Tuesday, October 4, 2011

நீயே என் சுவாசம் 05

அத்தியாயம் 05

மானிஷா மதியமே வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்….

ரிஷிவேறு மருத்துவமனையில் இல்லை என்பது 
மானிஷாவின் மனதை காயப்படுத்தி ஏமாற்றத்தையே கொடுத்தது…

…சில சம்பவங்களிலிருந்து அவளால் இன்றுவரை
 மீள முடியாமலும் அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமலும்
 தவித்தவளுக்கு… 
ரிஷி அவளது மனதை வெகுவாகக் கவர்ந்த போதும்
…ரிஷியிற்கு தான் தகுதியற்றவள் என்றே உள் மனது கூவிக்கொண்டிருந்தது….
அந்த மன உழைச்சலிலிருந்து 
தன்னை விடுவித்துக்கொள்ள பெரிதும் போராட வேண்டியதாயிற்று…..

அழுப்போடு வந்த மானிஷா
தன் மாற்று சாவியை எடுத்து கதவை திறந்தாள்.கதவை தாளிட்டு முன் கூடத்துக்கு வந்தாள்….அங்கே…..

பரணியை தொற்றிக் கொண்டிருந்தாள் மிடியுடன் வந்த மொடன்……ஒருத்தி

“ சீ ” 

என்றவள் அதிர்ச்சியடையவில்லை…
அறுவருத்து முகத்தை திருப்பிக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.
கதவை மூடிவிட்டு கைப்பையை மேசைமீது வைத்தவள்
 கட்டிலில் வீழ்ந்து தலையணையை கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்தினாள்….

இது அங்கு நடக்கும் தொடர்கதைதான்….என்ன…
அத்தனை நாளும் அந்தக்கலியாட்டம் இரவில் நடந்தது
…இன்று பகலிலேயே ஆரம்பமாகியிருந்தது…அவ்வளவுதான்….

பரணியின் அணைப்பிலிருந்த அந்த மொடன் அவனது கேசங்களை வருடியபடியே….

“ யாரு டாலிங் அது….மேனஸே இல்லாம….” போதை ஏற்றும் குரலில் சிணுங்க

“ என்..மாமா பொண்ணு….அழகின்னு நெனப்பு…அவ கெடக்குறா..விடும்மா…”

அவர்களின் கொஞ்சுதலும் குழாவுதலும்…சுவர்களையும் தாண்டி மானிஷாவின் காது மடலைக் கடித்துக் காயப்படுத்தின…...

“ மாமா பொண்ணுதான்டா….
மாமா பொண்ணுங்கள நடத்துறவிதமாடா எங்களை நடத்துறே
…அயோகக்கயனா மாறி எங்க வாழ்க்கைல பூந்து கெடுத்து
 குட்டிச்சுவராக்கிட்டியே பாவி….உனக்கு நல்ல சாவு வரவே வராதுடா…….”

ஆத்திரம் தீர அழுது தீர்த்தாள்…
தன் தங்கைக்காய் அத்தனை அவமானங்களையும் தாங்கி நொந்துபோனாள்
கண்ணீரை துடைத்து சாபத்தை தூவினாள்….

ஒரு முடிவுக்கு வந்தவளாய் எழுந்து பேனா காகிதம் சகிதம் வந்தமர்ந்தாள்.
ரிஷியிடம் அத்தனை உண்மைகளையும் சொல்லிவிடுவதென்று…
காகிதத்தில் …நடந்தவற்றை கிறுக்கித்தள்ளினாள்…

முடிந்தாள் தன்னைக் காப்பாற்றி…

மனைவியாய் ஏற்கும் படி அன்புக்கட்டளை 
இட்டு கடிதத்தை நிறைவு செய்து
 கையொப்பமிட்டு மடித்து கைப்பைக்குள் பத்திரப்படுத்தினாள்….

என்னதான் மனதின் பாரத்தை கடிதத்தில் 
கொட்டித் திணித்தாலும்…பெண்மையின் மனது சும்மா இருக்கவிடவில்லை.

யதார்த்தங்களின் பிடியில் இதெல்லாம்
 சாத்தியமாகுமா இல்லையா என்கிற தேடலில்
 தன் நிம்மதியை தொலைத்துக் கொண்டிருந்தாள் மானிஷா
…அன்று முழுதும் அறைக்குள்ளேயே  அழுது…அடைபட்டிருந்தாள்….

                                          தொடரும்....
                                           நீயே என் சுவாசம் 06

6 comments:

Mohamed Faaique said...

தூக்கம் வருது.. நாளை வந்து படிக்கிறேன்(இன்ஷா அல்லாஹ்).இப்போ ஓட்டு போட்டாச்சு...

F.NIHAZA said...

ஓக்கே...
தூக்கம் கலைந்திருந்தால் மன்னிக்கவும் சகோ....

Mohamed Faaique said...

இந்த அத்தியாயம் ரொம்ப அழுகாச்சி`யிடுச்சு...
அடுத்த அத்தியாயங்களில் இன்னும் நிறைய முடிச்சுக்கள் அவிழும்`னு நினைக்கிறேன்..

F.NIHAZA said...

அவிழும் என்றுதான் நினைக்கிறேன்....

நிரூபன் said...

இனிய வணக்கம் அக்காச்சி

வேதனையினைச் சுமந்து இந்தப் பாகம் நகர்கிறது, அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

F.NIHAZA said...

வருகைக்கு மிக்க நன்றி...