Saturday, October 1, 2011

நீயே என் சுவாசம் 04

நீயே என் சுவாசம் 01
நீயே என் சுவாசம் 02
நீயே என் சுவாசம் 03

அத்தியாயம்-04

ரிஷியின் மூளையை ஏதோ ஒன்று குடைந்து கொண்டே இருந்தது.இரவு உடையில் இருந்தவன் குளியலறைக்குள் சென்று முழுதாய் பத்து நிமிடங்களைக் கரைத்தான்.குளியலை முடித்துக் கொண்டவன் நீல நிர பேன்ட் இற்கும் முழு நீளக்கை சேர்ட்டிற்கும் மாறினான்.

கண்ணாடி முன் நின்று தலையை சீராக வாரிக் கொண்டான்.கண்கள்தான் சிவந்திருந்தன.இரவு முழுதும் மானிஷாவின் நினைவுகளில் தூக்கத்தை தொலைத்திருந்தான்.அவளுக்குள் புதைந்திருக்கும் ரகசியங்களை எப்படிவெளிக்கொணர்வது.குழம்பிப்போனான் ரிஷி….

அனைத்தையும் மீறி…அவளது அழகும் ..அடக்கமும் …ரிஷியை பாடாய்ப்படுத்தியது.
“இன்னிக்னு ரெண்டுல ஒன்னு உறுதியா கேட்டுவிட வேண்டியதுதான்..”

தீர்மானமாய்… வண்டியை மருத்துவமனைகக்குச் செலுத்தினான் ரிஷி.
சாலையில் ரிஷியின் வண்டி சீராக ஓடிக்கொண்டிருந்தது….அந்த அமைதி அவனது மனதை வதைத்தது…மெதுவாய் வானலை வரிசையொன்றை முடக்கினான்.….

“ உன்னோடு வாழும்
பொன்னான வரம் பெற்று…
சந்தோச சாரலில்
தெப்பமாய் நனைந்துவிட
தருணம் பார்க்கிறேன்….
அன்பே…..
 என் உயிர் என்றேனும்
 ஒருநாள் உதிரும்…
அப்படி உதிரும்
கணங்களில் கூட….
உன்னுடன் ஒட்டிக்கொள்ளவே
இவள் இதயம் ஏங்கிக் கிடக்கும்…“

இளமை ததும்பும் பெண் குரலொன்று கவிதையின் வரிகளை வாசித்து முடிக்க
அறிவிப்பாளர் பாராட்டித் தீர்த்தார்…
“அடுத்த நேயருக்கான கவிதை வாசிக்கும் வாய்ப்பு இதோ…அழைப்பில் யாரம்மா…”

ரேடியோ ஹலோ… கவிதையில்…அசத்திககொண்டிருக்க…ரிஷி முன்னைய கவிதையில்…மனதைத் தொலைத்திருந்தான்….

காதலின் இம்சையில் நொந்து போனான்…ஏனோ…மனசு ரணமாகிற்று….

மானிஷாவை பிரிய நேரிடுமா….இப்படி நேர்ந்துவிடும் சமயங்களில் என்னிலமை என்னவாகும்….நினைக்கவே பயமாய் இருந்தது ரிஷியிற்கு….

வண்டியின் முன் குறுக்கிடும் சின்ன நாய்க்குட்டி மங்கலாய்த் தெரிய திடீர் ப்ரேக் போட்டு வண்டியை ஒருவாறு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குள்…உயிர் மரணவாசலைத் தொட்டுவிட்டு வந்த உணர்வில் உரைந்தே போனான்…..

வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தினான். மெதுவாய் மூச்சை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாசுப்படுத்திக் கொண்டான்…

“இது சரிப்பட்டுவராது…இதுக்குஏதாச்சுத் செஞ்சேயாகனும்….“

யோசித்தவன்…ரூட்டை மாற்றி…..அர்ஜுன் வீட்டுக்கு வண்டியைத் திருப்பினான்.ஏதாவது தகவல் கிட்டும் என்கிற எதிர்பார்ப்பில்…
அர்ஜுன் தன்னை மறந்து தூங்கிக்கொண்டிருந்தான்.ரிஷி மெதுவாய் குரல் கொடுத்தான்….ம்ஹீம் அவன் அசையவேயில்லை….

“ இந்தாப்பா டீ எடுத்துக்கோ…”

“ தேங்க்யூ பாட்டி…ஏன் இவன் இப்படித்தூங்குறான்…எவ்வளவோ எழுப்பியும் எழும்பவே மாட்டேங்குறான் பாட்டி…”

“ ஏன்டா தூங்க மாட்டான்….ராத்திரி வெளிய போனவன்…காலைலதான் வந்து தூங்குறான்…எங்க போறான்…என்ன பன்றான்னே தெரியமாட்டேங்குதுப்பா…யார்…யாரெல்லாமோ..வீட்டுக்குவராங்க….யார்கூட எல்லாமோ…உரத்து உரத்து பேசுறான்…எனக்கென்னவோ இதெல்லாம் சரியா படலைப்பா…நீயாவது பேசிப்பார்க்கக் கூடாதாப்பா…” அர்ஜுனின் பாட்டி தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்தாள்

“ விடுங்க பாட்டி…இப்போ இதெல்லாம் சகஜமா நடக்கிறதுதானே… யாரையும் தப்பா நெனக்க முடியுதில்லை பாட்டி …கவலைப்படாதிங்க….நல்ல பொண்ணாப் பார்த்து சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க…ஒருவேலை அவன் திருந்திடுவான்…”பாட்டியை சமாதானப்படுத்த முயன்றான் ரிஷி….

“ நான் நினைக்கலை..இது சரியாவரும்னு….பொண்ணுங்கன்னாலே எரிஞ்சு விழறான்…கல்யாணத்தப்பத்தி பேசினாலே என்னா குதி குதி குதிக்குறான்…. ….வாழ வேண்டியவங்க..அநியாயமா மேல போயிட்டாங்க… இந்த வயசான காலத்துல எனக்கு என்ன சோதனையோ…”

 கண்களில் வழிந்த கண்ணீரை சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண்டு விசும்பினாள் அந்த வயசான பாட்டி.

“ நீங்க கவலைப்படாதிங்க பாட்டி…நான் பாத்துக்கறேன்….”

 தேநீர் பருகி முடிந்த போப்பையை வாங்கிய பாட்டி கண்ணீரைத்துடைத்தபடியே அவ்விடம் விட்டகன்றாள்

ரிஷி அர்ஜுனின் அருகே சென்றான்…

“இவனை தண்ணீரால் அபிஷேகம் பண்ணனால்தான் எழுந்திடுவான் இரிடா வர்ரேன்…”

முணுமுணுத்த ரிஷி…மேசை மீது வைத்திருந்த தண்ணீர் ஜாடியை எடுக்கப் போனவனின் கண்களில் அந்த ஃபோட்டோ தட்டுப்பட திடுக்கிட்டான் ரிஷி….ஃபோட்டோவில் சிவப்பு மையால் ஆழமான பெருக்கல் குறி இடப்பட்டிருந்தது…

“ என்ன..மானிஷாவின் ஃபோட்டோ இங்கெப்படி….அதுவும் அர்ஜுனின் அரவனணப்பில்…” புகைப்படத்தை திருப்பிப்பார்த்தவனுக்கு மேலும் அதிர்ச்சி…

“ உன்னைப்பழிவாங்காமல் விடமாட்டேனடி…”

அர்ஜுனின் கிறுக்கலைப் பார்த்த ரிஷிற்கு தலைசுற்றாத குறைதான்…மேலன்னத்தில் ஒட்டிய நா நகர மறுத்தது…இதயம் படபடவென அடிக்கத் துவங்கியது…

என்ன நடக்கறதென்பதை ரிஷியால் உணர்ந்து கொள்ள முடியவில்லை….மானிஷா ஏதோ ஆபத்தில் சிக்கி இருக்கிறாள் என்பதை மட்டும் தெள்ளத் தெளிவாக உணர்ந்துகொண்டான்….

வடைபெற்ற ரிஷி மருத்துவமனைக்குப் போகப்பிகடிக்காமல் தன் வண்டியை கடற்கரைக்கும் போகும் சாலைக்குள் ஊரவிட்டான்….

“அர்ஜுன் உனக்காய் பீச்சில் காத்திருக்கிறேன்…எத்தனை மணியானாலும் பரவாயில்லை …எழுந்ததும் வந்துவிடு…”

 வொய்ஸ் மெயில் ஒன்றை அனுப்பிவிட்டு காத்திருற்தான் அர்ஜுனுக்காக.

                                                                                                                         தொடரும்....

                                                                                                              நீயே என் சுவாசம் 05

5 comments:

Mohamed Faaique said...

////என்ன நடக்கறதென்பதை ரிஷியால் உணர்ந்து கொள்ள முடியவில்லை////

எங்களுக்கும்தான்.. கத சூடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறது

F.NIHAZA said...

ஆமாம்...
கதை சூடு பிடிக்கத் துவங்கியாச்சு...
வருகைக்கு நன்றி பாயிக்....

K.s.s.Rajh said...

கதை சூடு பிடிக்கின்றது வாழ்த்துக்கள் சகோ

MANO நாஞ்சில் மனோ said...

தொடர்கதை ம்ம்ம்ம் அருமையா இருக்குங்க....!!!

நீங்க கத்தார்லையா இருக்கீங்க...?? நானும் உங்க பக்கத்து ஊரான பஹ்ரைன்லதான் இருக்கேன் ஹே ஹே ஹே...

F.NIHAZA said...

ஆமாம் sir...கட்டார்லதான் இருக்கேன்...
வருகைக்கு நன்றி sir