Monday, September 26, 2011

உறவு

வெளியே தன் ஹொன்டாவை ஸ்டேன்ட் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தான் ஸாதிக்.முன் வராண்டாவில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்த பரீனா குர்ஆனை மூடி புக் ஸெல்பில் வைத்துவிட்டு கணவனின் அருகில் வந்ததும்..

”குழந்தைங்க சாப்பிட்டாச்சா….” ஸாதிக் கேற்க

“ஆமாங்க…அதெல்லாம் ஆச்சு… மஃரிப்கும் அதான் சொல்லியாச்சி…ஒரு நாளுமில்லாம இன்டக்கி ஏங்க இப்படி லேட்……”

”பணம் தேடி கொஞ்சம் அழைய வேண்டியதாயிற்று…புள்ளைங்க ரெண்டும் இங்க படிக்குது…நீ முதல்ல ஸ்ட்ரோங் டீ ஒன்டு போட்டு கொண்டு வா…”

ஸாதிக் அறைக்குப் போய் உடைமாற்றி  குளியலை முடித்துக் கொண்டு வந்தான்.குழந்தைகள் இரண்டும் அவனுடன் கொஞ்சம் விளையாடிவிட்டு மடிமேல் தூங்கவும் விரிப்பில் கொண்டு போய் படுக்க வைத்தான் ஸாதிக்.

“பரீனா…இந்த மாலை நல்லா இருக்காண்ணு பாரு…”

சமையல் கட்டிலிருந்து வந்தவள் 
” உங்க தங்கச்சீக்கா…அவ தந்ததவிட இது பாரமாவும் பார்வையாவும் இருக்கே…இப்ப நமக்கு இருக்கிற நெலமயில…ஒரு மஞ்சாடி அதிகம்ணாலும் கஸ்டம்தானே…இதுல ஒரு பவுன் அதிகமா இருக்குமா??? எப்படிங்க…”

“ பாரத்தை கரெக்டா கண்டுபுடிச்சிட்டியே…ஆமா…
நீ ஏன் அப்படி நெனக்கிறே…கஷ்டம்னு போய் நின்னப்ப என் தங்கச்சிதானே மாலையை தூக்கி தந்தாள்.நான்தானே அத திருப்பித் தர்ரேன்னு சொல்லி நாளைய திகதியை கொடுத்துட்டு வந்தேன்…”

 ” எனக்கு புரியுதுங்க…நீங் வெளிநாட்டுல சம்பாதிச்ச தெல்லாம் அவுங்களுக்காகத்தானே செலவழிச்சீங்க….சீர் செஞ்சு…கல்யாணம் பண்ணிவெச்சு…வீடும் கட்டிக்கொடுத்தீங்க…நம்ம வீடு கட்ட வாங்கின கடன் இது..வீட்டு வேலையே இன்னும் முடியலை…இப்ப நாம இருக்கிற நிலமைல….இந்த மாலையை உங்க தங்கச்சி வாங்கிக் கொண்டால்…அவ மனுஷியே இல்லை புரிஞ்சுக்குங்க..“பரீனா இயலாமையில் புலம்பவும்….
ஸாதிக்கின் குரல் உயர்ந்தது…

“ இந்தப் பொண்டாட்டிமாரே இப்படித்தான்…எங்க குடும்பத்துக்கு செலவழிக்குறோம்னாலே வயிறு எரிஞ்சுடுமே…”

” உண்மைய சொன்னா ஏங்க கோபப்படுரீங்க…அவ உங்களிடம் ஒன்றைப்போட்டு ஒன்பதைக் கரக்கப்பாக்குறா…உங்க முன்னாடி நடிக்குறா…என்னை நம்புங்க…“

பரீனா கூறி முடிக்கவில்லை அவளது கன்னங்களை ஸாதிக்கின் கரம் பதம் பார்த்துவிட்டது…

”இனிமே அவளப்பத்தி ஒரு வார்த்தை சொன்னே…நடக்குறதே வேற….நாளைக்கு நீ என்னுடன் என் தங்கச்சி வீட்டுக்குப் போக வர்ரே…அவ என்ன சொல்றான்னும் நீ கேக்கத்தான் போறே…”

ஸாதிக் விருட்டென்று அவ்விடத்தைவிட்டு நகர்ந்து அறைக்குள் சென்று விளக்கை அணைத்தான்….
பரீனா கண்ணீர் வடியும் கன்னத்துடனும்…மனதில் பட்ட காயத்தையும் பொருற்படுத்தாது…இறைவனைத் தொழுது…கணவனின் வெள்ளை மனசை புரிந்து கொள்ளாத உள்ளங்களை சபித்தாள்.மனித சுபாவங்களை புரிந்துகொள்ளும் பக்குவத்தை அளிக்கும்படி இறைவனிடம் மன்றாடினாள்…தொழுத பாயில் அழுதழுதே உறங்கிப்போனாள்..
மறுநாள் பொழுதும் புலர்ந்தது….கணவரின் தங்கை வீட்டுக்கும் வந்தாயிற்று…

”இந்தாம்மா உன் நகை…சொன்ன திகதிக்குள்  தந்திட்டேன் பார்த்தியா” 

ஸாதிக் கூறிய படியே மாலையை தங்கையின் கையில் திணித்தான்.

”ஐயோ வேண்டாம் நாநா …அவருக்கு தெரிஞ்சா திட்டுவாரு…நீங்க எனக்கு எவவளவோ செஞ்சிருக்கீங்க…”

விடாப்பிடியாக மறுத்தாள்…ஸாதிக் விடவில்லை எப்படியோ தங்கையை ஒத்துக்கொள்ளவைத்தான்..வெற்றிப் பெருமிதத்தில் மனைவி மீது சுட்டெரிக்கும் அணல் பார்வைகளை வீசிக்கொண்டிருந்தான்…

”தங்கச்சி இன்னக்கி இங்க விருந்து சாப்பிட்டுவிட்டுத்தான் போறோம்…நீங்க போய் சமைங்க நான் ஆட்டுக்கறி எடுக்க டௌனுக்குப்போய் வர்றேன்…”

ஸாதிக் கிளம்பவும் இருவரும் சமையல் கட்டுக்குள் நுழைந்தார்கள்.

”என்ன பரீன மதினி…மாலை நான் தந்த அளவு வெய்ட்தானே…”
மெல்லப் பேச்சைக் கொடுத்தாள்

”என்னமதினி அப்படி கேட்டுட்டீங்க உங்க நாநவபத்தி உங்களுக்குத் தெரியாவா? ஒரு பவுன் கூடுதலாவே எடுத்திருக்கிறாரு…“

”இல்ல…வெய்ட் கொஞ்சம் கம்மியா இருக்கிற மாதிறி இருக்கு… எதுக்கும் நான் நாளைக்கு நகைக்கடைக்குப்கோய் வெய்ட் பார்த்துட்டு சொல்லி அனுப்புறேன்…வெய்ட் கொஞ்சம் அங்கால இங்கால ஆச்சுன்னா…மாத்தித் தந்திடுங்க என்ன?...இப்படி சின்னச்சின்ன விசயங்களை வீட்டுக்காரருக்கு தெரியப்படுத்தனுமென்றில்லை…நாநவும் தெரிஞ்சுக்கொள்ள தேவலை…” 

பேச்சோடு பேச்சாய் கணவனின் தங்கை கூறுவதைக் கேட்கயில்…ஆச்சர்யமென்றோ..அதிசமென்றோ…பரீனாவுக்குத் தோண்றவில்லை…
ஆனால் ஆட்டுக்கறி எத்தனை கிலோ வேண்டுமென்று கேற்க… திரும்பி வந்த ஸாதிக்கிற்குத்தான்…….மனசு வெடித்துச்சிதறியது…. மெளனமாய் கேட்டுக்கொண்டிருக்கும் மனைவி பரீனாவை பரிதாபமாய் பார்த்துவிட்டு…வந்த சுவடுதெரியாமல் திரும்பிப்போனான் ஸாதிக்

           (  யாவும் கற்பணை  )

நன்றி வேகம் பதிப்பகம்...

    வேகம் பதிப்பகம்: சிறுகதை: ............................................................................................................................ ...

9 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அக்காச்சி,

நல்லதோர் சிறுகதை- குறுங்கதை.
திருப்தியற்ற மனித மனங்களின் உணர்வுகளை தத்ரூபமாகச் சொல்லி நிற்கிறது இச் சிறுகதை.

உங்களின் வலைப் பதிவினை இன்றைய தினம் என் பதிவில் அறிமுகப்பத்தச் சந்தர்பம் கிடைத்ததையிட்டு அகம் மகிழ்கின்றேன்.

F.NIHAZA said...

மிக்க சந்தோஷம்....
ஆக்கம் ஒருவரின் படைப்பு..
அவை அங்கீகாரம் பெறும்போது கிட்டுகிற அதே சந்தோஷம்தான்...அவை பிறரால் வாசிக்கப்படுகிறது என அறியும் போதும் கிட்டும்...
உண்மைதானே....

ஸ்ரீராம். said...

இது மாதிரி மனிதர்களைப் புரிந்து கொள்ள இறைவன் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தை சாதிக் மாதிரி அப்பாவி மனிதர்களுக்கு தந்து விடுகிறார்.நிரூபன் ப்ளாக் அறிமுடம் பார்த்து வந்தேன். எளிய சம்பவத்தில் நிறைவான கதை.

K.s.s.Rajh said...

வணக்கம் சகோதரி..
உங்கள் தளத்தை இன்று நண்பர் நிரூபன் தனது நாற்று தளத்தில் பதிவர் அறிமுகத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார்..அதை பார்த்துவிட்டுத்தான் உங்கள் தளத்திற்கு இன்று முதன் முதலாக வருகின்றேன்..உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றது வாழ்த்துக்கள்..இனி தொடர்ந்து வருவேன்.
அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்

இதுபோன்ற சம்பவங்கள்...வாழ்க்கைல ஏராளம்...
கண்மூடித்தனமான நம்பிக்கையின் விளைவே இது....
வருகைக்கு மிக்க நன்றி....

F.NIHAZA said...

K.s.s.Rajh said...
வணக்கம் சகோதரி..
உங்கள் தளத்தை இன்று நண்பர் நிரூபன் தனது நாற்று தளத்தில் பதிவர் அறிமுகத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார்..அதை பார்த்துவிட்டுத்தான் உங்கள் தளத்திற்கு இன்று முதன் முதலாக வருகின்றேன்..உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றது வாழ்த்துக்கள்..இனி தொடர்ந்து வருவேன்.
அன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்

வருகை சந்தோசத்தை தருது...
தொடர்ந்து வாருங்கள் ..ஊக்கப்படுத்துங்கள்...

F.NIHAZA said...

தம்பி நிரூபனுக்கு என்றென்னும் எனது நன்றிகள்....
தங்கள் பதிவில் அறிமுகப்படுத்தியதற்கு...

F.NIHAZA said...

தமிழ் 10 இல் பதிவேற்றும் போது முறையற்ற தலைப்பு என்று வருவது ஏன்...
தெரிந்தவர்கள் யாராவது தெளிவு படுத்துங்களேன்..

வலையுகம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இயல்பான கதையமைப்பு கொண்ட பதிவு
வாழ்த்துக்கள் சகோ