Tuesday, August 2, 2011

ஆழிப்பேரலை














ஈழத்து இலக்கியத்தை
இடம் பெயர்த்த
இங்கிதமற்ற சோகம் இது…

பூபாளங்கள் இசைத்த
இதிகாசங்களை அழித்து
முகாரியை
முகப்புரையாக்க வந்த
முள்ளுச்செடியிது…

கழுத்தறுக்கும்
கள்ளிச்செடியிது…

இடிந்து வீழ்ந்தது
இலங்கை மட்டுமா…
இதயங்களும் தானே…

நாசகார வேளை செய்யும்
மோசமான இதயங்களின்
வாசங்கள்
இருக்கும்வரை…
இப்படி….
சுவாசங்கள்
பலவந்தமாக
நிறுத்தப்படத்தான் செய்கிறது…

மானிடத்தின் சீற்றத்தால்
இயற்கையின் சீண்டலை
துாண்டிவிட்டு
நாட்டை
துவம்சம் செய்யும் பிறவிகள்
இருப்பதை விட
ஆழிக்கடலே
அள்ளியெடுத்தது மேல்…
ஆனால்…

மகத்தான உள்ளங்களும்
மடிந்துபோனது
நியாயம்தானோ…

ஆழிப்பேரலை
அள்ளித்தெளித்த
அனர்த்தத்தில்…
அடங்கிப்போனது
ஆன்மாக்கள் போற்றும்
அகிம்சாவாதி அடியார்களும்தானே…

சுழன்றுவந்த சுனாமியே…

ஏன் நீ
சுதந்திரம் பறித்தாய்….
சுகங்களை அறுத்தாள்…
அடையாளம் இன்றி
அறுவடை செய்தாய்…
தடயங்களேயின்றி
நடைப்பிணமாக்கி
அமைதியில் ஆர்ப்பரிக்கிறாயா…

வீழுந்துவிட்ட நாங்கள்
எழுந்திருக்கவேண்டாமா….

கண்முன்னே
கொள்ளையடித்ததில்…
உனக்கென்ன பங்கு…

000 000 000













ஈழத்து இலக்கியத்தை
இடம் பெயர்த்த
இங்கிதமற்ற சோகம் இது…

பூபாளங்கள் இசைத்த
இதிகாசங்களை அழித்து
முகாரியை
முகப்புரையாக்க வந்த
முள்ளுச்செடியிது…

கழுத்தறுக்கும்
கள்ளிச்செடியிது…

இடிந்து வீழ்ந்தது
இலங்கை மட்டுமா…
இதயங்களும் தானே…

நாசகார வேளை செய்யும்
மோசமான இதயங்களின்
வாசங்கள்
இருக்கும்வரை…
இப்படி….
சுவாசங்கள்
பலவந்தமாக
நிறுத்தப்படத்தான் செய்கிறது…

மானிடத்தின் சீற்றத்தால்
இயற்கையின் சீண்டலை
துாண்டிவிட்டு
நாட்டை
துவம்சம் செய்யும் பிறவிகள்
இருப்பதை விட
ஆழிக்கடலே
அள்ளியெடுத்தது மேல்…
ஆனால்…

மகத்தான உள்ளங்களும்
மடிந்துபோனது
நியாயம்தானோ…

ஆழிப்பேரலை
அள்ளித்தெளித்த
அனர்த்தத்தில்…
அடங்கிப்போனது
ஆன்மாக்கள் போற்றும்
அகிம்சாவாதி அடியார்களும்தானே…

சுழன்றுவந்த சுனாமியே…

ஏன் நீ
சுதந்திரம் பறித்தாய்….
சுகங்களை அறுத்தாள்…
அடையாளம் இன்றி
அறுவடை செய்தாய்…
தடயங்களேயின்றி
நடைப்பிணமாக்கி
அமைதியில் ஆர்ப்பரிக்கிறாயா…

வீழுந்துவிட்ட நாங்கள்
எழுந்திருக்கவேண்டாமா….

கண்முன்னே
கொள்ளையடித்ததில்…
உனக்கென்ன பங்கு…

000 000 000

No comments: