீதான சதிகள், இப்படிக்கு கனவு, இது தான் உலகம், பெண்ணாய்ப் பிறந்திட்டோம், நிலாப் பொழுதில், காதல் வந்தது, எனக்கொரு குழந்தை வேண்டும், இனியொரு துன்பம் இல்லை, பணிக்கட்டி நினைவுகள், பொய் வேஷம் என்ற தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. 
'பொதுவாக இளைய கவிஞர்களின் தொகுதி என்றால் அதில் காதல் கவிதைகள் அதிகம் இருக்கும். அல்லது பள்ளி வாழ்க்கையின் நினைவுகள் நிறைந்திருக்கும். இந்தக் கருத்துருவத்தை மாற்றுகிறது கஹட்டோவிட்ட நிஹாஸாவின் கண்ணீர் வரைந்த கோடுகள். .... உள்ளே பல புதுமையான கவிதைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் அநேகமான கவிதைகள் பெண்ணின் சுதந்திர வாழ்க்கைக்கான ஆசைகளை, எதிர்பார்ப்புக்களைச் சுட்டி நிற்கின்றன. ஏனையவற்றுள் இயற்கை, தொழிலாளர் ஒற்றுமை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரச்சினை, அரசியல் உரிமைகள், நாட்டின் சமாதானம், தாய்மை என்று பல விடயங்கள் பேசப்படுகின்றன. இதில் மிகக் குறைவாக காதலும், காதல் தோல்வியும் பேசப்படுவது சிறப்பம்சமாகும். இன்னொரு சிறப்பம்சம்... இவர் இதுவரை பத்திரிகைகளில் கவிதைகள் எழுதியவர் அல்ல என்பது. அனாவசியமான படிமங்கள், குறியீடுகள் என்பவற்றைக் களைந்து மிக இயல்பான கவிதை மிடுக்கோடு இவரது கவிதைகள் வெளிக்கிளம்பியுள்ளன' என்று கெகிராவ சஹானா தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். 
இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முன்னால் பணிப்பாளரான அல்ஹாஜ். எம். இஸட். அஹ்மத் முனவ்வர், இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. எஸ்.வை. ஸ்ரீPதர், கவிஞர் காவூர் ஜமால் ஆகியோர் இக்கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துரைகளை வழங்கியுள்ளார்கள். பதிப்புரை வழங்கியிருக்கும் வேகம் பதிப்பகத்தின் ஆசிரியர் பஹமுன அஸாம் தனது பதிப்புரையில் பின்வருமாறு கூறுகிறார்.... 
'புது யுகம் காணும் வெற்றியின் பயணத்தில், வேகம் பதிப்பகமானது மிக வேகமாக பயணித்துக் கொண்டுள்ளது. அந்த விதத்தில் பத்திரிகைத் துறையில் ஒரு புதுத் தடம்பதித்துள்ள வேகம் பத்திரிகையானது புதிய எழுத்தாளர்களை உருவாக்குவதிலும், சமூகத்துக்கு அவர்களை அறிமுகப்படுத்துவதிலும் உற்சாகமாக செயற்பட்டு வருவதை அவதானிக்கலாம். ... நிஹாஸா நிஸாரின் ஆக்கங்களைப் பார்க்கும் போது ஒருவிதக் கவலைதான் குடிகொண்டது. காரணம் அழகான தமிழ் வளமும், சொற்கள் வசனங்கள் என்பவற்றை தனது ஆக்கங்களில் கையாளப்பட்டிருந்த அமைப்பும் சிறப்பாகவே இருந்தன. இருந்தும் இத்தனை காலமாக அவை தூசு தட்டப்படாது இருந்ததை நினைக்கும் போதுதான் கவலையாக இருந்தது. ஆரம்பக் காலத்திலேயே இவரை இனங்கண்டு, அவருக்கு ஊக்கமும் உற்சாகமும் வழங்கி பட்டை தீட்டப்பட்டிருந்தால், இன்று பிரபலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஒரு காத்திரமான எழுத்தாளராக இருந்திருப்பார்'. 
நிஹாஸா நிஸார் தனது முன்னுரையில் 'தெவிட்டாத தேன் சொரிக்கும் இக்கவிதா வனத்தில் சிறகசைக்க வந்ததொரு சிட்டுக்குருவி போல இச்சின்னத்தொகுதி உங்கள் கரங்களில் இன்று தவன்று கொண்டிருப்பது வெறும் கனவென்றே எண்ணத்தோன்றும். கவிதையின் ஆரம்ப நாதம் அடிமனதில் அலாரம் அடித்தது. மனதில் முகாமிடும் ரணங்களை மொழிபெயர்க்கத் தெரியாத கணங்களில் மனதை ஆற்றுப்படுத்தும் முயற்சியில் எனது யௌவனத் தேடல்களின் கண்களில் ஆங்காங்கே தட்டுப்படும் வரிகளில் மனம் லயிக்கும். அவ்வரிகளை என் டயரிக்குள் எழுதிப் பத்திரப்படுத்துவேன். இரவுகளின் ஏகாந்தத்தில் உள்ளம் வாசித்து அமைதி பெறும். கவிரசனையின் ஆரம்பச் சுவையை இருதயம் கொஞ்சம் கொஞ்சம் சுவைப்பது புரிந்தது. ... முதன் முதலில் பூமியில் கால் பதிக்கும் குழந்தையின் முயற்சியிலும் முன்னேற்றத்திலும் குறை காணாது  தப்புக்களைத் தண்டனைக்கு அப்பாற்படுத்தி கை தூக்கி விடுவது நற்பண்புகளின் உச்சம். அந்த எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் எனது முதல் பாதச் சுவடான இக்கன்னித் தொகுப்பை உங்கள் கரங்களில் தவழவிடுகிறேன்' என்கிறார். 
சாயம் போகும் நினைவுகள் என்ற கவிதையில் 
ஆயிரம் முறை நீட்டும் மனப்புயலின்
தலை நீட்டலுக்கிடையில்
த்ரீஜீ போனுக்கு ரீலோட் ஏத்த
மாதம் தோறும் பணம் கேட்கையில்
அம்மாக்களின் இருதயங்களில்
ஆலமரம் சரியும் அரவம்.... 
என்று குறிப்பிடுகிறார். கையடக்கத் தொலைபேசி இன்றைய காலத்தில் மாணவர்கள் முதல் சிறியோர், பெரியோர் அனைவரிடமும் அதிக செல்வாக்கு பெற்றுள்ளது. எனினும் அதனால் ஏற்படும் அனுகூலங்களை விட பிரதிகூலங்களே அதிகம். அவசர யுகத்தில் அவசியமாகிப் போன கைத்தொலைபேசிகள் ரீலோட் என்ற பெயரில் காசை அழித்து விடுகின்றது. அந்த கருத்தைத் தான் மேலுள்ள வரிகள் இயம்பி நிற்கிறது. 
இது அங்குல இடைவெளி என்ற கவிதையில் வெறுமை நிலை வெளிப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பெண்ணின் ஆசைகள் அனைத்தும் நிராசையாகி விடும்போது ஏற்படும் மனவருத்தம் இந்த வரிகளில் இவ்வாறு எடுத்தாளப்பட்டிருக்கிறது. 
அன்புகாட்டாத நேசங்கள்
முளைக்கப் பார்க்கும்
பெண்மையின் அபிலாஷைகள்
கண் முன்னே
கலையப்படும் போது - அது
தருகிற வழியும்... ரணமும்...
வேதனையாகி விரக்தியாகிறது...
மன உறுதிகள் குழைந்து
வீரம் தளர்ச்சியுற்று
உடம்பைக் கூறுபோடுகிறது... 
இது என்ன தான் நவீன யுகம் என்றாலும் இன்றும் கூட பெண்களை அடக்கியாள எண்ணும் ஆண்கள் கிருமிகளாக ஆங்காங்கே காணப்படுகின்றமை துரதிருஷ்ட நிலையாகும். ஒடுக்கப்பட்டு அடுப்பங்கரைக்குள் அடைப்பட்ட ஒரு பெண்ணின் உணர்வு 'தாகிக்கும் இதயம்' என்ற கவிதையில் இவ்வாறு சோகமிசைக்கிறது. 
வாழ்வில்
அறியாத பக்கங்களை
தெரியாதென விட்டுவிட்டேன்...
அன்று அறியப்படாத - சில
பக்கங்களை அனுபவிக்கிறேன்
இன்று
அடுப்பங்கரையினுள்ளே
அடைபட்டுக்கொண்டு... 
உரிக்கப்படும் உரிமைகள் என்ற கவிதையில் மானிட நேயம் வெளிப்படுகின்றது. செத்த பிணங்களாய் அனைத்து பிரச்சனைகளை சகித்த காலங்களும், இனவெறி அரக்கனின் அட்டகாச ஆட்சியின் அவலங்களும் போதும் என்று ஆவேசப்படும் நிஹாஸா அந்தக் கவிதையின் வரிகளை இவ்வாறு வடித்திருக்கிறார்.
பாழ்பட்ட மண்ணில்
கால்பதித்த மக்கள்
சீர்கெட்ட சனத்தால்
சீரழிந்தது போதும்...
வாள்பட்டு நித்தம்
சீர்கெட்ட மக்கள்
சிதைந்தொழிந்தது போதும்... 
நூலின் 32வது பக்கத்தில் அமைந்திருக்கும் காத்திருப்பு என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை நாட்டார் பாடலின் சாயலில் அமைந்திருக்கிறது. சந்த ஒழுங்கு பேணப்பட்டு கவித்துவத்துடன் புனையப்பட்டிருக்கும் அந்தக்கவிதை கீழ்வருமாறு.... 
நெஞ்சில கைய வச்சா
சத்தமும் இல்ல
ஆனா நான்
சாகவும் இல்ல!
ஓடுதில்ல ஒருவேல
நெனப்பெல்லாம் உங்கமேல
நொந்து கிடக்கிறேன் நான்
நொடிப்பொழுதில் வாங்க..
தேய்ந்து போற என்ன
தேற்றிவிட்டுப் போங்க 
அடுத்து முக்காட்டைப் போட்டு மூலையில் குந்துங்கள் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதையானது சமூகத்தில் சீதனம் கேட்டு திருமணம் செய்யும் ஆண்வர்க்கத்தினருக்கு சாட்டையடி கொடுப்பதாக அமைகிறது. அதற்கு உதாரணமாக பின்வரும் வரிகளைக் குறிப்பிடலாம். 
பெண்களை
வாழ வைக்க
வக்கில்லாதவன்
பெற்றுக் கொள்ளும்
பிச்சைக் காசு...
மஹர் கொடுத்து
மணம் முடிக்கத் துணியாத
நீங்களெல்லாம் - ஏன்
காற்சட்டை அணிந்த
ஆண்கள் என்று
சொல்லிக் கொள்கிறீர் 
எதிர்கால இலக்கிய உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக நிஹாஸா நிஸார் மிளிர வேண்டும். இது போன்று இன்னும் பல காத்திரமான படைப்புக்களைத் தந்து இலக்கிய உலகில் நின்று நிலைக்க எமது மனமார்ந்த பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும். 
- வெலிகம ரிம்ஸா முஹம்மத்

நன்றி
நன்றி
வெலிகம ரிம்ஸா மொஹமட்

Friday, May 20, 2011

ரோஜாப்பெண்

cdJ tUif
vd; ee;jtdj;jpy;
xU gpusaj;jpw;F
fhuzkhapw;W
 
cd; fd;dr;rptg;NghL
xg;gpLifapy;
Nuh[htpd; epuk;
Njhw;WtpLfpwJ

eP
ehzg;gl;lhy;
xl;L nkhj;jg;Gf;fSf;Fk;
jiy FdptT...

cd; eifj;jiy
epUj;jr; nrhy;fpwJ
G+f;fSf;Nf mtkhdnkd;W

mr;rr;Nrh
nkhl;nld;nwz;zp
XU tz;lku;fpwNj
cd; Kfg;gUf;fspy;

cd; ,jo;fis
gj;jpug;gLj;jpf;nfhs;
ghu;
vj;jid NjdPf;fnsd;W

Nuh[hg;ngz;Nz!!!
vd; ee;jtdk;
cdf;fhdJ
cd;NdhL
Nghl;b NghLtij
,d;Nw epWj;jr;nrhy;fpNwd;
vd;
Nuh[hg;gjpaj;jpw;F!!!
 ;

cdJ tUif
vd; ee;jtdj;jpy;
xU gpusaj;jpw;F
fhuzkhapw;W
 
cd; fd;dr;rptg;NghL
xg;gpLifapy;
Nuh[htpd; epuk;
Njhw;WtpLfpwJ

eP
ehzg;gl;lhy;
xl;L nkhj;jg;Gf;fSf;Fk;
jiy FdptT...

cd; eifj;jiy
epUj;jr; nrhy;fpwJ
G+f;fSf;Nf mtkhdnkd;W

mr;rr;Nrh
nkhl;nld;nwz;zp
XU tz;lku;fpwNj
cd; Kfg;gUf;fspy;

cd; ,jo;fis
gj;jpug;gLj;jpf;nfhs;
ghu;
vj;jid NjdPf;fnsd;W

Nuh[hg;ngz;Nz!!!
vd; ee;jtdk;
cdf;fhdJ
cd;NdhL
Nghl;b NghLtij
,d;Nw epWj;jr;nrhy;fpNwd;
vd;
Nuh[hg;gjpaj;jpw;F!!!
 ;

அவள் அப்படித்தான்

 -சிறுகதை-      

“என்னம்மா இந்து… செக்கப்புக்கு உன் புருஷன் வரல. இந்த நேரம்தான்மா அவர்; உன் பக்கதுலயே இருக்கனும். பாரு ஒன் டெலிவரி நெருங்கிட்டே இருக்கேம்மா…’’ ஜம்பது வயது நிரம்பிய டொக்டர் சுகுமாரன் அவர்களது குடும்ப வைத்தியர் .அவருக்கே உரிய தோரணையில் கூரினார். 
“ஆமாம் டொக்டர்…அவரால இன்னிக்கு வந்துக்கமுடியல…ஒரு முக்கியமான மீட்டிங் இருக்காம்.அந்த கன்ட்ரக்ட் நம்ம கைக்கு கெடச்சிட்டா கம்பனியை ரன் பன்ரது ரொம்ப ஈஸியாம்…அந்த மீட்டிங்கை விட்டுட்டு உன்கூட வரேன் என்றாறு.நான்தான் வேணாம் என்றேன்.என்னால அவரின் கவுரவத்துக்கோ கம்பனிக்கோ இழப்பு வர்ரதை நான் விரும்பல…அவரும்.. என்மேல இருக்கிற அன்பினால எதையும் செய்வாரு…அதனால நான்தான் சந்தரப்பங்களைப் புரிஞ்சு அதுக்கு ஏற்றபோல நடந்துப்பேன் டொக்டர்.’’  இந்து

“ இந்து.. உன் நல்ல மனசு யாருக்கு வரும்.கணவனை விட்டுக்கொடுக்கவே மாட்டியே!!... மிஸ்டர் வஸனந்த் கொடுத்து வெச்சவரு’’ சுகுமாரை மறுத்தானள் இந்து 
“இல்ல டொக்டா்… அவரை புருஷனா அடைந்ததுக்கு நான் தான் சந்தோஷசப்படனும். அவரு அடிப்படைல ரொம்ப நல்லவரு அதுக்காகத்தான் அவருக்காக நான் பரிந்து பேசுறேன் டொக்டர்.’’ இந்துவின் கண்களில் இநு;து ஒரு சொட்டுக் கண்ணீர் கசிந்தது. 

“ ஓக்கேம்மா…ஓக்கே…உன் பதிபக்தியை நான் புரிஞ்சுக்கிட்டேன்… இந்து… என் கிளினிக்ல கர்பிணிப் பொண்ணுங்களுக்கு ஸ்பெஷலா ஒரு லெக்சர் போட்டிருக்கேன்மா…நீயும் கலந்துக்கிறியா.’’ வைத்தியர் தன் கையுரையை கழற்றியவாறே கூற 
‘ஓ..வறேனே…’’ இந்து தன் காரில் கிளம்பினாள். 

பாதையில் ஒரு சின்னக் கலவரம்….
கலவரத்தினுல் வஸந்த்தின் முகம் தட்டுப்பட… ‘வஸந்த்…இங்க என்ன பன்றார்…’யோசித்தபடியே……

இந்து வண்டியை தன் டிரைவருக்கு ஓரமாய் நிறுத்தச்சொல்லிவிட்டு பட்டுப்புடவை சரசரக்க காரை விட்டு இரங்கினாள்.அருகில் உள்ளவர்களிடம் கேட்கையில் மனது ரணமாயிற்று. 
‘மேடம்… அந்த ஆளைப்பார்த்தால் டீஸன்டா இருக்காரு…அந்தப் பெண்ணோட கையைப்புடிச்சி இழுத்திட்டதா கம்ப்லைன்…அவ புருஷன் விட்றமாதிரி எனக்கு தோனலை.அதான் ஒரே ரகலை.அந்தப் பொண்ணப்பத்திதான்மா ஊரே பேசுது.விசாரனை நடந்துட்டு இருக்கு…’’ 
அந்த அம்மாள் கூறி முடிக்கையில் இந்துவின் உடம்பில் குருதி உரைந்தாற்போன்ற உணர்வில் சிலையானாள்.கண்கள் குளமாகிக் கசிந்தன.அங்கே…இந்துவின் கணவன் வஸந்த்தும் அருகில் மல்லிகாவுமமேதான்.தன் கண்கள் பொய் சொவல்லவில்லை என்பதை ஊர;ஜிதம் செய்துகொண்டாள்.மல்லிகாவின்  கைப்பையை கண்டதும் இந்துவிற்கு எங்கோ முள் தைத்த வலி.அதேபோன்று தனக்கும் வஸந்த் சிங்கப்பூரில் இறுந்து வந்து பரிசளித்த ஞாபகத்தை நொந்துகொண்டாள். 
இதயக்கொந்தலிப்பின் மத்தியிலும் கண்ணீரைத் துடைத்து நிதானமானாள்.

மனசு மறுத்தாலும் மூளை உரத்துச்சொன்னது கணவனைக்காப்பாற்றியாகவேண்டும் என்று. ஒரு முடிவுக்கு வந்தவளாய் தன் வண்டியை அனுப்பிவிட்டு மெதுவாய் மல்லிகாவை அனுகினாள்.
வஸந்த் அவமானத்தில் துவண்டான்.கண்களில் ஓர் அவமானக்கெஞ்சல்.இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.இந்து கண் ணீரை மட்டுப்படுத்தும் முயற்சியில் தோற்றுக்கொண்டிருந்தாள். 
“சாட்சிகள் இல்லைங்குறதனால சம்பந்தப்பட்டவங்க வாங்க ஸ்டேஷனுக்கு…அங்கு போய் விசாரிக்குற விதத்துல விசாரிச்சாத்தான் உண்மை தானாய் வெளிய வந்துடும்…’’ கூறிய இன்ஸ்பெக்டருடன் வஸந்த்  மல்லிகா அவ புருஷன் உற்பட  இந்துவும் போலிஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுவரப்பட்டார்கள். 

வஸந்த்தை அவமானம் பிடுங்கித்தின்றது.துக்கம் தொண்டையில் சிக்கிக்கொண்டது
 ‘இந்து எத்தனை தடைவ என்கிட்ட கேட்டாள்…அந்த மல்லிகாவோட என்ன தொடர்புன்னு…அவளின்  நடத்தையை தப்பா பேசுராங்க கவனமா இருங்க…நான் அழுத்துப்போயிருந்தால் சொல்லிடுங்க…நல்ல பொண்ணாப்பார்த்து நானே உங்களுக்கு கல்யாணம் பண்ணி வெக்கிறேன்… ’ விம்மலினூடு வெளி வந்த இந்துவின் வார்த்தைக்கு தான் விட்டேற்றியாய் கூறிய பதில்…  
“எனக்கும் அவளுக்கும் இடையில் ஒன்னுமே இல்லை…நீயா ஏதும் கற்பனை பண்ணிக்காத…இவ்வளவு வளர்ந்திருக்கேன் என்னை காப்பாத்திக்க என்குத்தெரியவா என்ன?...’’ வரிகள்  காது மடலை காயப்படுத்தின. 
இந்த வலையில் இருந்து எப்படித்தப்பிக்கப்போறோம் என்ற குமைச்சல் அவனைப் பாடாய்ப் படுத்தின. 
“ மிஸஸ் இந்து…உங்க புருஷணுக்கும்…அந்த மல்லிகாவுக்கும்…’’ இன்ஸ்பெக்டரின் விசாரனையை இடை மறுத்த இந்து 
“ ஸொரி ஸேர் மல்லிகாவை இவ்வளவு தூரம் பேச விட்டதே தவறு…மல்லிகாவும் அவ புருஷனும் சேர்ந்து நாடகமாடுராங்க…நானும் என் புருஷனும் டொக்டர் சுகுமாரனை சந்திச்சிட்டு இந்த வழியா அவரின்ட கிளினிக் போய்க்கொண்டிருந்தோம்.வண்டியை மறிச்சி இவுங்க லிப்ட் கேட்டாங்க…வண்டியை நிறுத்துற கெப்பில்  என் வைர நெக்லஸை பறிச்சிட்டு ஓடப்பார;த்தாள். துரத்திப்போன என் புருஷனுக்கு அவமானப்பட்டமா? இது எந்தவகயில ஸேர் ஞாயம்…வேனுமென்றால் மல்லிகாவின் கைப்பையை சோதனை போடுங்க உண்மை வெளிப்படும்.’’ இந்து திக்கித்தினறி கூறுகையில் வியர்வை அவளை தெப்பமாய் நனைத்திருந்தது. 

மல்லிகா வெடவெடத்தப்போனாள்.
 “அவ பொய் சொல்றா நம்பாதிங்க …’’ மல்லிகாவின் உலறலைப் பொருட்படுத்தாமல் ஒரு லேடி கொன்ஸ்டபிள் மல்லிகாவின் கைப்பையை சோதனையிட அதிலிருந் து கிடைக்கப்பெற்ற வைர நெக்லஸைக் கண்டு மல்லிகா உற்பட வஸந்த்தும் அதிர்ந்துதான் போனான். 
“ஸொரி…மிஸ்டா் வஸந்த்… நடந்த தப்புக்கு வருந்துறோம்…நீங்க போகலாம் .’’ வீடு வந்த பின்னும் இன்ஸ்பெக்டரின் கம்பீரக்குரலை நம்ப முடியாமல் இருந்தது வஸந்த்திற்கு. 

தான் ஆண் என்ற திமிரில் இருந்து சற்று இரங்கி வந்தான் வஸந்த்.     “ இந்து…எனக்கு என்ன நடக்குதென்றே தெரியலம்மா…மல்லிகாவின் தொடர்பை ஏன் விடமுடியலைன்னு புரியமாட்டேங்குது…மல்லிகா என்னுடன்தான் வந்தாள்.புருஷனைக்கண்டதும் ப்ளேட்டயே மாத்திப்போட்டுட்டாளே…இப்ப நெனச்சால் அறுவறுப்பா இருக்கு…’’ நாதழுதழுக்க வஸந்த் தொடர்ந்தான். 
“ இவ்வளவு பெரிய விசயத்தை நீ எவ்வளவு ஸிம்பிளாய் எடுத்து என் மானத்தைக் காப்பாற்றினாய்…நீ… என்மேல்ல வெச்ச உண்மை பாசத்தை கண்டுக்காம என்னென்னமோ செஞ்சிட்டேன்…என்னை மன்னிச்சிக்க…’’ 
இந்துவின் குளிர்க் கரங்களை இறுகப்பற்றினான் வஸந்த் நன்றி மேலீட்டில். 
“நன்றியெல்லாம எதுக்குங்க…இந்த உலகத்துல சுயநலம் பார்க்காதவங்க தாயும் தாலி கட்டின மனைவியும்தாங்க…சந்தர்ப்பங்களை சுயநலத்துக்காக மாத்தியமைக்குறவங்கதான் அதிகம்.அத நீங்க புரிஞ்சிக்கனும்.’’என்றவள் போக முனைந்தாள். 
“ இந்து…உண்மையில் மனைவின்னா இப்படித்தான் இருக்கனும்…’’ வஸந்த் இந்துவின் முகத்தை பரிவுடன் தன் பக்கம் திருப்பினான். 
“நீங்க இன்னும் என்னை முழுசாப் புரிஞ்சிக்கலைங்க…நான் இன்னும் உங்களை விரும்புறேங்க…அதனாலதாங்க நேற்றுப்போலிஸ்டேஷன்ல இருந்தும்…கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க செஞ்சிக்கொள்ளப்பார;த்த தற்கொலை முயற்சியில் இருந்தும் உங்களைக் காப்பாற்றினேன்.ஆனால்… 

என்னதான் சொன்னாலும் நான் மல்லிகாட பையில் என் நெக்லஸை வேணுமென்றே வெச்சது தப்புதானே….அந்தக் குற்ற உணர்வு என்னை ந்ம்மதியா வாழ விடாதுங்கஅதுக்குப்பிராயச்சித்தம் பண்ணனுங்க… இனிமேபெயரளவில் மட்டும்தாங்க நாம புருஷன் பொண்டாட்டியா வாழ முடியும்.…மற்றும்படி நமக்குள்ள இனி எந்தவித ஒட்டுதலும் வராதுங்க… என்கிட்ட ஏதோ குறை இருக்குன்னு நெனச்சதாலதானே. நீங்க இப்படி பண்ணிட்டீங்க…எனக்கு நானே கொடுத்துக்குற தண்டணைதாங்க இது. நான் இனிமே இப்படியே வாழ முடிவு பண்ணிட்டேங்க.நீங்க இஷ்டப்பட்டா.. இன்னுமொரு கல்யாணம் பண்ணிக்கொங்கஎன்னை மன்னிச்சிடுங்க…’’விரக்தியின் உச்சகட்டத்தில் இருந்து அவளது வார்த்தைகள் வெளியாகின

ஊடைந்து நொருங்கியே போனான் வஸந்த்.” என்னை தற்கொலையே பன்னவிட்டிருக்கலாம்.தப்பை உணர்ந்தபின்னும் அணு அணுவாய் சாகடிக்கிறியே…’’முணுமுணுத்த வஸந்த் தன் மேல் முற்குவியலொன்று  வாரி இறைக்கப்பட்டதாய் உணர்ந்தான். 

          (யாவும் கற்பனை)