Thursday, November 3, 2011

நீயே என் சுவாசம் 13

அத்தியாயம் 13

ஒரு நாள்…..

லேசான மயக்கம்… என்ன என்று புரிஞ்சிக்க முடியலை…
நான் தெளிவாக இருந்தாலும் பக்கத்துல நடக்குற சம்பவங்களை தெளிவா புரிஞ்சுக்கிற மனநிலை இருக்கலை…. 
ஒரு டொக்டரா இருந்துட்டும் அது ஏன்னு அப்ப எனக்கு புரியலை .ஒரு அசதி…
சோர்வுன்னு விட்டுவிட்டேன்….

சொத்துக்களை பரணிபேர்ல ரெஜிஸ்டர் பண்ணுவதற்குப் போக தயாராகச் சொன்னான்….
இந்த நிலமையில் எப்படின்னு மறுத்ததற்கு தங்கையை கொண்ணுடுவேனென்று 
மிரட்டத் தொடங்கினான்….பயத்துல நானும் சம்மதிச்சிட்டேன்…..

பிறகுதான் தெரிந்தது…சுய சிந்தனையை இழப்பதற்காகவே பரணி ஏதோ கலந்து தந்து என்னை அழைத்துச் சென்றிருப்பது ரெஜிஷ்டர் மேரேஜ்கு என்று….
அதுகூட தெரியாமல் நான் இருந்திருக்கேனே….எனக்குத் தெரியாமல் இவன் என்னை கல்யாணம் பண்ணிட்டான் என்று வெளியில சொன்னா நம்புவாங்களா????ஃ
சிரிக்கத்தான் செய்வாங்க.

எவ்வளவுதான் படித்திருந்தாலும்…
.பக்குவப்பட்டிருந்தாலும் தனக்குன்னு ஒரு துன்பம் வர்ரப்போ….நிலைகுழைந்து போய்…தடுமாறுவது இயல்புதானே ரிஷி….

அதுலயும் அனாதரவா தனியா இருக்கிற ஒரு பொண்ணு நான்….
என் நிலைமையை உங்களால கற்கனைகூட பண்ண முடியாமலிருக்கும்….

படிப்படியாக பரணியின் சுயரூபம் மிருகத்தனமா வெளிப்பட்போது….அத்தனை துன்பத்தையும் தாங்கிக்கிட்டேன்…
 தங்கையை இன்றுவிடுவான் நாளைவிடுவான் என்று…அந்த நம்பிக்கையை பாழாக்கிட்டான் பரணி……
.அர்ஜீனை திட்டமிட்டுப் பழிவாங்கிய விதத்தை பரணி அவன் வாயாலேயே ஒத்துக் கொண்ட போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது…..

அர்ஜீனின் குடும்பத்தை பாழாக்கியதற்கு மறைமுகமா எனக்கும் பங்கு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது….

அர்ஜுனை எப்படியாவது சமாதானப் படுத்தலாம்…எனக்கு நம்பிக்கை இருக்கு…..அர்ஜுனை சந்தித்து தெளிவுபடுத்தவேண்டியது என் பொறுப்பே….

 இந்த விலாசத்தைக் குறித்துக் கொள்ளுங்கள் ரிஷி…நான் திரும்பி வராத பட்சத்தில்…..
என் தங்கைக்கான முழுப் பொறுப்பையும் நீங்கள் எனக்காக ஏற்றுக் கொள்வீர்களானால் மிக்க சந்தோசமே….
அவளை அவளது விருப்பத்துக்குறியவரிடத்தில் சேர்த்துவிடுங்கள்…..

ரிஷி….நான் அறிந்து எங்கப்பா அம்மா மனசாலகூட தப்பு பண்ணிணதில்லை….

 யார் சாபம் எங்களை இப்படி துரத்து துரத்தென்று துரத்துது….

கடவுள் போடுற முடிச்சை அவிழ்க்கத் தெரிந்தால் நான் ஏன் இப்படிப் புலம்புவேன்….
 நீங்கள் என் கூட இருக்கும்போது இனி பயமில்லை என்கிற மனநிலைக்கு வந்துட்டேன் ரிஷி….
உங்களை நம்பித்தான் நான் இந்த முடிவையே எடுத்தேன்….என்னை வெறுப்பீர்களா ரிஷி

கண்ணீருடன்…..
மானிஷா…

வரிகள் ரிஷியை வெகுவாகப் பாதித்திருந்தது….

இதயப் படபடப்பு இன்னும் நீங்கிய பாடில்லை…..
மனதுக்குள் இவ்வளவு கவலையைவைத்துக் கொண்டு என்ன பாடுபட்டிருப்பாள் மானிஷா…அவளுக்கொரு அழகான வாழ்வைக் கொடுக்க வழியில்லாமல் போய்விட்டதே…..
என்ன கொடுமையிது…….வேதனையின் விளிம்பில் தள்ளாடினான்……

என்ன மானிஷா…
உன்னப்போய் நான் தப்பா நினைப்பேனா???
? நீ இன்னிக்கு இருந்திருந்தால் நீ வாழப்போற வாழ்க்கையே வேற….என்ன பன்றது…என்னை கையாளாகாதவனா கைசதப்பட வைத்துவிட்டதே காலம் ….

தலையிலடித்துக் கொண்டான் ரிஷி…. 
விரக்தி அவனை வெகுவாய் வாட்டியது…..
கடிதத்தை மடித்து மேசைமீது வைத்தான்…
.ஸோபாவில் சாய்ந்து கண்களை இருக மூடிக்கொண்டான்….

நிமமதியாகத் தூங்கமுடியவில்லை

வாகனத்தின் ஹோன் இடைவிடாது அடித்தது….

அலுத்துக்கொண்டான் ரிஷி….

“யாரது….இந்த நேரத்தில்…“.முணுமுனுத்தபடியே போய் முன் கதவை அகலத்திறந்தான்….

கோல் டெக்ஸி….

ரிஷியின் முகத்தில் சந்தேக ரேகைகள்….

“யாராக இருக்கும்….“

யோசிக்குற ரிஷியின்  மூளைக்கு அதிக வேலை கொடுக்க முன்பே ....வண்டியின் பின்னாடி இருந்த கண்ணாடி படிப்படியாக கீழிறங்கியது….
.
“மாணிஷா” தன்னையறியாமலேயே ஆச்சர்யத்தில் அலரிவிட்டான்….

அன்றலர்ந்த தாமரையாய்…

அதே முகம்….

அதே பார்வை…

அதே சிரிப்பு….

“இன்னுமா உயிரோட இருக்கே…..நான் காண்பது கணவா…..“ 

தன்னையே கிள்ளிப்பார்த்து சுயநினைவுக்கு மீண்டான்……..வண்டியை நோக்கி விரைந்தான்….ரிஷி….

 தொடரும்.....

2 comments:

மகேந்திரன் said...

மன போராட்டங்களை அழகாக
கதையில் கொண்டு வந்திருக்கிறீர்கள்...
தொடருங்கள்..

Mohamed Faaique said...

கதையோட முடிவு நல்லாயிருக்கு...
அடுத்த பதிவுல இது கனவு’னு சொல்லிராதீங்க..... மானிஷா பாவம்...

இனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்..