Saturday, August 6, 2011

பூமாலையாகாமல் - நாவல்

       சுகமாகும் சுமைகள்...

 எனக்கு நன்றாக நினைவிருக்கிறது...
நான் எழுதிய முதல் நாவல் இது. நாவலா..? குறுநாவலா ..? என்று தெரியவில்லை...
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு முந்தைய காலங்களில் எழுதியது.தோழிகளின் வற்புருத்தலில் காதலித்துக்கொண்டிருந்த தோழியொருத்திக்கு நடந்த சம்பவங்கயைத் தழுவி எழுதப்பட்ட நாவல் அது…அந்த நாவலில் நாவலுக்குறிய அம்சங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.இதில் ஒரு சிறுபிள்ளைத்தனம் எனக்கே தெரிகிறது. இதை வகுப்புத்தோழிகள் தவிர யாரிடமும் காட்டியதில்லை…

     பூமாலையாகாமல்...

.நான் எழுதிய இரண்டாவது நாவல். 
க.பொ.த. உயர்தரம் முதல் வருடம் கற்கின்றபோது எழுதியது.நான் நினைக்கிறேன் அது 2001 ம் வருடம் என்று.அப்போது எனக்கு வயது பதினேழுதான் ஆகிறது.

      சிறுகதையாக எழுத நினைத்ததை தோழிகளின் ஊக்குவிப்பால் நாவலாகத் தொடர முடிந்தது.இந்த நாவல்கூட நாவலுக்குறிய அம்சங்களை உள்ளடக்கி இருக்குமாவென்று எனக்குத் தெரியவில்லை.என் முயற்சியின் ஆரம்பக் கட்டங்கள்தானிவை…இதுவொரு முக்கோணக் காதல் கதை…சுமாரான வெறும் கற்பனைக்கதையிது...

    பூமாலையாகாமல்… இந்நாவலை என் கைப்படவே எழுதி… புத்தகவடிவமாக நானே தொகுத்தேன்.பாடசாலை மட்டத்தில்…மாணவர்கள் மத்தியில்…கொஞ்சம் எடுபட்டது…

அதுவே எனக்கு சாதனை செய்தமாதிரி…ஆனாலும் அன்றைய  நாட்களில் எங்களைப்போன்ற எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்த யாரும் முன்வரவில்லை. 
அப்படியாரும் இருந்ததாகத்தெரியவுமில்லை.தெரியப்படுத்தவுமில்லை.
அந்தக்கவலை என்னை இன்னும் ரணப்படுத்திக் கொண்டே இருக்கிறது…நான் சொல்வது பொய் என்றால்....இந்நாவலை துாசுதட்டிப் புதுப்பிக்க எனக்கு 10 வருடம் எடுத்திருக்காது...இது 2011 ம் ஆண்டாயிற்றே....!!!!

     எனக்கொரு ஆசை…
இந்நாவலை கொஞ்சம் திருத்தி…கொஞ்சம் மெருகேற்றி…எனது இந்த வலைப்பூவில் வெளியிட வேண்டுமென்பதே…..
அந்த ஆசை...கனவு... நல்லபடியாக ஈடேற   இறைவன் துனணபுரியட்டும்...

Thursday, August 4, 2011

ஊமைத்திரிகள்

வண்ணக்கருவண்டின்
ரீங்காரத்திலும்
மெல்லிசையின் மென்
கீற்றுக்களிலும்
வானவில்லின்
வர்ணஜாலத்திலும்
சிலிர்த்துப்போயிருந்தது
என் சிந்தை….

பாசங்களின் பரிதவிப்பில்
புல்லரித்துப் போயிருந்தது
என் நெஞ்சம்……

போலிகளின்
புரல்வுகளின்போது
வேசமிடப்பட்ட
நாடக அரங்கிலிருந்து
புரம்பெயர்ந்ததொரு
புலையனின்
புண்பட்டநெஞ்சமாய்…

வேரறுக்கும் புயலில்
ஊசலாடும்
ஊமைத்திரிகளாய்...

பரிதவிப்பில்
பச்சாதாபப்பட்டும்…
நெகிழ்வுகளில்
நெரிக்கப்பட்டும்…
நொந்துபோன
ஊமை உள்ளமிது…

நிர்க்கதியால்
நிலைகுழைந்த...

இவளொரு
உருகும்
மெழுகுவர்த்தி…

000 000 000

வண்ணக்கருவண்டின்
ரீங்காரத்திலும்
மெல்லிசையின் மென்
கீற்றுக்களிலும்
வானவில்லின்
வர்ணஜாலத்திலும்
சிலிர்த்துப்போயிருந்தது
என் சிந்தை….

பாசங்களின் பரிதவிப்பில்
புல்லரித்துப் போயிருந்தது
என் நெஞ்சம்……

போலிகளின்
புரல்வுகளின்போது
வேசமிடப்பட்ட
நாடக அரங்கிலிருந்து
புரம்பெயர்ந்ததொரு
புலையனின்
புண்பட்டநெஞ்சமாய்…

வேரறுக்கும் புயலில்
ஊசலாடும்
ஊமைத்திரிகளாய்...

பரிதவிப்பில்
பச்சாதாபப்பட்டும்…
நெகிழ்வுகளில்
நெரிக்கப்பட்டும்…
நொந்துபோன
ஊமை உள்ளமிது…

நிர்க்கதியால்
நிலைகுழைந்த...

இவளொரு
உருகும்
மெழுகுவர்த்தி…

000 000 000

Wednesday, August 3, 2011

மக்கா லைவ்

கஃபதுல்லாவில் நடைபெறும் ரமழான் நிகழ்வுகளை...
ரமழான் மாதம் முழுவதும் நேரடியாகப் பார்வையிட ...

‫قناة MakkahLive‬‎ - YouTube

மேலே உள்ள சுட்டியை கிளிக் பண்ணவும்

நன்றி
live Stream from Makkah brought to you by Ministery of Culture and Information

Tuesday, August 2, 2011

ஆழிப்பேரலை

ஈழத்து இலக்கியத்தை
இடம் பெயர்த்த
இங்கிதமற்ற சோகம் இது…

பூபாளங்கள் இசைத்த
இதிகாசங்களை அழித்து
முகாரியை
முகப்புரையாக்க வந்த
முள்ளுச்செடியிது…

கழுத்தறுக்கும்
கள்ளிச்செடியிது…

இடிந்து வீழ்ந்தது
இலங்கை மட்டுமா…
இதயங்களும் தானே…

நாசகார வேளை செய்யும்
மோசமான இதயங்களின்
வாசங்கள்
இருக்கும்வரை…
இப்படி….
சுவாசங்கள்
பலவந்தமாக
நிறுத்தப்படத்தான் செய்கிறது…

மானிடத்தின் சீற்றத்தால்
இயற்கையின் சீண்டலை
துாண்டிவிட்டு
நாட்டை
துவம்சம் செய்யும் பிறவிகள்
இருப்பதை விட
ஆழிக்கடலே
அள்ளியெடுத்தது மேல்…
ஆனால்…

மகத்தான உள்ளங்களும்
மடிந்துபோனது
நியாயம்தானோ…

ஆழிப்பேரலை
அள்ளித்தெளித்த
அனர்த்தத்தில்…
அடங்கிப்போனது
ஆன்மாக்கள் போற்றும்
அகிம்சாவாதி அடியார்களும்தானே…

சுழன்றுவந்த சுனாமியே…

ஏன் நீ
சுதந்திரம் பறித்தாய்….
சுகங்களை அறுத்தாள்…
அடையாளம் இன்றி
அறுவடை செய்தாய்…
தடயங்களேயின்றி
நடைப்பிணமாக்கி
அமைதியில் ஆர்ப்பரிக்கிறாயா…

வீழுந்துவிட்ட நாங்கள்
எழுந்திருக்கவேண்டாமா….

கண்முன்னே
கொள்ளையடித்ததில்…
உனக்கென்ன பங்கு…

000 000 000

ஈழத்து இலக்கியத்தை
இடம் பெயர்த்த
இங்கிதமற்ற சோகம் இது…

பூபாளங்கள் இசைத்த
இதிகாசங்களை அழித்து
முகாரியை
முகப்புரையாக்க வந்த
முள்ளுச்செடியிது…

கழுத்தறுக்கும்
கள்ளிச்செடியிது…

இடிந்து வீழ்ந்தது
இலங்கை மட்டுமா…
இதயங்களும் தானே…

நாசகார வேளை செய்யும்
மோசமான இதயங்களின்
வாசங்கள்
இருக்கும்வரை…
இப்படி….
சுவாசங்கள்
பலவந்தமாக
நிறுத்தப்படத்தான் செய்கிறது…

மானிடத்தின் சீற்றத்தால்
இயற்கையின் சீண்டலை
துாண்டிவிட்டு
நாட்டை
துவம்சம் செய்யும் பிறவிகள்
இருப்பதை விட
ஆழிக்கடலே
அள்ளியெடுத்தது மேல்…
ஆனால்…

மகத்தான உள்ளங்களும்
மடிந்துபோனது
நியாயம்தானோ…

ஆழிப்பேரலை
அள்ளித்தெளித்த
அனர்த்தத்தில்…
அடங்கிப்போனது
ஆன்மாக்கள் போற்றும்
அகிம்சாவாதி அடியார்களும்தானே…

சுழன்றுவந்த சுனாமியே…

ஏன் நீ
சுதந்திரம் பறித்தாய்….
சுகங்களை அறுத்தாள்…
அடையாளம் இன்றி
அறுவடை செய்தாய்…
தடயங்களேயின்றி
நடைப்பிணமாக்கி
அமைதியில் ஆர்ப்பரிக்கிறாயா…

வீழுந்துவிட்ட நாங்கள்
எழுந்திருக்கவேண்டாமா….

கண்முன்னே
கொள்ளையடித்ததில்…
உனக்கென்ன பங்கு…

000 000 000

Monday, August 1, 2011

நீயாகு……

உன்னை உனக்குத்
தெரிகிறதா..
தோழா…
வெற்றிகள்
எதுவென்பதையும்
தோல்விகள்
இதுதானென்பதையம்
நீ… உணராதவரை
உன்னால்
உன்னை அறிமுகப்படுத்த
முடியாது…
இந்நிலை எண்ணி
கலங்குவதில்
காலத்தைக்
காயப்படுத்திக்கொள்ளாதே…
சரிவெல்லாம்
வெற்றிப்படிகளென்றும்...
அவமானங்கள்
கைத்தடிகளென்றும்...
உள்ளம்
உள்வாங்காதவரை
உன்னால்
எழுந்திருக்க
முடியுமென்கிறாயா…?
நிலவினை முத்தமிடத்
துடிக்கும்
மேகக்கூட்டத்தின்
கரங்களைத் தடுக்வும்..
மேனியைத்தழுவும்
தென்றலுக்கு
மறுப்புக்கடிதம் நீட்டவும்...
நீ
துணியாதவரை….

நீ…
நீயாகலாம்…

000 000 000

உன்னை உனக்குத்
தெரிகிறதா..
தோழா…
வெற்றிகள்
எதுவென்பதையும்
தோல்விகள்
இதுதானென்பதையம்
நீ… உணராதவரை
உன்னால்
உன்னை அறிமுகப்படுத்த
முடியாது…
இந்நிலை எண்ணி
கலங்குவதில்
காலத்தைக்
காயப்படுத்திக்கொள்ளாதே…
சரிவெல்லாம்
வெற்றிப்படிகளென்றும்...
அவமானங்கள்
கைத்தடிகளென்றும்...
உள்ளம்
உள்வாங்காதவரை
உன்னால்
எழுந்திருக்க
முடியுமென்கிறாயா…?
நிலவினை முத்தமிடத்
துடிக்கும்
மேகக்கூட்டத்தின்
கரங்களைத் தடுக்வும்..
மேனியைத்தழுவும்
தென்றலுக்கு
மறுப்புக்கடிதம் நீட்டவும்...
நீ
துணியாதவரை….

நீ…
நீயாகலாம்…

000 000 000

Sunday, July 31, 2011

செல்லக் கிறுக்கல்

நமது
ஞாபகக் கிறுக்கல்கள்
சந்திக்கின்றபோது
ஜனித்துவிட்டது
நமது நேசம்…

நமது
ஒற்றை விழிகளால்
நீடித்துவிடப்பட்டது
பாசப்பிணைப்பு…

உனது மௌனத்தின்
தவிப்புகள்
என்னை
தகிக்கவைக்கும்…

இரவுகளை உருக்கி
உனது கூந்தலுக்கு
நிரம் கொடுப்பதிலும்
விடியலை ஒடுக்கி
உனது பார்வைக்கு
வெள்ளையடிக்கும்
முயற்சியிலும்
உண்மையில் நான்
தோற்றுத்தான்
போய் விடுகிறேன்…

தனிமைகளில்தான்
உனது
சில்லரை நினைவுகள்
என்னை உன்னில்
அமிழ்த்திவிடுகின்றன….

அந்த
நொடிப்பொழுதுகளில்
நம்மை
பிரித்தறியமுடியாதபடி
பற்றிப்பிடித்திருக்கிறது
நம்
பொல்லாத நினைவுகள்

000 000 000

நமது
ஞாபகக் கிறுக்கல்கள்
சந்திக்கின்றபோது
ஜனித்துவிட்டது
நமது நேசம்…

நமது
ஒற்றை விழிகளால்
நீடித்துவிடப்பட்டது
பாசப்பிணைப்பு…

உனது மௌனத்தின்
தவிப்புகள்
என்னை
தகிக்கவைக்கும்…

இரவுகளை உருக்கி
உனது கூந்தலுக்கு
நிரம் கொடுப்பதிலும்
விடியலை ஒடுக்கி
உனது பார்வைக்கு
வெள்ளையடிக்கும்
முயற்சியிலும்
உண்மையில் நான்
தோற்றுத்தான்
போய் விடுகிறேன்…

தனிமைகளில்தான்
உனது
சில்லரை நினைவுகள்
என்னை உன்னில்
அமிழ்த்திவிடுகின்றன….

அந்த
நொடிப்பொழுதுகளில்
நம்மை
பிரித்தறியமுடியாதபடி
பற்றிப்பிடித்திருக்கிறது
நம்
பொல்லாத நினைவுகள்

000 000 000