Saturday, August 6, 2011

பூமாலையாகாமல் - நாவல்

       சுகமாகும் சுமைகள்...

 எனக்கு நன்றாக நினைவிருக்கிறது...
நான் எழுதிய முதல் நாவல் இது. நாவலா..? குறுநாவலா ..? என்று தெரியவில்லை...
க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு முந்தைய காலங்களில் எழுதியது.தோழிகளின் வற்புருத்தலில் காதலித்துக்கொண்டிருந்த தோழியொருத்திக்கு நடந்த சம்பவங்கயைத் தழுவி எழுதப்பட்ட நாவல் அது…அந்த நாவலில் நாவலுக்குறிய அம்சங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை.இதில் ஒரு சிறுபிள்ளைத்தனம் எனக்கே தெரிகிறது. இதை வகுப்புத்தோழிகள் தவிர யாரிடமும் காட்டியதில்லை…

     பூமாலையாகாமல்...

.நான் எழுதிய இரண்டாவது நாவல். 
க.பொ.த. உயர்தரம் முதல் வருடம் கற்கின்றபோது எழுதியது.நான் நினைக்கிறேன் அது 2001 ம் வருடம் என்று.அப்போது எனக்கு வயது பதினேழுதான் ஆகிறது.

      சிறுகதையாக எழுத நினைத்ததை தோழிகளின் ஊக்குவிப்பால் நாவலாகத் தொடர முடிந்தது.இந்த நாவல்கூட நாவலுக்குறிய அம்சங்களை உள்ளடக்கி இருக்குமாவென்று எனக்குத் தெரியவில்லை.என் முயற்சியின் ஆரம்பக் கட்டங்கள்தானிவை…இதுவொரு முக்கோணக் காதல் கதை…சுமாரான வெறும் கற்பனைக்கதையிது...

    பூமாலையாகாமல்… இந்நாவலை என் கைப்படவே எழுதி… புத்தகவடிவமாக நானே தொகுத்தேன்.பாடசாலை மட்டத்தில்…மாணவர்கள் மத்தியில்…கொஞ்சம் எடுபட்டது…

அதுவே எனக்கு சாதனை செய்தமாதிரி…ஆனாலும் அன்றைய  நாட்களில் எங்களைப்போன்ற எழுத்தில் ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்த யாரும் முன்வரவில்லை. 
அப்படியாரும் இருந்ததாகத்தெரியவுமில்லை.தெரியப்படுத்தவுமில்லை.
அந்தக்கவலை என்னை இன்னும் ரணப்படுத்திக் கொண்டே இருக்கிறது…நான் சொல்வது பொய் என்றால்....இந்நாவலை துாசுதட்டிப் புதுப்பிக்க எனக்கு 10 வருடம் எடுத்திருக்காது...இது 2011 ம் ஆண்டாயிற்றே....!!!!

     எனக்கொரு ஆசை…
இந்நாவலை கொஞ்சம் திருத்தி…கொஞ்சம் மெருகேற்றி…எனது இந்த வலைப்பூவில் வெளியிட வேண்டுமென்பதே…..
அந்த ஆசை...கனவு... நல்லபடியாக ஈடேற   இறைவன் துனணபுரியட்டும்...

No comments: