அத்தியாயம் 12
ஒருவாரகால அலைச்சல் ரிஷியிற்கு……
சோகம் வேறு…. முகத்தில் அப்பிக் கிடந்தது….
வழிக்கப்படாத தாடி முகத்தில் ஆங்காங்கே….முற்களாய்…….அரும்பிக் கிடந்தது….
எந்தவகையிலும் மானிஷாவின் இழப்பை ரிஷியினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை….
….கொலைகாரனைப்பற்றிய தடயங்கள் இன்னும்…கிடைக்காதது..ரிஷியிற்கு பலத்த ஏமாற்றமே….
தனது வண்டியை சேர்விஸ் இற்கு விட்டு… எடுத்து வரும்போது
“ ஸேர்….உங்க வண்டியுள் இந்த ஹேன்ட் பேக்….இருந்திச்சு…”
ரிஷியின் கைகளில் நம்பிக்கைக்குறிய அந்த பணியாள்…திணிக்கும் போது….அதிர்ந்து போனான் ரிஷி….
.வீடுவந்து அதைப் பிரிக்கும்வரை இருப்புக்கொள்ளவில்லை….
வீட்டுக்கு வந்ததும் கைப்பையை எடுத்து கட்டிலில் வைத்தான்….மானிஷாவே அமர்ந்திருப்பதாய்…. ஒரு பிரம்மை….
மனது ரணமாவதை உணர்ந்தான்….அவள் இல்லாமல் நான் இன்னும் உயிரோடிருக்கிறேனே என்று நொந்து கொண்டான்..
மென்மையாய் கைப்பையை தொட்டவனது மேனி சிலிர்த்தது…ஒரு கனம் கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்…திறந்ததுமே ஒரு கனத்த கடிதம் கண்களை உருத்திற்று….
அவசரமாய்ப்பிரித்துப் படித்தான்.
ரிஷி இந்தக்கடிதம் உங்கள் கைகளை வந்தடைகிற நேரம் என்னென்ன விபரீதங்கள் நடந்திருக்குமென்று என்னால் கற்கனைகூட பண்ண முடியலை….
ஆனால்
நான் உயிரோடிருப்பேனா என்கிறது கேள்விக்குறிதான்…..
.எனது வாழ்க்கையை உங்களைத்தவிற வேறுயாரிடமும் ஒப்படைக்க நான் தயாரில்லை…..
அப்படி என்னை ஒப்படைக்குற தருணம்….என்னைச்சுற்றிய முடிச்சுக்கள் அவிழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணியதனாலதான் இத்துனை தாமதமும்…குழப்பமும்....
.
இந்த உலகம் ஏன் இன்னும் கெட்டவர்களை உற்பத்திசெய்வதை நிறுத்திக்கொள்ளவில்லை….
அனாதரவாவிடப்பட்ற எங்களைப் போன்ற பெண்களுக்கு மட்டும் ஏன் அதன் வலியும் கொடுமையும் புரியும்படியான தர்மசங்கடத்தையும் நிர்ப்பந்தத்தையும் கொடுக்கிறது…..
சொல்லுங்கள் ரிஷி…..ஏன்…
கொஞ்சம் சொத்துப்பத்துள்ள ஒருவருக்கு பிள்ளையாய் பொறந்தது தப்பு என்கிறீர்களா???
நாங்க பருவவயதை அடையுமுன் பெத்தவங்க எங்களைவிட்டும் இந்த உலகத்தைவிட்டும் போனதுதான் தவறு என்கிறீங்களா????
அதுக்கப்புறம் எங்களுக்கு எல்லாமே எங்க தாய்மாமன்தான்….தங்கமானவரு…..அவரு புள்ள பரணியும் அவரைப்போலவே ……
அதனால என் தங்கச்சியை பரணிக்கு கட்டிக் கொடுக்குறதா நான் வாக்குக் கொடுத்துட்டேன்….வெளி நாட்டுல இருக்கிற பரணியை வரவழைச்சு என் தங்கச்சியின் கல்யாண ஏற்பாட்டைத் துவங்கினபோதுதான் எனக்குத் தெரிய வந்திச்சு
அவள் அர்ஜுன் என்கிற ஒருவனை காதலிப்பதாக…..
வீட்டுக்குள் வளர்ந்தவள் நான்…தங்கை…படிப்பு …ஹொஸ்டல்.. என்று என் வட்டத்தை சுருக்கிக் கொண்டவள் நான்…
பரணியிடம் அர்ஜுன் பற்றி விசாரிக்கச் சொன்னேன்….
வந்து சொன்ன தகவல் நல்லதாகவே இல்லை…..அர்ஜுனின் தொழில்…நடத்தைகளை
ஆதாரபூர்வமாக பரணி நிரூபித்தபின் …பாசத்தைக் கொட்டிய என் தங்கையைக் எப்படி கட்டிக் கொடுப்பேன்…..
அவளின் மனசை மாற்ற எவ்வளவோ முயற்சித்தேன் பலனில்லை….
அவளின் மனசு மாறும்வரை தூரத்து சொந்தமான அத்தையொருவரின் வீட்டில் சிலநாள் வைத்திருக்க முடிவெடுத்து அனுப்பிவைத்தோம்….
அதுதான் நான் செய்த முதல் தப்பு….
தங்கமானவருக்குப்போய் எப்படி ஒரு அசிங்கம் பிறந்தது….நம்பமுடியலை ரிசி…
பரணி…ஒட்டுமொத்த தப்புகளின் இருப்பிடம்…
.எங்க சொத்துக்களையும் சந்தோசங்களையும் கொஞ்சம் கொஞ்சம் கரைக்க வந்த எமன்தான் அவன் என்று எனக்கு புரிய காலம் தேவைப்பட்டது…
அவசர அவசரமாய் வாசித்தான்….
முக்கிய குறிப்புகளைப் பொறுக்கி உடனே இன்ஷ்பெக்டர் பாலாஜயிற்குத் தகவல் தெரிவித்துவிட்டு பதிலுக்காய் காத்திருந்தான் ரிஷி……
இரண்டு நாட்கள் சுத்த சூன்யமாய் நகர்ந்தது…..
கடிதத்தின் வாசகங்கள் மீண்டும் மீண்டும் நினைவுகளில் வர….
எத்தனைமுறைதான் படிப்பது….
ஆனாலும்
மீண்டும் கண்களைப் பதித்தான் கடிதத்தில்……
மாமாவுக்கு பெரியளவுல வசதிகள் இல்லை.
தோளுக்குமேல வளர்ந்த புள்ளய கண்டிச்சு வளர்க்கத் தெரியலை அவர்க்கு….பரணிபத்தின ஏக்கத்துலயே கண்ணை மூடிட்டாரு….
.என்கிறவிசயம் பிறகுதான் எனக்குப் புரிந்தது…ரிஷி
காலம் தாழ்ந்து புரிந்து என்ன பயன்…
தங்கையை விடுவிக்கனுமென்றால் முழு சொத்தையும் பரணிபேர்ல எழுதித்தரனுமுன்னு சொன்னதுக்கு மறுபேச்சின்றி சம்மதித்தேன்….
ஒரு நாள்…..
தொடரும்....
4 comments:
வழக்கம் போல் அருமை நிகாஷா ..... இப்ப தான் வாசித்து முடித்தேன்
தொடருங்கள்
மிக்க நன்றி ஆமினா....
கடைசி முறை தொய்வாக இருந்து, இந்த முறை மறுபடி சூடு பிடிக்கிறது..
புதிய டெம்ப்ளேட் கண்ணை உறுத்துகிறது.. மாற்றினால் நல்லாயிருக்குமென்று நினக்கிறேன்..
கதை சூடுபிடிக்கின்றது வரும் தொடர்களில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது போல வாழ்த்துக்கள் சகோ
Post a Comment