Wednesday, September 7, 2011

என்னை உனக்கு நினைவு வருவதே இல்லையா..!!??

என்னை உனக்கு
நினைவு வருவதே இல்லையா...

பழைய கொப்பிகளின்
பின் பக்கத்தில்
நான் கிறுக்கித்தந்த
பாடல்களைப்
பார்க்கும் பொழுதாவது...

இல்லை
நேற்றைய நினைவுகளை
நேர்த்தியாக்கும்

நேற்றைய காற்றை கேற்கும் பொழுதாவது...


ஏகாந்தத்தில்
ஏக்கப் பெருமுச்சோடு மூச்சடக்கி
விழிகள் அயரும்
பொழுதுகளில்...இல்லை
கனவிலேனும்...

ஒரு ரம்யமான பொழுதில்...
நீ எனக்குப்பரிசளித்து
பின்னொரு நாளில்

நான் திருப்பித்தந்த-அந்த

கைக்கட்டையை பார்க்கும் பொழுதாவது...

மழை பெய்து 
ஓய்ந்து போன தெருக்களில்
புத்தகக்கட்டை
மார்போடணைத்து
விழிகளில் நீர் தேங்க
மௌனமாய் நான் 
பயணிப்பதாக
ஒரு பிரம்மையில் கூட...

மழைக்கு ஒதுங்கிய
 என் குடையை 
திருப்பித்தராத கணங்களில்..
அதைக் கொடுக்கமுடிவில்லையே 
என்கிற கவலையிலாவது

என்னை உனக்கு
நினைவு வருவதே இல்லையா....
என்னை உனக்கு
நினைவு வருவதே இல்லையா...

பழைய கொப்பிகளின்
பின் பக்கத்தில்
நான் கிறுக்கித்தந்த
பாடல்களைப்
பார்க்கும் பொழுதாவது...

இல்லை
நேற்றைய நினைவுகளை
நேர்த்தியாக்கும்

நேற்றைய காற்றை கேற்கும் பொழுதாவது...


ஏகாந்தத்தில்
ஏக்கப் பெருமுச்சோடு மூச்சடக்கி
விழிகள் அயரும்
பொழுதுகளில்...இல்லை
கனவிலேனும்...

ஒரு ரம்யமான பொழுதில்...
நீ எனக்குப்பரிசளித்து
பின்னொரு நாளில்

நான் திருப்பித்தந்த-அந்த

கைக்கட்டையை பார்க்கும் பொழுதாவது...

மழை பெய்து 
ஓய்ந்து போன தெருக்களில்
புத்தகக்கட்டை
மார்போடணைத்து
விழிகளில் நீர் தேங்க
மௌனமாய் நான் 
பயணிப்பதாக
ஒரு பிரம்மையில் கூட...

மழைக்கு ஒதுங்கிய
 என் குடையை 
திருப்பித்தராத கணங்களில்..
அதைக் கொடுக்கமுடிவில்லையே 
என்கிற கவலையிலாவது

என்னை உனக்கு
நினைவு வருவதே இல்லையா....

11 comments:

Riyas said...

//என்னை உனக்கு
நினைவு வருவதே இல்லையா..//

யார கேட்கிறிங்க ஓ..

Riyas said...

//இல்லை
நேற்றைய நினைவுகளை
நேர்த்தியாக்கும்
நேற்றைய காற்றை கேற்கும் பொழுதாவது.//

நீங்க சூரியன் எப் எம் ரசிகையா..?

Riyas said...

கவிதையும் அதுக்கேற்றாற்போல படங்களும் நல்லாயிருக்குங்க..

ஆமினா said...

கவிதையின் கரு அருமை!!!!!

F.NIHAZA said...

Riyas said...
//
நீங்க சூரியன் எப் எம் ரசிகையா..?


ஆமாம் நான் தீவிர சூரியன் எப்.எம் ரசிகைதான்.....
என் கவிதை தொகுதி வெளியீட்டு விழாவுக்கு
சூரின் அறிவிப்பாளர் முகுந்தன் வந்திருந்தார் தெரியுமா?

F.NIHAZA said...

ஆமினா said...
கவிதையின் கரு அருமை!!!!!

உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி...

கவிதையின் கரு....
பொதுவா பெண்களின் ஏக்கங்கள்தான்..

Mohamed Faaique said...

எல்லா விடயங்களும் யாருக்கும் மறப்பதில்லை. ஆனால், காட்டிக் கொள்ளாமல் இருக்கின்றனர்.

கவிதையில் நீங்கள் சொன்ன விடயங்கள் அருமை..

rajamelaiyur said...

//
இல்லை
நேற்றைய நினைவுகளை
நேர்த்தியாக்கும்

நேற்றைய காற்றை கேற்கும் பொழுதாவது...
//

அருமையான வரிகள்

rajamelaiyur said...

நல்ல கவிதை

மகேந்திரன் said...

பொழுதுகளின்
போர்வையில்
நினைவைத் தேடும்
முயற்சி

அருமையான கவிதை.

F.NIHAZA said...

என் கவிதையை ரசித்த உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்