Saturday, September 17, 2011

நீயே என் சுவாசம் 01

    அத்தியாயம் 01

டொக்டர்….
மூன்றாம் நம்பர் வோர்ட்ல இருக்கிற பேஷன்ட்கு  இன்ஜெக்ஷன்  ரிப்ளை பண்ணுதில்லை..நீங்க கொஞ்சம் வந்தீங்கன்னா….”

சீருடையில் வந்த நர்ஸ் கூற…

“ ஓக்கேம்மா…நீங்க போங்க..இதோ நானும் கிளம்பிட்டேன்…”

கோட்டை சரிசெய்து ஸ்டெதஸ்கோப்பை கையில் சுழற்றியவாரே விரைந்தான் டொக்டர் ரிஷி.

“ நர்ஸ்…இவரு சீரியஸ் கண்டிஷன்ல இருக்காரு..ஒப்பரேஷன் பண்ணியாகனும்…தியேடருக்கு கொண்டுபோங்க…டொக்டர் மானிஷாவையும் தியேடருக்கு வரசொல்லுங்க…”
 ரிஷி கூறிவிட்டு அவசரமாய் நகர்ந்தான்.

மிதமான ஏ.சியின் குளிரில்….ரிஷி பச்சை நிற மாஸினால் மூக்குவரை மறைத்துக்கொண்டு மும்முரமானான்.மானிஷா வியர்க்க வியர்க்க தியட்டர் உள்ளே நுழைந்தாள்.கழுத்து நெற்றி இவற்றை அடிக்கடி கைக்கட்டையால் ஒற்றிக்கொண்டள்

“என்ன?”  என்று ரிஷி விழிகளால் வினவ
 “ இல்லை ” என்பதைப்போல் மானிஷாவும் தலையசைத்துவிட்டு அருகே இருந்த பச்சை நிற மாஸை  அணிந்துகொண்டாள் மானிஷா.

கிட்ணி சத்திர சிகிச்சை என்பதனால் மிகவும் நுணுக்கமாக செயல் பட்டனர்.ஆனாலும் இடைக்கிடை ரிஷியின் கண்களும் மானிஷாவின் கயல் விழிகளும்சங்கமித்து சட்டென விலகிக்கொண்டன.

ரிஷி அறுந்த உறுப்புகளை ஒன்றிணைக்கும் முயற்சில் இறங்க…மானிஷா சேதமடைந்த குருதியை துடைத்து ஒற்றி…தையல்போடுவதற்கான உதவிகளை செய்ய இருவரின் கரங்களும் முட்டிக்கொண்டன.
மானிஷா அப்போதெல்லாம் கையை தன் பக்கம் இழுத்துக்கொண்டாள்.கையுறை அணிந்திருந்தாலும் அந்த ஸ்பரிசம்  இருவரையும் என்னவோ பண்ணியது.

ரிஷியின் கண்களில் காதல் மின்னுவதை அவளால் வெகு நேரம் உற்று நோக்க முடியவில்லை.ரிஷியின் கண்கள் அவளை நோக்க அவளது கண்கள் பனிந்தன.

“ ஸக்ஸஸ் ” 

என்றான் ரிஷி வாயை மறைத்த திரையை அகற்றியவாறே.மானிஷாவுக்கு திக் என்றது.புருவங்களை உயர்த்தி கேள்விக்குறியாக்கினாள்.
அதனைப் புரிந்த ரிஷி

 “ ஓப்பரேஷன் ஸக்ஸஸ் ” என்றான் கிண்டலாய்.

 ஏதோ திருப்தியடைந்தவளாய் புன்னகையொன்றை உதிர்த்திவிட்டு கைகளைக்கழுவி தொங்கவிடப்பட்ட டவலில் கைகளை அழுத்தித்துடைத்தாள்.மெதுவாய் ரிஷியைப் பார்த்து

 “ உங்களை வாழ்த்தனும்னு தோணுது..”என்றாள் மெதுவாய்.

“ அதெல்லாம் எதுக்கு தினம் எத்தனை ஓப்பரேஷன் பண்றோம்.இதுக்குப் போய்.”
மானிஷாவின் கைகளில் இருந்த டவலை வாங்கித் துடைத்தபடியே கூறினான் ரிஷி.

“ சொல்லனும்னு தோணிச்சு….”

மானிஷா கூற ரிஷியின் கண்கள் மலர்ந்தன.
ரிஷி கோட்டை களைந்து கைகளில் தொங்கவிட்டபடி ரூமைவிட்டு வெளியே வந்தான்.ரிஷியைப் பின் தொடர்ந்தாள் மானிஷா.ரிஷி சிரித்துச் சிரித்துக் கதைத்தான்.மானிஷாவால் முடியவில்லை.ஏதோ ஒரு உணர்வலை அவளை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது.

“ என்ன நிஷா. நான் கேட்ட கேளிவிக்கு பதிலயே காணோம்…பிடிக்கலைன்னா சொல்லிடுங்க..”

நிஷா என்று அவளை ஒற்றையாய் அழைத்தது இதுதான் முதல் தடவை…இன்னும் குழம்பிப் போனாள்…

“ என்ன டொக்டர்…என்ன கேட்டீங்க…“ என்றாள் பதட்டமாக…

“ கென்டீனுக்குப் போய் டீ… கொஃபீ ஏதாவது குடிப்போமான்னு கேட்டேன்…ஜஸ்ட் ஒரு கப் டீ தானே…இதுக்குப் போய் ஏங்க இப்படி டென்ஷன் ஆகி…யோசிச்சு பதில் சொல்றீங்க.”.

“ இல்லை…ஏதோ யோசனை அதான்…ஓக்கே.. போலாலாமே..”

கேன்டின் போய் இருவரும் அமர்ந்தாலும்…ஒருவர் முகத்தை ஒருவர் நேரடியாகப் பார்ப்பதற்கு இருவருமே சங்கடப்பட்டனர்.இரண்டு டீயை ஓடர் பண்ணிவிட்டு அமைதியாய் மானிஷாமீது பார்வையைத் திணித்தான் ரிஷி.

“ மானிஷா…எப்ப பார்த்தாலும் அமைதியா சாந்தமா இருக்கிறீங்களே..எப்படி ஒங்களால மட்டும் இப்படி இருக்க முடியுது.”

மானிஷா புன்னகையைப்  பதிலாக்கினாள்.டீ வங்தது.இருவரும் மெல்ல உறிஞ்சினர்.

“ என்ன டொக்டர்…எல்லாவற்றுக்குமா இந்த மௌனம்…இந்த மெளனத்தின் பின்னாடி ஏதாவது அர்த்தம் இருக்குமோ?...ஏதாவது பிரச்சினையா…”
ரிஷி வினவ…

“சீச்சீ…அப்படி ஒன்னுமில்லை டொக்டர்…எப்பவும் போல இயல்பாத்தான் இருக்கேன்…”
பார்வைகளை எங்கோ செலுத்தியபடி மானிஷா பதிலளித்தாள்.

“ நிஷா உங்ககிட்ட நான் ஒன்னு கேக்கலாமா..? ”

“ கேக்கலாமே…”

 தைரியமாய் இவளின் உதடுகள் வார்த்தைகளை கொட்டினாலும்…உள்ளே….இதயத்துடிப்பு பன்மடங்காகிற்று.

“ ரொம்ப நாளா சொல்லனும்னுதான் நெனக்கிறேன்…எப்படின்னுதான் ….
ஆனாலும் சுத்தி வளைச்செல்லாம் எனக்குப் பேசத்தெரியலை…ஆனா நீங்க தப்பாவும் நினைக்கக் கூடாது…எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு மானிஷா…”

சொல்லிவிட்டு கண்களை ஒரு கனம் இருக மூடிக் கொண்டான் ரிஷி.

                                                         தொடரும்...... 

                                                                 நீயே என் சுவாசம் 02

Monday, September 12, 2011

நிக்காஹ்

நிகழ்வுகளால் நினைவுகள்
அலங்கரிக்கப்படுகிறது…

இதயங்களை சுகப்படுத்தி
எண்ணங்கள் சுத்திகரிக்கப்படுகிற…
ஒரு புனித யாத்திரை இது….

இருபாலின இருதயங்களின்
ஒருமித்த பயணமிது…

அன்பார்ந்த பூக்கள்
அர்ச்சிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்படுகிற
அருந்தவ நிகழ்விது…

நிக்காஹ் முடிந்த கையோடு
முற்றுப்பெறலாகுமா?

மணவாழ்வினுள்

மனங்கோணாது
பிஸ்மியுடன் திருப்பாதம் பதியுங்கள்

இயன்றவரை முழுமனதாய்
புன்னகை கொடுங்கள்
உங்கள் துணைகொண்டு
இதயவரிகளை இன்பப்படுத்துங்கள்…

விட்டுக்கொடுத்து
நேசக்கரங்களால் நீவி விடுங்கள்…

ரணங்களை விரட்டியடித்து
மனங்களை ஆளப்பழகுங்கள்…

அன்பை மட்டுமே 
போதிக்கப் பழகுங்கள்...

இன்சொல்லை மாத்திரம்
 உச்சரியுங்கள்...

இயன்றவரை 

பாசத்தை சுவாசியுங்கள்...

இருதயங்களை வசீகரிக்கிற
வித்தைகொண்டு
கணவானின் கருத்தோடு
ஒன்றித்துப் போங்கள்...

இறைவனின்
திருப் பொருத்தம் நாடுங்கள்…
குடும்ப வாழ்க்கையும்  
ஓர் இபாதத் ஆகும்

நிகழ்வுகளால் நினைவுகள்
அலங்கரிக்கப்படுகிறது…

இதயங்களை சுகப்படுத்தி
எண்ணங்கள் சுத்திகரிக்கப்படுகிற…
ஒரு புனித யாத்திரை இது….

இருபாலின இருதயங்களின்
ஒருமித்த பயணமிது…

அன்பார்ந்த பூக்கள்
அர்ச்சிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்படுகிற
அருந்தவ நிகழ்விது…

நிக்காஹ் முடிந்த கையோடு
முற்றுப்பெறலாகுமா?

மணவாழ்வினுள்

மனங்கோணாது
பிஸ்மியுடன் திருப்பாதம் பதியுங்கள்

இயன்றவரை முழுமனதாய்
புன்னகை கொடுங்கள்
உங்கள் துணைகொண்டு
இதயவரிகளை இன்பப்படுத்துங்கள்…

விட்டுக்கொடுத்து
நேசக்கரங்களால் நீவி விடுங்கள்…

ரணங்களை விரட்டியடித்து
மனங்களை ஆளப்பழகுங்கள்…

அன்பை மட்டுமே 
போதிக்கப் பழகுங்கள்...

இன்சொல்லை மாத்திரம்
 உச்சரியுங்கள்...

இயன்றவரை 

பாசத்தை சுவாசியுங்கள்...

இருதயங்களை வசீகரிக்கிற
வித்தைகொண்டு
கணவானின் கருத்தோடு
ஒன்றித்துப் போங்கள்...

இறைவனின்
திருப் பொருத்தம் நாடுங்கள்…
குடும்ப வாழ்க்கையும்  
ஓர் இபாதத் ஆகும்