Thursday, October 20, 2011

நீயே என் சுவாசம் 10

அத்தியாயம் 10

டயரியில்……
முதல் ஓரிரண்டு மாதம் வரை சுமுகமான நடவடிக்கைகள்….
அன்றாட நடவடிக்கைகள்….பாட்டி…அம்மா.. தங்கை…வேலை..விட்டால் வீடு…
.எந்தவித சலனமுமில்லாத….பொறுப்புள்ள மூத்தபையனுக்குறிய அம்சத்துடன் பதியப்பட்ட நாளாந்த நடவடிக்கைகள்…
இதுதான் ரிஷி அறிந்த அர்ஜுனின் உண்மையான முகம்….

பக்கங்களப் புரட்டினான்….

முதன் முதலாய்….காதல் வயப்பட்ட….வரிகள்….மின்னின….
பெயர் குறிப்பிட்டிருக்கவில்லை அங்க வர்ணிப்பெல்லாம் மானிஷாவுக்கு அப்படியே பொருந்திநின்றது….
முதல் சந்திப்பு….இரண்டாம் சந்திப்பு….படிப்படியாக காதல் கனிந்தகதை….பல பக்கங்களை விழுங்கி இருந்தது….

“ இன்று என் தேவதையின் முகம் வாட்டத்தில் சுருங்க ….காரணம் கேட்டபோது….மாமா பையன் பரணி வெளிநாட்டிலிருந்து வந்த கதையை ஒப்புவித்தாள்….
தன்னை கல்யாணம் பண்ணனும் என்கிற நோக்கத்துக்காகத்தான் இங்கே வந்திருப்பதாகக் கூறவும் முதல் எதிரி முளைத்ததில் சற்று வருத்தம்தான் எனக்கு….

‘நாம கல்யாணம் பண்ணிப்போமா என்று தயங்கியபடியே நான் கேட்டக
” ரெஜிஷ்டர் மேரேஜ் பண்ணிப்போம்….அக்காவின் சம்மதம் கிடைத்தபின் மெதுவா அவகிட்ட உண்மையை சொல்லிடுவோம்….அதைவிட்டா எனக்கு வேறு வழி தோன்றவில்லை…” கண்ணீர் மல்கக் கூறுகையில்…எனக்கும் அது சரியென்றே பட்டது….

பல பக்கங்கள் வெறுமை….

இன்று ….

பரணி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு முன்வந்து நின்றபோது நம்பமுடியவில்லை….நல்லவனா இருக்கமாட்டானா என்று எதிர்பார்த்ததை உடனே தவிடு பொடியாக்கினான்…..
அவளைவிட்டு விலகிடு….இல்லை…கொடுமையான விபரீதங்களை சந்திக்கவேண்டிவரும்….
பரணியின் மிரட்டல் அடிக்கடி மிதந்தாலும்   எங்கள் சந்திப்போ காதலோ தடையின்றி அரங்கேரிக்கொண்டிருந்தது….

இன்று….

பரணியையும் எனது தங்கையையும்…..ஒன்றாய் …ஷொப்பின் கொம்ப்லெக்ஸ்ஸில் பார்த்தபோது ஆடிப்போனேன்…..
அவன் பழிவாங்குகின்றானா…..குழம்பிப்போனேன்….
எனது காதலை விட்டுக்கொடுக்கிற நிலைமைக்கு என்னை தயார்படுத்த முயலவே இல்லை….அவள் என்னவளாகிவிட்டதனால்….
பேசிப் பார்த்தேன்….பலனில்லை….

அவனோ கருனையே இன்றிப் பேரமல்லவா பேசினான்….
சொந்த ரத்தம்…..அவளுக்குச் செய்யாமல் வேறு யாருக்கு செய்யப்போகிறேன்….குடும்பத்தில் செல்லம்…குடும்பக் குத்துவிளக்கே அவள்தானே…..
எனது சக்திக்கு மீறிய தொகையை கேட்டிருந்தாலும் பாசம் கண்முன்னே ஊசலாட தயக்கமின்றி ஒத்துக்கொண்டு கையெழுத்தும் போட்டுவிட்டேன்….

….

இன்று மனசே சரியில்லை…..

இன்று வேலை அதிகம்….

…..

எனது தேவதையை இப்பொழுதெல்லாம் நினைத்தமாத்திரத்தில் பார்க்கவே முடியிரதில்லை…

பக்கங்கள் வெறுமை…

வெறுமை….

….

இன்றைய நாள் ஏன் விடிந்ததோ…..

அண்ணா மன்னிச்சிருண்ணா….நான் மோசம் போயிட்டேன்….

தங்கை கால்களைப் பற்றி அழுது புரல்கையில்…. நெஞ்சில் விழுந்தது முதல் இடி…..

“தனது விருப்பத்துக்குறிய அக்கா எங்கள் காதலுக்கு சிவப்புக் கொடியைத் தூக்கிவிட்டாள்…பரணியுடன் சேர்ந்து எங்களைப் பிரிக்க என்னவோ ப்ளேன் பண்றாங்க”

தனது அன்புக் காதலியின் வாசகங்கள் நினைவு வர….தேகம் வியர்வையில் நனைந்தது.....
….
முகம் தெரியாத அந்த அக்காமீது…கோபமும் வைராக்கியமும் கரைபுரண்டது….

அடுத்து என்ன செய்யப்போகிறோம்….ஒன்றும் புரியவில்லை….
அடுத்து செய்யப்போகும் காரியத்துக்கு தங்கையிடம் போராடி புரியவைத்து சம்மதம் வாங்குகையில் போதும் போதும் என்றாகிவிட்டது….

இன்று

தங்கையுடன் மருத்துவமனைக்குச்சென்றேன்….தெரிந்த லேடி டொக்டரிடம் எப்பொய்ன்மனட் வாங்கி இருந்தோம்…பரிசோதித்துவிட்டு….இன்னுமொரு திகதியில் மீண்டும் வந்து சந்திக்க சொன்னபோது ஏற்பட்ட பதற்றத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன்……

சொன்ன திகதியில் தங்கையுடன் மீண்டும் .போனேன்…

காரியம் கைநழுப்போயிருப்பதாகக்  டொக்டர் கூறுகையில்…..உடைந்து போனேன்….
அதையும் தாண்டிய இன்னொரு விடயத்தை கூறுகையில் உயிர்வற்றி…இடிந்து நொருங்கிப்போனேன்…. ..
தங்கைக்கும் வயிற்றில் உள்ள சிசுவுக்கும் எயிட்ஸ்…உயிர்கொல்லி எயிட்ஸாம்….

என்னென்னமோ டொக்டர் சொன்னார் காதில் விழவே இல்லை…
நடைப்பிணமாய் வீடுவந்து சேர்ந்தோம்…..தங்கையின் முகத்தை பார்க்கவே சங்கடமாகிவிட்டது….

அப்பாவிப் பெண்ணை… பாவி அவன்… எப்படிக்கவுத்தானோ….

இத்தனை நடந்தும் இலகுவான மனம் படைத்த அம்மாவிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை….எனக்குத் தெரியும்….அம்மாவுக்கு தாங்கிககொள்ள சக்தியில்லை என்று….

….

ஒருநாள்…

….பரணியினுடனான திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடக்குது என்றாள்….

சுமுகமான சூழ்நிலை இங்கில்லை….

“ஒரு முக்கிய விடயம் சொல்லியே ஆகனுமென்றாள்….”

எனது சிந்தனை தேக்கநிலையைவிட்டு மீள நாட்கள் தேவைப்பட்டன…

….

இன்று

தங்கையின் அறைக்கதவை திறந்து உள்ளே போக 
வரவேற்றது தூக்கில் தொங்கிய அவளது சடலமே…..

அதைப்பார்த்த அதிர்ச்சியில் கலங்கிப்போன அம்மாவின் சித்தத்துக்கு…செய்யாத மருத்துவம் இல்லை….

இன்று….

முகம் தெரியாத ஒ குளு என்னை அழைத்துச்சென்றபோது அச்சத்தில் சிறிது நடுங்கியது உண்மைதான்…
அவர்களின் கீழ் நான் வேலை பார்பதாகதாகவும்...இன்லீகல் விடயங்களில் அவர்களுக்கு துணைநிற்பதாகவும்… கையெழுத்துப் போட்டிருக்கிறேனாம்...ஆதாரம் காட்டினார்கள்...…விலக நினைத்தால் உயிர்சேதம் சம்பளமாகும் என்றார்கள்...
 .
தலைசுற்றினாலும்….பரணி திட்டமிட்டு என்னை சிக்கலில் மாட்டிவிட்டதை நினைக்கையில்….இருவர் மீதும் பலிவாங்கும் உணர்வு கொப்புளித்தது….

….

இந்த நேரத்தில் ஆதரவாய் இருக்கவேண்டிவளின் வருகை படிப்படியாகக் குறைந்தது….
முற்றாக வருகை நின்றேபோனது…..காதல் பற்றிய எண்ணமும் கருகிவிட்டது

இன்றுவரை அந்த முகம்தெரியாத கும்பல் பற்றி துளியும் தெரிந்துகொள்ள முடியவில்லை….அவர்கள் இட்ட வேளையை முடித்துக் கொடுத்து….நாட்களை கடத்துகிறேன்…..

காப்பகத்தில்… பார்க்க முடியாத கோலத்தில் அம்மா….
வீட்டில் துணைக்குப் பாட்டி….
கருகிய காதல்… 
கசந்த வாழ்க்கை….

பல பக்கம் வெறுமைளை விழுங்க…..

நேற்று….

மானிஷாவின் அழைப்பு…..

மனம்விட்டுப் பேசனுமாம்…
சில உண்மைகளை விவரிக்கனுமாம்….ப்ளாஸா கோணர் அருகே காத்திருக்கிறாளாம்….

அவளைப் பழிவாங்க இதைவிட்டா ஒரு சந்தர்ப்பம் கிட்டவே கிட்டாது….

முழு மூச்சாக வாசித்த ரிஷி மூச்சுவிடுவதற்கு சற்று சிரமப்பட்டான்….
என்ன பண்ணலாம் யோசித்தான்….
கையடக்கத் தொலைபேசி சிணுங்க…..

“ சொல்லுங்க….”

“ நான் இன்ஸ்பெக்டர்….இன்னுமா நீங்க கிளம்பலை….”

“ இல்ல இன்ஸ்பெக்டர்… சின்ன ஆதாரம் கிடச்சிருக்கு….இதோ வந்திட்டன்…”

தொடர்பை துண்டித்துவிட்டு….பாட்டியிடம் சொல்லாமலேயே கிளம்பிவிட்டான்

                                  தொடரும்....

4 comments:

Mohamed Faaique said...

வரிக்கு வரி டுவிஸ்ட்டு..
கதை பேய் வேகம்....
ஒரே அழுகாச்சி....

கதை நன்றாக போய் கொண்டிருக்கிறது...

K.s.s.Rajh said...

பல முனைகளில் கதை நகர்ந்து செல்கின்றது அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

K.s.s.Rajh said...

பதிவை தமிழ்மணத்தில் இணைத்துவிட்டு நீங்களும் உங்களுக்கு ஒரு ஓட்டு போடலாம் நீங்கள் போடவில்லைபோல...

Mohamed Faaique said...

நான் நேற்று போட்ட கருத்து எங்க போச்சு???? காணலையே!!!