Thursday, September 22, 2011

நீயே என் சுவாசம் 02

     அத்தியாயம் 02

சொல்லிவிட்டு கண்களை ஒரு கனம் இருக மூடிக் கொண்டான் ரிஷி..
ஆர்வமாய் கண்களைத்திறந்தவனுக்கோ அதிர்ச்சி.கண்களிர் அனல் பறக்க இருக்கை விட்டெழுந்தாள் மானிஷா
.
“ என்ன மானிஷா அப்ஸட் ஆயிட்டீங்களா..?உங்களைப் 
பிடிச்சிருக்குன்னுதானே சொன்னேன்.அதுக்கு ஏங்க இத்தனை டென்ஷன்…”

“ என்ன சொல்றீங்க …லவ்வா….”விரக்தியாய் சிரித்தாள்

“ டொக்டர் என்ன தப்பா நெனக்காதிங்க…என் லைஃப் இல் லவ்வுங்கிறது வெறும் கானல் நீரா மட்டுமே இருக்கும்…அந்த கானல் நீர் என் தாகம் தீர்க்கும் என்கிற நம்பிக்கையோ…எதிர்பார்ப்போ இல்லை…என்னை மன்னிச்சிடுங்க…”

மேசைமீது வைத்திருந்த தன் ஸ்டெதஸ்கோப்பை எடுத்தவள் திரும்பிப்பாராமலே சென்றாள்.
திணரிப்போனான் ரிஷி.

“மானிஷா இப்படியெல்லாம் பேசுவாளா…?எவ்வளவு மென்மையானவள்…நான்தான் புரிஞ்சுக்காம தப்பா பேசிட்டேனோ…?சீ..சீ…அப்படி இருக்காது..மானிஷா என்ன லவ் பண்றா…ஏதோ ஒரு காரணத்துக்காக இப்படி நடந்துக்குறா…என்னான்னு தெரியலயே…இந்தப்பொண்ணுங்கல புரிஞ்சிக்கவே முடியலயே….”ரிஷி குழம்பிப்போனான்.

தன் தோள் மீது கையொன்று படருவதை உணர்ந்த ரிஷி திரும்பிப் பார்த்தான் பதட்டமாய்.

“ டேய் அர்ஜுன் நீயா….நான் பயந்துட்டேன்….ஆமா..நீ எப்படா வந்த…பிஸினஸ் ட்ரிப் எல்லாம் எப்படி….”ரிஷி ஆவலாய் கேட்டான்…

“ ம்…சூப்பர்…எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது..லட்சத்தை கொடுத்து கோடிகளை அமுக்கிட்டேன்…எப்படியோ கன்ட்ரக்ட் நம்ம கைல…”

“டேய் இது தப்பில்லையா…நியாயமா சம்பாதிக்குற காசுதான்டா ஒடம்புல ஒட்டும்…”

“இப்படி கிரிமினலா யோசிக்கிறது என் சொந்த மூளையால தானே….நியாயப்        படி பார்த்தா…என் சம்பாதிப்பும்…நான் கஷ்டப்பட்டு உழைக்குறதுதான்..இது எப்படிடா ஒடம்புல ஒட்டாமல் போகும் …சும்மா இருடா…”

“அர்ஜுன் நீ என்ன பன்றாய் என்று சொல்லவும் மாட்டேன்கிறாய்…எனக்கு ஒரு எழவும் புரியலை…நண்பனாக சொல்றேன்டா …கைசேதப்படும்படியா நடந்துக்காத…உனக்குத் தெரியாததா என்ன..?”

“ போதும்டா ரிஷி நீ எடுக்கும் லெக்சர்…உன்னமாதிரி நல்லவானா இருந்தா எங்க வயித்துப் பசி போகுமா என்ன? உன்னமாதிரி வசதி… குடும்பம்னு இருந்தா நாங்க ஏன்டா இந்தப் பிழைப்பு பிழைக்கனும்….” அர்ஜுனின் வார்த்தை ரிஷியை காயப்படுத்தியது…

“ ஸொரிடா மச்சான்…காயப்படும்படியான சம்பவங்களால சிதைஞ்சுபோறது மனசுதான் என்றாலும்…வாழ்க்கையின் திசை அப்படிப்பட்ட காரணங்களுக்காக சின்னா பிண்ணமாவதைதான் தாங்க முடியிறதில்லை….
நீயும் திசைமாறிட்டியோன்னுதான்டா மனசு படாத பாடு படுது”

“ நீ கவலைப்படறாதால எந்தவித மாற்றங்களும் வரப்போறதில்லை…இழப்புக்களின் வலி…என்பது லேசுப்பட்டதில்லை…”

“ என்னடா இப்படி சொல்லிட்ட நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை இதுக்குள்ள இப்படி பேசுறே…என்னைப் பயமுறுத்தாதடா அர்ஜுன்…”

“ ஓ…கதை இப்படி போகுதா…என்கிட்ட சொல்லவே இல்லே..”

“ நீயும்தான்… என்கிட்ட கேக்கவே இல்லியே…”

“ அப்படியா….ஓக்கே இப்போ கேக்குறேன்…ம்…சொல்லு…” அர்ஜுன் பக்கத்திலிருக்கும் இருக்கையில் தன்னை அமர்த்தி கதை கேட்க ஆர்வமானான்.

“ பொறுடா…இப்பதான்டா முதல் அடியை எடுத்து வெச்சிருக்கேன்…ரொம்ப நல்லவடா..அவள்ட எளிமைதான் அவளுக்கு ரொம்பவும் அழகு…ஆனா அவ ஸைட்ல இருந்து க்ரீன் சிக்னல் இன்னும் கிடைக்கலை…”வருத்தமாய் ரிஷி கூறினான்.

“ நீ ஒரு மடையன்டா…எந்தக்காலத்துலடா நீ இருக்கே..ஏன்டா இப்படி இருக்கே…லவ் பண்ணினா மட்டும் போதுமா…எப்படியாச்சும் கவுக்கிற வழியப்பாருடா…”

“ டேய் என்னை என்னடா பண்ண சொல்றே…”

“ நீ ஒன்னும் பண்ணவேணாம்…அவளோட சகஜமா பேசினாலே போதும்…ஆமா…யாருடா அந்த கொடுத்து வெச்ச மகாராசி……”

“ உனக்கு நல்லாவே தெரியும்டா…எங்க ஹொஸ்பிடல் ஸடாஃப் தான்..”
“யாருடா…எனக்கு தெரியலையே…” பொய்யாய் தன் முடியை பிச்சிக்கொள்வது போல் பாவனை கொடுத்தான்…

“ போதும்டா உன் சேட்டையை ஆரம்பிச்சிடாத…நானே சொல்லிட்றேன்…அவ வேறு யாருமில்லை மானிஷா தான்…”ரிஷி நாணம் கலந்த புன்னகையுடன் பதிலளித்தான். 
  
போயும் யோயும் இவளையா முணு முணுத்த அர்ஜுனின் புருவங்கள் தூக்கி நின்றன.முகத்தில் நிறம் தப்பியதை ரிஷி கவனிக்கத்தவரவில்லை.

“ உண்மையாவா சொல்றே…என்னால நம்ப முடியலைடா…”

“ ஆமான்டா..இதுல பொய்சொல்ல என்னடா இருக்கு….”

“ இல்லடா சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டன்…அப்போ நான் வரட்டா..” அர்ஜுன் கிளம்பத்தயாரானான்

“ டேய் …என்னடா ஆச்சு உனக்கு…உன் உற்சாகம் எப்படிடா திடீரென்று வடிஞ்சு போச்சு…”

“ லேசா தலைவலி…தலைவலி எல்லாம் எப்பொய்மன்ட் எடுத்துக்கிட்டாடா வரும்…ஓக்கே நான் கிளம்புறேன்…”அர்ஜுன் கிளம்பிப் போய்விட்டான்.
ரிஷியிற்கு ஒரே குழப்பமாய் இருந்தது.

“மானிஷா பேரை சொன்னதும் அவன் ஏன் டென்ஷனாவுறான்…ரெண்டுபேருக்கும் ஏதாவது ஒரு வகைல தொடர்பு இருந்தாகவேண்டும்..”
இந்த முடிவில் மட்டும்  ரிஷி உறுதியாய் இருந்தான்…
                                                              தொடரும்.....

                                                                      நீயே என் சுவாசம் 03

Saturday, September 17, 2011

நீயே என் சுவாசம் 01

    அத்தியாயம் 01

“ டொக்டர்….
மூன்றாம் நம்பர் வோர்ட்ல இருக்கிற பேஷன்ட்கு  இன்ஜெக்ஷன்  ரிப்ளை பண்ணுதில்லை..நீங்க கொஞ்சம் வந்தீங்கன்னா….”

சீருடையில் வந்த நர்ஸ் கூற…

“ ஓக்கேம்மா…நீங்க போங்க..இதோ நானும் கிளம்பிட்டேன்…”

கோட்டை சரிசெய்து ஸ்டெதஸ்கோப்பை கையில் சுழற்றியவாரே விரைந்தான் டொக்டர் ரிஷி.

“ நர்ஸ்…இவரு சீரியஸ் கண்டிஷன்ல இருக்காரு..ஒப்பரேஷன் பண்ணியாகனும்…தியேடருக்கு கொண்டுபோங்க…டொக்டர் மானிஷாவையும் தியேடருக்கு வரசொல்லுங்க…”
 ரிஷி கூறிவிட்டு அவசரமாய் நகர்ந்தான்.

மிதமான ஏ.சியின் குளிரில்….ரிஷி பச்சை நிற மாஸினால் மூக்குவரை மறைத்துக்கொண்டு மும்முரமானான்.மானிஷா வியர்க்க வியர்க்க தியட்டர் உள்ளே நுழைந்தாள்.கழுத்து நெற்றி இவற்றை அடிக்கடி கைக்கட்டையால் ஒற்றிக்கொண்டள்

“என்ன?”  என்று ரிஷி விழிகளால் வினவ
 “ இல்லை ” என்பதைப்போல் மானிஷாவும் தலையசைத்துவிட்டு அருகே இருந்த பச்சை நிற மாஸை  அணிந்துகொண்டாள் மானிஷா.

கிட்ணி சத்திர சிகிச்சை என்பதனால் மிகவும் நுணுக்கமாக செயல் பட்டனர்.ஆனாலும் இடைக்கிடை ரிஷியின் கண்களும் மானிஷாவின் கயல் விழிகளும்சங்கமித்து சட்டென விலகிக்கொண்டன.

ரிஷி அறுந்த உறுப்புகளை ஒன்றிணைக்கும் முயற்சில் இறங்க…மானிஷா சேதமடைந்த குருதியை துடைத்து ஒற்றி…தையல்போடுவதற்கான உதவிகளை செய்ய இருவரின் கரங்களும் முட்டிக்கொண்டன.
மானிஷா அப்போதெல்லாம் கையை தன் பக்கம் இழுத்துக்கொண்டாள்.கையுறை அணிந்திருந்தாலும் அந்த ஸ்பரிசம்  இருவரையும் என்னவோ பண்ணியது.

ரிஷியின் கண்களில் காதல் மின்னுவதை அவளால் வெகு நேரம் உற்று நோக்க முடியவில்லை.ரிஷியின் கண்கள் அவளை நோக்க அவளது கண்கள் பனிந்தன.

“ ஸக்ஸஸ் ” 

என்றான் ரிஷி வாயை மறைத்த திரையை அகற்றியவாறே.மானிஷாவுக்கு திக் என்றது.புருவங்களை உயர்த்தி கேள்விக்குறியாக்கினாள்.
அதனைப் புரிந்த ரிஷி

 “ ஓப்பரேஷன் ஸக்ஸஸ் ” என்றான் கிண்டலாய்.

 ஏதோ திருப்தியடைந்தவளாய் புன்னகையொன்றை உதிர்த்திவிட்டு கைகளைக்கழுவி தொங்கவிடப்பட்ட டவலில் கைகளை அழுத்தித்துடைத்தாள்.மெதுவாய் ரிஷியைப் பார்த்து

 “ உங்களை வாழ்த்தனும்னு தோணுது..”என்றாள் மெதுவாய்.

“ அதெல்லாம் எதுக்கு தினம் எத்தனை ஓப்பரேஷன் பண்றோம்.இதுக்குப் போய்.”
மானிஷாவின் கைகளில் இருந்த டவலை வாங்கித் துடைத்தபடியே கூறினான் ரிஷி.

“ சொல்லனும்னு தோணிச்சு….”

மானிஷா கூற ரிஷியின் கண்கள் மலர்ந்தன.
ரிஷி கோட்டை களைந்து கைகளில் தொங்கவிட்டபடி ரூமைவிட்டு வெளியே வந்தான்.ரிஷியைப் பின் தொடர்ந்தாள் மானிஷா.ரிஷி சிரித்துச் சிரித்துக் கதைத்தான்.மானிஷாவால் முடியவில்லை.ஏதோ ஒரு உணர்வலை அவளை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது.

“ என்ன நிஷா. நான் கேட்ட கேளிவிக்கு பதிலயே காணோம்…பிடிக்கலைன்னா சொல்லிடுங்க..”

நிஷா என்று அவளை ஒற்றையாய் அழைத்தது இதுதான் முதல் தடவை…இன்னும் குழம்பிப் போனாள்…

“ என்ன டொக்டர்…என்ன கேட்டீங்க…“ என்றாள் பதட்டமாக…

“ கென்டீனுக்குப் போய் டீ… கொஃபீ ஏதாவது குடிப்போமான்னு கேட்டேன்…ஜஸ்ட் ஒரு கப் டீ தானே…இதுக்குப் போய் ஏங்க இப்படி டென்ஷன் ஆகி…யோசிச்சு பதில் சொல்றீங்க.”.

“ இல்லை…ஏதோ யோசனை அதான்…ஓக்கே.. போலாலாமே..”

கேன்டின் போய் இருவரும் அமர்ந்தாலும்…ஒருவர் முகத்தை ஒருவர் நேரடியாகப் பார்ப்பதற்கு இருவருமே சங்கடப்பட்டனர்.இரண்டு டீயை ஓடர் பண்ணிவிட்டு அமைதியாய் மானிஷாமீது பார்வையைத் திணித்தான் ரிஷி.

“ மானிஷா…எப்ப பார்த்தாலும் அமைதியா சாந்தமா இருக்கிறீங்களே..எப்படி ஒங்களால மட்டும் இப்படி இருக்க முடியுது.”

மானிஷா புன்னகையைப்  பதிலாக்கினாள்.டீ வங்தது.இருவரும் மெல்ல உறிஞ்சினர்.

“ என்ன டொக்டர்…எல்லாவற்றுக்குமா இந்த மௌனம்…இந்த மெளனத்தின் பின்னாடி ஏதாவது அர்த்தம் இருக்குமோ?...ஏதாவது பிரச்சினையா…”
ரிஷி வினவ…

“சீச்சீ…அப்படி ஒன்னுமில்லை டொக்டர்…எப்பவும் போல இயல்பாத்தான் இருக்கேன்…”
பார்வைகளை எங்கோ செலுத்தியபடி மானிஷா பதிலளித்தாள்.

“ நிஷா உங்ககிட்ட நான் ஒன்னு கேக்கலாமா..? ”

“ கேக்கலாமே…”

 தைரியமாய் இவளின் உதடுகள் வார்த்தைகளை கொட்டினாலும்…உள்ளே….இதயத்துடிப்பு பன்மடங்காகிற்று.

“ ரொம்ப நாளா சொல்லனும்னுதான் நெனக்கிறேன்…எப்படின்னுதான் ….
ஆனாலும் சுத்தி வளைச்செல்லாம் எனக்குப் பேசத்தெரியலை…ஆனா நீங்க தப்பாவும் நினைக்கக் கூடாது…எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு மானிஷா…”

சொல்லிவிட்டு கண்களை ஒரு கனம் இருக மூடிக் கொண்டான் ரிஷி.

                                                         தொடரும்...... 

Monday, September 12, 2011

நிக்காஹ்

நிகழ்வுகளால் நினைவுகள்
அலங்கரிக்கப்படுகிறது…

இதயங்களை சுகப்படுத்தி
எண்ணங்கள் சுத்திகரிக்கப்படுகிற…
ஒரு புனித யாத்திரை இது….

இருபாலின இருதயங்களின்
ஒருமித்த பயணமிது…

அன்பார்ந்த பூக்கள்
அர்ச்சிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்படுகிற
அருந்தவ நிகழ்விது…

நிக்காஹ் முடிந்த கையோடு
முற்றுப்பெறலாகுமா?

மணவாழ்வினுள்

மனங்கோணாது
பிஸ்மியுடன் திருப்பாதம் பதியுங்கள்

இயன்றவரை முழுமனதாய்
புன்னகை கொடுங்கள்
உங்கள் துணைகொண்டு
இதயவரிகளை இன்பப்படுத்துங்கள்…

விட்டுக்கொடுத்து
நேசக்கரங்களால் நீவி விடுங்கள்…

ரணங்களை விரட்டியடித்து
மனங்களை ஆளப்பழகுங்கள்…

அன்பை மட்டுமே 
போதிக்கப் பழகுங்கள்...

இன்சொல்லை மாத்திரம்
 உச்சரியுங்கள்...

இயன்றவரை 

பாசத்தை சுவாசியுங்கள்...

இருதயங்களை வசீகரிக்கிற
வித்தைகொண்டு
கணவானின் கருத்தோடு
ஒன்றித்துப் போங்கள்...

இறைவனின்
திருப் பொருத்தம் நாடுங்கள்…
குடும்ப வாழ்க்கையும்  
ஓர் இபாதத் ஆகும்

நிகழ்வுகளால் நினைவுகள்
அலங்கரிக்கப்படுகிறது…

இதயங்களை சுகப்படுத்தி
எண்ணங்கள் சுத்திகரிக்கப்படுகிற…
ஒரு புனித யாத்திரை இது….

இருபாலின இருதயங்களின்
ஒருமித்த பயணமிது…

அன்பார்ந்த பூக்கள்
அர்ச்சிக்கப்பட்டு ஆசிர்வதிக்கப்படுகிற
அருந்தவ நிகழ்விது…

நிக்காஹ் முடிந்த கையோடு
முற்றுப்பெறலாகுமா?

மணவாழ்வினுள்

மனங்கோணாது
பிஸ்மியுடன் திருப்பாதம் பதியுங்கள்

இயன்றவரை முழுமனதாய்
புன்னகை கொடுங்கள்
உங்கள் துணைகொண்டு
இதயவரிகளை இன்பப்படுத்துங்கள்…

விட்டுக்கொடுத்து
நேசக்கரங்களால் நீவி விடுங்கள்…

ரணங்களை விரட்டியடித்து
மனங்களை ஆளப்பழகுங்கள்…

அன்பை மட்டுமே 
போதிக்கப் பழகுங்கள்...

இன்சொல்லை மாத்திரம்
 உச்சரியுங்கள்...

இயன்றவரை 

பாசத்தை சுவாசியுங்கள்...

இருதயங்களை வசீகரிக்கிற
வித்தைகொண்டு
கணவானின் கருத்தோடு
ஒன்றித்துப் போங்கள்...

இறைவனின்
திருப் பொருத்தம் நாடுங்கள்…
குடும்ப வாழ்க்கையும்  
ஓர் இபாதத் ஆகும்

Wednesday, September 7, 2011

என்னை உனக்கு நினைவு வருவதே இல்லையா..!!??

என்னை உனக்கு
நினைவு வருவதே இல்லையா...

பழைய கொப்பிகளின்
பின் பக்கத்தில்
நான் கிறுக்கித்தந்த
பாடல்களைப்
பார்க்கும் பொழுதாவது...

இல்லை
நேற்றைய நினைவுகளை
நேர்த்தியாக்கும்

நேற்றைய காற்றை கேற்கும் பொழுதாவது...

ஏகாந்தத்தில்
ஏக்கப் பெருமுச்சோடு மூச்சடக்கி
விழிகள் அயரும்
பொழுதுகளில்...இல்லை
கனவிலேனும்...

ஒரு ரம்யமான பொழுதில்...
நீ எனக்குப்பரிசளித்து
பின்னொரு நாளில்

நான் திருப்பித்தந்த-அந்த

கைக்கட்டையை பார்க்கும் பொழுதாவது...

மழை பெய்து 
ஓய்ந்து போன தெருக்களில்
புத்தகக்கட்டை
மார்போடணைத்து
விழிகளில் நீர் தேங்க
மௌனமாய் நான் 
பயணிப்பதாக
ஒரு பிரம்மையில் கூட...

மழைக்கு ஒதுங்கிய
 என் குடையை 
திருப்பித்தராத கணங்களில்..
அதைக் கொடுக்கமுடிவில்லையே 
என்கிற கவலையிலாவது

என்னை உனக்கு
நினைவு வருவதே இல்லையா....
என்னை உனக்கு
நினைவு வருவதே இல்லையா...

பழைய கொப்பிகளின்
பின் பக்கத்தில்
நான் கிறுக்கித்தந்த
பாடல்களைப்
பார்க்கும் பொழுதாவது...

இல்லை
நேற்றைய நினைவுகளை
நேர்த்தியாக்கும்

நேற்றைய காற்றை கேற்கும் பொழுதாவது...

ஏகாந்தத்தில்
ஏக்கப் பெருமுச்சோடு மூச்சடக்கி
விழிகள் அயரும்
பொழுதுகளில்...இல்லை
கனவிலேனும்...

ஒரு ரம்யமான பொழுதில்...
நீ எனக்குப்பரிசளித்து
பின்னொரு நாளில்

நான் திருப்பித்தந்த-அந்த

கைக்கட்டையை பார்க்கும் பொழுதாவது...

மழை பெய்து 
ஓய்ந்து போன தெருக்களில்
புத்தகக்கட்டை
மார்போடணைத்து
விழிகளில் நீர் தேங்க
மௌனமாய் நான் 
பயணிப்பதாக
ஒரு பிரம்மையில் கூட...

மழைக்கு ஒதுங்கிய
 என் குடையை 
திருப்பித்தராத கணங்களில்..
அதைக் கொடுக்கமுடிவில்லையே 
என்கிற கவலையிலாவது

என்னை உனக்கு
நினைவு வருவதே இல்லையா....

Saturday, September 3, 2011

உருத்தெரியாமல் தகர்த்தவளுக்கு

பூக்களின் மகரந்தங்கள் போல
உனை ரகசியமாய் என்னில்
பதுக்கிய நாட்களிளெல்லாம்….

மெல்லிய அதிர்வுகளால்
ஒரு பூஞ்சோலையின்
சுகத்தினை வசப்படுத்தி
எனை வசியப்படுத்திவிட்டாய்…

இறுதிவரை இனிக்கும் அமுதமாய்
அடிநாக்கில் தித்தித்தாய்…

உன் ஓவியப் புன்னகையில்
ஒரு குழந்தையின் அழகை
ஒழித்துவைத்துக்கொண்டு
மூர்க்கத்தனமாய் முரண்டுபிடிக்க
எப்படி முடிந்தது உன்னால்….

ஏனென்று தெரிவதற்குள்
நம் காதலை கசக்கிப்பிழிய
அப்படி….
என்னடி நேர்ந்துவிட்டது….

உன்னால் நேசிக்கப்பட்ட
நாட்களைவிடவும் அதிகமாய்
அழுதோய்கிற நாட்களேயதிகம்…

கண்மணி….

சத்தமாய் வீசுகிற காற்று
என் ஊமைப்புண்களில் பட்டு
ரணகளமாக்கிச் செல்கிறதடி…

உனை உயிராய் மதித்த
என் காதலை…
உருத்தெரியாமல் தகர்த்தவளே….

என் ஆன்மாவின் வீதி நெடுகிலும்
வெள்ளைக்கொடிதான்
பரக்கவிட்டிருக்கிறேன்
ஒருமுறை வந்து பாரேன்…

பூக்களின் மகரந்தங்கள் போல
உனை ரகசியமாய் என்னில்
பதுக்கிய நாட்களிளெல்லாம்….

மெல்லிய அதிர்வுகளால்
ஒரு பூஞ்சோலையின்
சுகத்தினை வசப்படுத்தி
எனை வசியப்படுத்திவிட்டாய்…

இறுதிவரை இனிக்கும் அமுதமாய்
அடிநாக்கில் தித்தித்தாய்…

உன் ஓவியப் புன்னகையில்
ஒரு குழந்தையின் அழகை
ஒழித்துவைத்துக்கொண்டு
மூர்க்கத்தனமாய் முரண்டுபிடிக்க
எப்படி முடிந்தது உன்னால்….

ஏனென்று தெரிவதற்குள்
நம் காதலை கசக்கிப்பிழிய
அப்படி….
என்னடி நேர்ந்துவிட்டது….

உன்னால் நேசிக்கப்பட்ட
நாட்களைவிடவும் அதிகமாய்
அழுதோய்கிற நாட்களேயதிகம்…

கண்மணி….

சத்தமாய் வீசுகிற காற்று
என் ஊமைப்புண்களில் பட்டு
ரணகளமாக்கிச் செல்கிறதடி…

உனை உயிராய் மதித்த
என் காதலை…
உருத்தெரியாமல் தகர்த்தவளே….

என் ஆன்மாவின் வீதி நெடுகிலும்
வெள்ளைக்கொடிதான்
பரக்கவிட்டிருக்கிறேன்
ஒருமுறை வந்து பாரேன்…

Wednesday, August 31, 2011

நீ யில்லை

புனிதமிகு நாளில்
அன்பே
என்பக்கம் நீ இல்லை...

அதனால்தானோ
எரிகிறது
எனக்குள் மட்டும்
நீ யில்லை

புனிதமிகு நாளில்
அன்பே
என்பக்கம் நீ இல்லை...

அதனால்தானோ
எரிகிறது
எனக்குள் மட்டும்

Saturday, August 20, 2011

நடமாடும் விபத்து

செவ்வதனத்தின்
எழில் செளிக்க
தீஞ்சுவை கக்கும்
செவ்வாயின் தாள் திறந்து
உன்னை
“செப்பு“ என்றது யாரம்மா...?

கானகத்துக் காரிருளை
கரைத்துவிட்ட உன்
கயல் விழிகளை அகல
திரக்கச்சொன்னது யாரம்மா...?

தூர்ந்துபோன
நட்சத்திரத்துணுக்குகளை
இரவுகளின் ஆக்கிரமிப்பில்
அசைந்து கொடுக்கும்
உன் கூந்தலில்
ஆங்காங்fகே
பதித்ததும் யாரம்மா...?

பார்...
அதனால் இங்கே
எத்தனை விபத்துக்கள் என்று....

இந்தக்கூர் முனை மூக்கில்
அப்படியென்ன
பிரகாசத்திட்டு
ஓ....
ஒற்றைக்கல் மூக்குத்தி
அதனால் தானோ இத்தனை
மெருகேறும் எடுப்பு....

உதடுகளின் அசைவில்
தெரித்த துகள்களால்
வெளிக்கிட்டது மின்னல் கீற்று
அந்த
கீற்றுகளை இழையோடி
ஓராடை செய்வதில்
திருப்தி கண்டது
இந்தப் பொல்லாத இதயம்...

உன்
நீண்ட நெடிய பார்வை
என்னில் எதைத்தேடிற்றோ
இப்பொழுது
குற்றுயிராய் கிடப்பது
இந்த உயிர்தான்....

இதோ என் கை
 நீளவும் துணிகிறது
உன்
சிவப்பு நிறத்துப்பட்டாவைக்
கொஞ்சம் கொடேன்
இங்கே
ஆபத்தென்ற அறிவிப்பை
அம்பலப்படுத்தத்தான்...
செவ்வதனத்தின்
எழில் செளிக்க
தீஞ்சுவை கக்கும்
செவ்வாயின் தாள் திறந்து
உன்னை
“செப்பு“ என்றது யாரம்மா...?

கானகத்துக் காரிருளை
கரைத்துவிட்ட உன்
கயல் விழிகளை அகல
திரக்கச்சொன்னது யாரம்மா...?

தூர்ந்துபோன
நட்சத்திரத்துணுக்குகளை
இரவுகளின் ஆக்கிரமிப்பில்
அசைந்து கொடுக்கும்
உன் கூந்தலில்
ஆங்காங்fகே
பதித்ததும் யாரம்மா...?

பார்...
அதனால் இங்கே
எத்தனை விபத்துக்கள் என்று....

இந்தக்கூர் முனை மூக்கில்
அப்படியென்ன
பிரகாசத்திட்டு
ஓ....
ஒற்றைக்கல் மூக்குத்தி
அதனால் தானோ இத்தனை
மெருகேறும் எடுப்பு....

உதடுகளின் அசைவில்
தெரித்த துகள்களால்
வெளிக்கிட்டது மின்னல் கீற்று
அந்த
கீற்றுகளை இழையோடி
ஓராடை செய்வதில்
திருப்தி கண்டது
இந்தப் பொல்லாத இதயம்...

உன்
நீண்ட நெடிய பார்வை
என்னில் எதைத்தேடிற்றோ
இப்பொழுது
குற்றுயிராய் கிடப்பது
இந்த உயிர்தான்....

இதோ என் கை
 நீளவும் துணிகிறது
உன்
சிவப்பு நிறத்துப்பட்டாவைக்
கொஞ்சம் கொடேன்
இங்கே
ஆபத்தென்ற அறிவிப்பை
அம்பலப்படுத்தத்தான்...

Saturday, August 13, 2011

வேண்டாம் இந்தக் கோபம்

இதயத்தின் ஆணிவேரை
ஆட்டம் காண்பிக்கும்
இந்தப் பொல்லாத கோபம்
வேண்டாமே…

பழிக்குப்ப்ழி என்கிற
அறியாமையை
அறிவுடைமையென
எண்ணுகின்ற
பாமரர்களின்
உள்ளங்கைளத்தான்
அச்சகதித் துர்க்குணம்
சீரழித்துச் சின்னாபின்னமாக்கும்

கோபக்கனி
கொந்தழிக்கும் போதுகளில்தான்
ஷாத்தானின் குணங்கள்
தாண்டவமாடத்
தருணம் பார்க்கும்…

சினங்கொண்டோரின் நா
அடங்காது
நெறிகெட்ட வார்த்தைகளை
அபிஷேகிக்கும் இழி நிலைக்கு
உந்தப்படுவாய்….

நிதானம் துறந்து
மதியிழக்க வேண்டுமா…
அக்கினித்தடாகத்தில்
விழ வேண்டுமா….
ஈமானிய ஒளி
சூரையாடப்பட வேண்டுமா…
நீ தாரலமாய்
கோபப்படு….
 
ரப்பின் கடும் கோபம்
உனை
சுட்டெரிக்கட்டும்
நீ கோபப்படு…

எண்ணற்ற தீமைகளை
சுவைக்கத்தோன்றும்
நீ கோபப்படு….

கோபம் பகுத்தறிவின்
விரோதியாம்
பொன்மொழி அறிந்ததில்லையா….

கோபத்தை
நெறிப்படுத்துபவன்
சிறந்த வீரனாம்
தெரிந்ததில்லையா….

கோபச்சுடரை தன்னுள்
அனைப்பவனின் மானம்
காப்பானாம் ரப்பு
உணர்ந்ததே இல்லையா…

கோபத்தை அழித்துவிடு
இல்லையேல் பலகீனப்படுத்து
பலகீனத்தை இதயம்
இயல்பாய்
ஒதுக்கித்தள்ளும்…

முடியவில்லையா….
உடனே வுழூ செய்துகொள்
கோப நெருப்பை வுழூ
அணைத்துவிடும்…

கோபம் முகாமிடும் பொழுதுகளில்
வாய்முடி மௌனியாகு…

கோபத்தை அடக்கிக்கொண்டால்
இறைவன்
தண்டணையை
அடக்கிக்கொள்கிறானாம்….

இத்தனை தெறிந்தும்
வேண்டுமா இந்தக் கோபம்….

இதயத்தின் ஆணிவேரை
ஆட்டம் காண்பிக்கும்
இந்தப் பொல்லாத கோபம்
வேண்டாமே…

பழிக்குப்ப்ழி என்கிற
அறியாமையை
அறிவுடைமையென
எண்ணுகின்ற
பாமரர்களின்
உள்ளங்கைளத்தான்
அச்சகதித் துர்க்குணம்
சீரழித்துச் சின்னாபின்னமாக்கும்

கோபக்கனி
கொந்தழிக்கும் போதுகளில்தான்
ஷாத்தானின் குணங்கள்
தாண்டவமாடத்
தருணம் பார்க்கும்…

சினங்கொண்டோரின் நா
அடங்காது
நெறிகெட்ட வார்த்தைகளை
அபிஷேகிக்கும் இழி நிலைக்கு
உந்தப்படுவாய்….

நிதானம் துறந்து
மதியிழக்க வேண்டுமா…
அக்கினித்தடாகத்தில்
விழ வேண்டுமா….
ஈமானிய ஒளி
சூரையாடப்பட வேண்டுமா…
நீ தாரலமாய்
கோபப்படு….
 
ரப்பின் கடும் கோபம்
உனை
சுட்டெரிக்கட்டும்
நீ கோபப்படு…

எண்ணற்ற தீமைகளை
சுவைக்கத்தோன்றும்
நீ கோபப்படு….

கோபம் பகுத்தறிவின்
விரோதியாம்
பொன்மொழி அறிந்ததில்லையா….

கோபத்தை
நெறிப்படுத்துபவன்
சிறந்த வீரனாம்
தெரிந்ததில்லையா….

கோபச்சுடரை தன்னுள்
அனைப்பவனின் மானம்
காப்பானாம் ரப்பு
உணர்ந்ததே இல்லையா…

கோபத்தை அழித்துவிடு
இல்லையேல் பலகீனப்படுத்து
பலகீனத்தை இதயம்
இயல்பாய்
ஒதுக்கித்தள்ளும்…

முடியவில்லையா….
உடனே வுழூ செய்துகொள்
கோப நெருப்பை வுழூ
அணைத்துவிடும்…

கோபம் முகாமிடும் பொழுதுகளில்
வாய்முடி மௌனியாகு…

கோபத்தை அடக்கிக்கொண்டால்
இறைவன்
தண்டணையை
அடக்கிக்கொள்கிறானாம்….

இத்தனை தெறிந்தும்
வேண்டுமா இந்தக் கோபம்….

Thursday, August 11, 2011

நீ நானாகும் தருணம்

நீ ஏன்

நீங்கிப்போனாய்….!!!
நீ
நானாகும் தருணம்
அதோ அந்த
மைல்கல் தூரம்தான்….

எட்டிப்பிடிக்கும் தூரத்தில்
நீ
தூரவாகிப்போன
துயரம்
தொண்டைக்குள்
சிக்கிக்கொள்ளும்…

முன் பனி இரவுகளில்
எனை போர்த்திய
உன்
கம்பளி நினைவுகள்
இதயத்தை நெருட
இதோ…!!!
என்னில் புல்லரிப்பு
இன்னும் மறைவதாயில்லை…

மௌனம் அடங்கிய
பௌர்ணமி இரவுகளில்
என் பேனா கிறுக்கும்
ஒவ்வொரு வரியிலும்
உன்
மூச்சுக்காற்றின் சூடு
என்னை தகிக்க வைக்கும்…

மெத்தென்ற இதழ்களால்
பூபாளம் தொடங்கி
குத்துகின்ற முற்களால்
முகாரியை ஏனடி
முடிவுரையாக்கினாய்…

உன் நினைவுகொண்டு
நெருப்பு மூட்டி
குளிர் காய்ந்து கொண்டும்…

என்னை நானே
ஒளித்தொகுப்பு செய்துகொண்டும்
அவஸ்தையுமான
என் நாட்களை
கஷ்டப்பட்டு நகர்த்துகின்றேன்…

நகர்கின்ற நாட்களுக்கு
இத்தனை விஷப்பற்களா
பார் !!!
என் தேகமெங்கிலும்
சல்லடைபோட்டு
சலித்தெடுத்த
வடுக்களோடும்…
உன் நினைவுகளோடும்
மரணப்படுக்கைகயில்…

நீ ஏன்

நீங்கிப்போனாய்….!!!
நீ
நானாகும் தருணம்
அதோ அந்த
மைல்கல் தூரம்தான்….

எட்டிப்பிடிக்கும் தூரத்தில்
நீ
தூரவாகிப்போன
துயரம்
தொண்டைக்குள்
சிக்கிக்கொள்ளும்…

முன் பனி இரவுகளில்
எனை போர்த்திய
உன்
கம்பளி நினைவுகள்
இதயத்தை நெருட
இதோ…!!!
என்னில் புல்லரிப்பு
இன்னும் மறைவதாயில்லை…

மௌனம் அடங்கிய
பௌர்ணமி இரவுகளில்
என் பேனா கிறுக்கும்
ஒவ்வொரு வரியிலும்
உன்
மூச்சுக்காற்றின் சூடு
என்னை தகிக்க வைக்கும்…

மெத்தென்ற இதழ்களால்
பூபாளம் தொடங்கி
குத்துகின்ற முற்களால்
முகாரியை ஏனடி
முடிவுரையாக்கினாய்…

உன் நினைவுகொண்டு
நெருப்பு மூட்டி
குளிர் காய்ந்து கொண்டும்…

என்னை நானே
ஒளித்தொகுப்பு செய்துகொண்டும்
அவஸ்தையுமான
என் நாட்களை
கஷ்டப்பட்டு நகர்த்துகின்றேன்…

நகர்கின்ற நாட்களுக்கு
இத்தனை விஷப்பற்களா
பார் !!!
என் தேகமெங்கிலும்
சல்லடைபோட்டு
சலித்தெடுத்த
வடுக்களோடும்…
உன் நினைவுகளோடும்
மரணப்படுக்கைகயில்…