Friday, May 20, 2011

அவள் அப்படித்தான்

 -சிறுகதை-      

“என்னம்மா இந்து… செக்கப்புக்கு உன் புருஷன் வரல. இந்த நேரம்தான்மா அவர்; உன் பக்கதுலயே இருக்கனும். பாரு ஒன் டெலிவரி நெருங்கிட்டே இருக்கேம்மா…’’ ஜம்பது வயது நிரம்பிய டொக்டர் சுகுமாரன் அவர்களது குடும்ப வைத்தியர் .அவருக்கே உரிய தோரணையில் கூரினார். 
“ஆமாம் டொக்டர்…அவரால இன்னிக்கு வந்துக்கமுடியல…ஒரு முக்கியமான மீட்டிங் இருக்காம்.அந்த கன்ட்ரக்ட் நம்ம கைக்கு கெடச்சிட்டா கம்பனியை ரன் பன்ரது ரொம்ப ஈஸியாம்…அந்த மீட்டிங்கை விட்டுட்டு உன்கூட வரேன் என்றாறு.நான்தான் வேணாம் என்றேன்.என்னால அவரின் கவுரவத்துக்கோ கம்பனிக்கோ இழப்பு வர்ரதை நான் விரும்பல…அவரும்.. என்மேல இருக்கிற அன்பினால எதையும் செய்வாரு…அதனால நான்தான் சந்தரப்பங்களைப் புரிஞ்சு அதுக்கு ஏற்றபோல நடந்துப்பேன் டொக்டர்.’’  இந்து

“ இந்து.. உன் நல்ல மனசு யாருக்கு வரும்.கணவனை விட்டுக்கொடுக்கவே மாட்டியே!!... மிஸ்டர் வஸனந்த் கொடுத்து வெச்சவரு’’ சுகுமாரை மறுத்தானள் இந்து 
“இல்ல டொக்டா்… அவரை புருஷனா அடைந்ததுக்கு நான் தான் சந்தோஷசப்படனும். அவரு அடிப்படைல ரொம்ப நல்லவரு அதுக்காகத்தான் அவருக்காக நான் பரிந்து பேசுறேன் டொக்டர்.’’ இந்துவின் கண்களில் இநு;து ஒரு சொட்டுக் கண்ணீர் கசிந்தது. 

“ ஓக்கேம்மா…ஓக்கே…உன் பதிபக்தியை நான் புரிஞ்சுக்கிட்டேன்… இந்து… என் கிளினிக்ல கர்பிணிப் பொண்ணுங்களுக்கு ஸ்பெஷலா ஒரு லெக்சர் போட்டிருக்கேன்மா…நீயும் கலந்துக்கிறியா.’’ வைத்தியர் தன் கையுரையை கழற்றியவாறே கூற 
‘ஓ..வறேனே…’’ இந்து தன் காரில் கிளம்பினாள். 

பாதையில் ஒரு சின்னக் கலவரம்….
கலவரத்தினுல் வஸந்த்தின் முகம் தட்டுப்பட… ‘வஸந்த்…இங்க என்ன பன்றார்…’யோசித்தபடியே……

இந்து வண்டியை தன் டிரைவருக்கு ஓரமாய் நிறுத்தச்சொல்லிவிட்டு பட்டுப்புடவை சரசரக்க காரை விட்டு இரங்கினாள்.அருகில் உள்ளவர்களிடம் கேட்கையில் மனது ரணமாயிற்று. 
‘மேடம்… அந்த ஆளைப்பார்த்தால் டீஸன்டா இருக்காரு…அந்தப் பெண்ணோட கையைப்புடிச்சி இழுத்திட்டதா கம்ப்லைன்…அவ புருஷன் விட்றமாதிரி எனக்கு தோனலை.அதான் ஒரே ரகலை.அந்தப் பொண்ணப்பத்திதான்மா ஊரே பேசுது.விசாரனை நடந்துட்டு இருக்கு…’’ 
அந்த அம்மாள் கூறி முடிக்கையில் இந்துவின் உடம்பில் குருதி உரைந்தாற்போன்ற உணர்வில் சிலையானாள்.கண்கள் குளமாகிக் கசிந்தன.அங்கே…இந்துவின் கணவன் வஸந்த்தும் அருகில் மல்லிகாவுமமேதான்.தன் கண்கள் பொய் சொவல்லவில்லை என்பதை ஊர;ஜிதம் செய்துகொண்டாள்.மல்லிகாவின்  கைப்பையை கண்டதும் இந்துவிற்கு எங்கோ முள் தைத்த வலி.அதேபோன்று தனக்கும் வஸந்த் சிங்கப்பூரில் இறுந்து வந்து பரிசளித்த ஞாபகத்தை நொந்துகொண்டாள். 
இதயக்கொந்தலிப்பின் மத்தியிலும் கண்ணீரைத் துடைத்து நிதானமானாள்.

மனசு மறுத்தாலும் மூளை உரத்துச்சொன்னது கணவனைக்காப்பாற்றியாகவேண்டும் என்று. ஒரு முடிவுக்கு வந்தவளாய் தன் வண்டியை அனுப்பிவிட்டு மெதுவாய் மல்லிகாவை அனுகினாள்.
வஸந்த் அவமானத்தில் துவண்டான்.கண்களில் ஓர் அவமானக்கெஞ்சல்.இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை.இந்து கண் ணீரை மட்டுப்படுத்தும் முயற்சியில் தோற்றுக்கொண்டிருந்தாள். 
“சாட்சிகள் இல்லைங்குறதனால சம்பந்தப்பட்டவங்க வாங்க ஸ்டேஷனுக்கு…அங்கு போய் விசாரிக்குற விதத்துல விசாரிச்சாத்தான் உண்மை தானாய் வெளிய வந்துடும்…’’ கூறிய இன்ஸ்பெக்டருடன் வஸந்த்  மல்லிகா அவ புருஷன் உற்பட  இந்துவும் போலிஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுவரப்பட்டார்கள். 

வஸந்த்தை அவமானம் பிடுங்கித்தின்றது.துக்கம் தொண்டையில் சிக்கிக்கொண்டது
 ‘இந்து எத்தனை தடைவ என்கிட்ட கேட்டாள்…அந்த மல்லிகாவோட என்ன தொடர்புன்னு…அவளின்  நடத்தையை தப்பா பேசுராங்க கவனமா இருங்க…நான் அழுத்துப்போயிருந்தால் சொல்லிடுங்க…நல்ல பொண்ணாப்பார்த்து நானே உங்களுக்கு கல்யாணம் பண்ணி வெக்கிறேன்… ’ விம்மலினூடு வெளி வந்த இந்துவின் வார்த்தைக்கு தான் விட்டேற்றியாய் கூறிய பதில்…  
“எனக்கும் அவளுக்கும் இடையில் ஒன்னுமே இல்லை…நீயா ஏதும் கற்பனை பண்ணிக்காத…இவ்வளவு வளர்ந்திருக்கேன் என்னை காப்பாத்திக்க என்குத்தெரியவா என்ன?...’’ வரிகள்  காது மடலை காயப்படுத்தின. 
இந்த வலையில் இருந்து எப்படித்தப்பிக்கப்போறோம் என்ற குமைச்சல் அவனைப் பாடாய்ப் படுத்தின. 
“ மிஸஸ் இந்து…உங்க புருஷணுக்கும்…அந்த மல்லிகாவுக்கும்…’’ இன்ஸ்பெக்டரின் விசாரனையை இடை மறுத்த இந்து 
“ ஸொரி ஸேர் மல்லிகாவை இவ்வளவு தூரம் பேச விட்டதே தவறு…மல்லிகாவும் அவ புருஷனும் சேர்ந்து நாடகமாடுராங்க…நானும் என் புருஷனும் டொக்டர் சுகுமாரனை சந்திச்சிட்டு இந்த வழியா அவரின்ட கிளினிக் போய்க்கொண்டிருந்தோம்.வண்டியை மறிச்சி இவுங்க லிப்ட் கேட்டாங்க…வண்டியை நிறுத்துற கெப்பில்  என் வைர நெக்லஸை பறிச்சிட்டு ஓடப்பார;த்தாள். துரத்திப்போன என் புருஷனுக்கு அவமானப்பட்டமா? இது எந்தவகயில ஸேர் ஞாயம்…வேனுமென்றால் மல்லிகாவின் கைப்பையை சோதனை போடுங்க உண்மை வெளிப்படும்.’’ இந்து திக்கித்தினறி கூறுகையில் வியர்வை அவளை தெப்பமாய் நனைத்திருந்தது. 

மல்லிகா வெடவெடத்தப்போனாள்.
 “அவ பொய் சொல்றா நம்பாதிங்க …’’ மல்லிகாவின் உலறலைப் பொருட்படுத்தாமல் ஒரு லேடி கொன்ஸ்டபிள் மல்லிகாவின் கைப்பையை சோதனையிட அதிலிருந் து கிடைக்கப்பெற்ற வைர நெக்லஸைக் கண்டு மல்லிகா உற்பட வஸந்த்தும் அதிர்ந்துதான் போனான். 
“ஸொரி…மிஸ்டா் வஸந்த்… நடந்த தப்புக்கு வருந்துறோம்…நீங்க போகலாம் .’’ வீடு வந்த பின்னும் இன்ஸ்பெக்டரின் கம்பீரக்குரலை நம்ப முடியாமல் இருந்தது வஸந்த்திற்கு. 

தான் ஆண் என்ற திமிரில் இருந்து சற்று இரங்கி வந்தான் வஸந்த்.     “ இந்து…எனக்கு என்ன நடக்குதென்றே தெரியலம்மா…மல்லிகாவின் தொடர்பை ஏன் விடமுடியலைன்னு புரியமாட்டேங்குது…மல்லிகா என்னுடன்தான் வந்தாள்.புருஷனைக்கண்டதும் ப்ளேட்டயே மாத்திப்போட்டுட்டாளே…இப்ப நெனச்சால் அறுவறுப்பா இருக்கு…’’ நாதழுதழுக்க வஸந்த் தொடர்ந்தான். 
“ இவ்வளவு பெரிய விசயத்தை நீ எவ்வளவு ஸிம்பிளாய் எடுத்து என் மானத்தைக் காப்பாற்றினாய்…நீ… என்மேல்ல வெச்ச உண்மை பாசத்தை கண்டுக்காம என்னென்னமோ செஞ்சிட்டேன்…என்னை மன்னிச்சிக்க…’’ 
இந்துவின் குளிர்க் கரங்களை இறுகப்பற்றினான் வஸந்த் நன்றி மேலீட்டில். 
“நன்றியெல்லாம எதுக்குங்க…இந்த உலகத்துல சுயநலம் பார்க்காதவங்க தாயும் தாலி கட்டின மனைவியும்தாங்க…சந்தர்ப்பங்களை சுயநலத்துக்காக மாத்தியமைக்குறவங்கதான் அதிகம்.அத நீங்க புரிஞ்சிக்கனும்.’’என்றவள் போக முனைந்தாள். 
“ இந்து…உண்மையில் மனைவின்னா இப்படித்தான் இருக்கனும்…’’ வஸந்த் இந்துவின் முகத்தை பரிவுடன் தன் பக்கம் திருப்பினான். 
“நீங்க இன்னும் என்னை முழுசாப் புரிஞ்சிக்கலைங்க…நான் இன்னும் உங்களை விரும்புறேங்க…அதனாலதாங்க நேற்றுப்போலிஸ்டேஷன்ல இருந்தும்…கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க செஞ்சிக்கொள்ளப்பார;த்த தற்கொலை முயற்சியில் இருந்தும் உங்களைக் காப்பாற்றினேன்.ஆனால்… 

என்னதான் சொன்னாலும் நான் மல்லிகாட பையில் என் நெக்லஸை வேணுமென்றே வெச்சது தப்புதானே….அந்தக் குற்ற உணர்வு என்னை ந்ம்மதியா வாழ விடாதுங்கஅதுக்குப்பிராயச்சித்தம் பண்ணனுங்க… இனிமேபெயரளவில் மட்டும்தாங்க நாம புருஷன் பொண்டாட்டியா வாழ முடியும்.…மற்றும்படி நமக்குள்ள இனி எந்தவித ஒட்டுதலும் வராதுங்க… என்கிட்ட ஏதோ குறை இருக்குன்னு நெனச்சதாலதானே. நீங்க இப்படி பண்ணிட்டீங்க…எனக்கு நானே கொடுத்துக்குற தண்டணைதாங்க இது. நான் இனிமே இப்படியே வாழ முடிவு பண்ணிட்டேங்க.நீங்க இஷ்டப்பட்டா.. இன்னுமொரு கல்யாணம் பண்ணிக்கொங்கஎன்னை மன்னிச்சிடுங்க…’’விரக்தியின் உச்சகட்டத்தில் இருந்து அவளது வார்த்தைகள் வெளியாகின

ஊடைந்து நொருங்கியே போனான் வஸந்த்.” என்னை தற்கொலையே பன்னவிட்டிருக்கலாம்.தப்பை உணர்ந்தபின்னும் அணு அணுவாய் சாகடிக்கிறியே…’’முணுமுணுத்த வஸந்த் தன் மேல் முற்குவியலொன்று  வாரி இறைக்கப்பட்டதாய் உணர்ந்தான். 

          (யாவும் கற்பனை)

No comments: