Saturday, September 3, 2011

உருத்தெரியாமல் தகர்த்தவளுக்கு



பூக்களின் மகரந்தங்கள் போல
உனை ரகசியமாய் என்னில்
பதுக்கிய நாட்களிளெல்லாம்….


மெல்லிய அதிர்வுகளால்
ஒரு பூஞ்சோலையின்
சுகத்தினை வசப்படுத்தி
எனை வசியப்படுத்திவிட்டாய்…


இறுதிவரை இனிக்கும் அமுதமாய்
அடிநாக்கில் தித்தித்தாய்…

உன் ஓவியப் புன்னகையில்
ஒரு குழந்தையின் அழகை
ஒழித்துவைத்துக்கொண்டு
மூர்க்கத்தனமாய் முரண்டுபிடிக்க
எப்படி முடிந்தது உன்னால்….



ஏனென்று தெரிவதற்குள்
நம் காதலை கசக்கிப்பிழிய
அப்படி….
என்னடி நேர்ந்துவிட்டது….

உன்னால் நேசிக்கப்பட்ட
நாட்களைவிடவும் அதிகமாய்
அழுதோய்கிற நாட்களேயதிகம்…

கண்மணி….

சத்தமாய் வீசுகிற காற்று
என் ஊமைப்புண்களில் பட்டு
ரணகளமாக்கிச் செல்கிறதடி…


உனை உயிராய் மதித்த
என் காதலை…
உருத்தெரியாமல் தகர்த்தவளே….

என் ஆன்மாவின் வீதி நெடுகிலும்
வெள்ளைக்கொடிதான்
பரக்கவிட்டிருக்கிறேன்
ஒருமுறை வந்து பாரேன்…


  



பூக்களின் மகரந்தங்கள் போல
உனை ரகசியமாய் என்னில்
பதுக்கிய நாட்களிளெல்லாம்….


மெல்லிய அதிர்வுகளால்
ஒரு பூஞ்சோலையின்
சுகத்தினை வசப்படுத்தி
எனை வசியப்படுத்திவிட்டாய்…


இறுதிவரை இனிக்கும் அமுதமாய்
அடிநாக்கில் தித்தித்தாய்…

உன் ஓவியப் புன்னகையில்
ஒரு குழந்தையின் அழகை
ஒழித்துவைத்துக்கொண்டு
மூர்க்கத்தனமாய் முரண்டுபிடிக்க
எப்படி முடிந்தது உன்னால்….



ஏனென்று தெரிவதற்குள்
நம் காதலை கசக்கிப்பிழிய
அப்படி….
என்னடி நேர்ந்துவிட்டது….

உன்னால் நேசிக்கப்பட்ட
நாட்களைவிடவும் அதிகமாய்
அழுதோய்கிற நாட்களேயதிகம்…

கண்மணி….

சத்தமாய் வீசுகிற காற்று
என் ஊமைப்புண்களில் பட்டு
ரணகளமாக்கிச் செல்கிறதடி…


உனை உயிராய் மதித்த
என் காதலை…
உருத்தெரியாமல் தகர்த்தவளே….

என் ஆன்மாவின் வீதி நெடுகிலும்
வெள்ளைக்கொடிதான்
பரக்கவிட்டிருக்கிறேன்
ஒருமுறை வந்து பாரேன்…


  

16 comments:

Riyas said...

//உன் ஓவியப் புன்னகையில்
ஒரு குழந்தையின் அழகை
ஒழித்துவைத்துக்கொண்டு
மூர்க்கத்தனமாய் முரண்டுபிடிக்க
எப்படி முடிந்தது உன்னால்//

வாவ் சூப்பருங்க.. நல்லகவிதை

Riyas said...

தமிழ்மனம்,இண்ட்லி போன்றவற்றில் இனைக்கலாமே..

F.NIHAZA said...

நன்றி...
முயற்சிக்கிறேன்

Anonymous said...

நானும் இனி உங்கள் வாசகன்

rajamelaiyur said...

//

உனை உயிராய் மதித்த
என் காதலை…
உருத்தெரியாமல் தகர்த்தவளே….

என் ஆன்மாவின் வீதி நெடுகிலும்
வெள்ளைக்கொடிதான்
பரக்கவிட்டிருக்கிறேன்
ஒருமுறை வந்து பாரேன்…


//
அருமையான வரிகள்

rajamelaiyur said...

ஆசிரியர் தின வாழ்த்துகள்
என்று என் வலையில்

இவளுகளை என்ன செய்யலாம் சார்..?

Mohamed Faaique said...

///சத்தமாய் வீசுகிற காற்று
என் ஊமைப்புண்களில் பட்டு
ரணகளமாக்கிச் செல்கிறதடி…///

அழகான உவமானங்கள் கொட்டிக் கிடக்கு உங்க கவிதையில...

Mohamed Faaique said...

”About Me"ல பம்பஹா`னு உங்க மாவட்டம் பேரு போட்டிருக்கீங்க... திருத்திடுங்க..

நிரூபன் said...

வணக்கம் சகோதரி, ஒரு பெண்ணால் வஞ்சிக்கப்பட்ட ஆடவனின் உணர்வுகளை உங்கள் கவிதை தாங்கி வந்திருக்கிறது.

F.NIHAZA said...

நன்றி...நன்றி...


உருக்கத்தோட வாசிக்கறவர்களால் மட்டுமே
அனைத்தையும் ரசிக்க முடிகிறது...

நன்றி..தவறுகளை திருத்திக்கொள்கிறேன்

F.NIHAZA said...

பெண்களால் பெண்களாக மட்டுமல்லாது...
பல பரிமாணங்கலாக உருவெடுக்க முடியுமா என்று..
ஒரு சின்ன முயற்சிதான் இந்தக் கவிதை...

மகேந்திரன் said...

///உன் ஓவியப் புன்னகையில்
ஒரு குழந்தையின் அழகை
ஒழித்துவைத்துக்கொண்டு
மூர்க்கத்தனமாய் முரண்டுபிடிக்க
எப்படி முடிந்தது உன்னால்….///

குழந்தையின் முகத்தை வைத்துக்கொண்டு
எப்படி உன்னால் குணத்தில் மூர்க்கத்தனம்
காட்டமுடிந்தது.....
சரியான கேள்வி சகோதரி.
இன்று நிறைய பேர் அப்படித்தான் இருக்கிறார்கள்.

கவிதையின் சாரம் அழகு.

F.NIHAZA said...

ஆழமாக ரசிக்கிறீர்கள்...
ரெ்ாம்ப நன்றி

Nizam Farook said...

உன் ஓவியப் புன்னகையில்
ஒரு குழந்தையின் அழகை
ஒழித்துவைத்துக்கொண்டு
மூர்க்கத்தனமாய் முரண்டுபிடிக்க
எப்படி முடிந்தது உன்னால்….

arumai satru nekilavaikkum kavithai

Nizam Farook said...

உன் ஓவியப் புன்னகையில்
ஒரு குழந்தையின் அழகை
ஒழித்துவைத்துக்கொண்டு
மூர்க்கத்தனமாய் முரண்டுபிடிக்க
எப்படி முடிந்தது உன்னால்….

arumai satru nekilavaikkum kavithai

F.NIHAZA said...

வருகை்கு நன்றி சகோ....