Wednesday, October 26, 2011

நீயே என் சுவாசம் 11

அத்தியாயம் 11

காரை சீராக ஓட்டமுடியவில்லை ரிஷியிற்கு….
உடம்பில் பதட்டமும் ஒருவகை நடுக்கமும் உடம்பு முழுதும் பரவிஅவனை என்னவோ செய்தது…..

மானிஷாவுக்கு ஏதாவது நடந்திருந்திருக்கட்டும்….
அர்ஜுனுக்கு சாவு நிச்சயம்தான்….
மனதினில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களின் போராட்டத்தின் மத்தியில் பெரிய போதனா வைத்தியசாலையை அடைந்தான்….

கம்பீரமான தோற்றத்திலிருந்த போலிஸ் அதிகாரிஒருவரைக் கண்டதும்
…இன்ஸ்பெக்டர் பாலாஜி இவராகத்தான் இருக்கவேண்டும் என்று
 ஒரு யூகத்தில் போய் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் ரிஷி….

ஆம் அவர் இன்ஸ்பெக்டர் பாலாஜியேதான்….

“ டொக்டர் ரிஷி…..உங்களுக்காகத்தான் காத்திருந்தேன்…..”

“ஓக்கே …எங்க மானிஷா….அவளைப்பார்க்கலாமா….அவளுக்கு ஒன்றும் இல்லைதானே….இன்ஸ்பெக்டர்….” அடுக்கடுக்காய் கேள்விக் கணைகள்….

“ பதற்றப்படாதீங்க….நீங்க ஒரு டொக்டர்….நான் சொல்லித்தருவதற்கில்லையே…..”

“ என்ன இன்ஸ்பெக்டர்  பேசிப்பேசியே மோச்சுவரிக்கு வந்திருக்கோம்…”

“ஐயம்சொரி மிஸ்டர் ரிஷி…நீங்கள் அடையாளம் காட்டவேண்டியது ஒரு டெட்பொடியைத்தான்….”கூறியபடியே…..அங்கு கிடத்தப்பட்டிருந்த சிதைந்த உடலை திறைவிலக்கிக் காட்டியபோது…..

மனதுக்குள் ஒரு பூகம்பமே வெடித்துச்சிதறியது ரிஷியிற்கு…..

“மானிஷா…” தீணக்குரலில் அழுதான்….அவளது காலலைப் பற்றிக்கொண்டு….மௌனமாய் குமுறினான்….

அர்ஜுனின் முகம் விகாரமாய் மணக்கண்ணில் வந்துபோனது…..விடமாட்டேன்டா…உன்னைவிடமாட்டேன்….உள்ள சபதமிட்டான்….தன்னை ஒருவாரு கட்டுப்பாட்டுக் கொண்டுவந்தான் ரிஷி…..

“ அந்த முகம் தெரியாதவனை இன்னும் கண்டுபிடிக்கலையா இன்ஸ்பெக்டர்….”

“ இன்னும் தேடிட்டுத்தான் இருக்கோம்….ஈவினிங் எப்படியும் கண்டுபிடச்சுடுவம்…..ஃபோட்டோ இருந்ததுன்னா…இன்னும் ஈஸியாயிடும்…”

“ இன்ஸ்பெக்டர்…என்னிடம் ஃபோட்டோ இருக்கு…”

“ எப்படி…” இன்ஸ்பெக்டரின் முகத்தில் அதிர்ச்சி கலந்த முருவல்….

ரிஷி…..முழுவிவரத்தையும் கூறி அர்ஜுனின் ஃபோட்டோவை காண்பித்தான்…பாலாஜியின் கரங்களுக்கு ஃபோட்டோ இடம் மாறியது….
பாலாஜியின் முகத்தில் பலத்த ஏமாற்றத்தின் ரேகைகள் படர்ந்ததை ரிஷி கண்டுவிட்டான்….

” என்ன இன்ஸ்பெக்டர்….”ஒரு நிமிடம் பலத்த மௌனம்….

“ ரிஷி….உங்களுக்கே இப்படி அடுக்கடுக்காய் ஏன் சோதனை வருதுன்னு எனக்கு சொல்லத் தெரியலை….அடுத்த டெட்பொடியை திறந்து காட்டினார் இன்ஸ்பெக்டர்….

“ அர்ஜுன்….”

 வாய்விட்டே கத்திவிட்டான்….

“இங்கே என்ன நடக்குது …” ரிஷியின் வார்த்தையில் விரக்தி வெளிப்படையாகவே இழையோடியிருந்தது….

“இவரு குற்றவாளியா இருக்க சாத்தியக் கூறுகள் குறைவு…. மிஸ்டர் ரிஷி….”

“ எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க….”

“ இவுங்க ரெண்டுபேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா நீங்க சொன்னாலும்…சம்பவம் நடக்கிறப்போ பக்கத்திலிருந்தவங்க யாரும் இதுபற்றி சொல்லலை….
அதுமட்டுமில்லை இந்த எக்ஸிடன்ட்ல இவங்க ரெண்டு பேர் மட்டும் இல்லாமல் இன்னும் நாளஞ்சிபேர் இறந்திருக்காங்க….
இன்னும் சிலருக்கு பலத்த காயம்….பொது இடம் என்றதால… யாரையும் யாருடனும் சம்பந்தப் படுத்தி…விசாரிக்க முடியலை…
அதனாலதான் தனித்தனியா என்கொயரி நடத்திட்டிருக்கோம்…. ”

“ எப்படி இன்ஸ்பெக்டர் இது…”

“ தண்ணி லொரில வந்திருக்கான்…. விபத்து நடந்தவுடன் அவன் தப்பிச்சுவிட்டான்….
வண்டிக்கே நிறைய சேதம் எனும் போது… அவனும் நிச்சயம் ஆபத்தான கட்டத்துலதான் இருக்கவேண்டும் இது என் கணிப்பு…..”

“அப்போ வண்டி ஓட்டிட்டு வந்தவன் வேண்டுமென்றேதான்… இடிச்சிருக்கானா….”

“ஆமாம்….அந்த தண்ணி லொரிக்கு சொந்தமானவங்களை விசாரிச்சிட்டன்….அவுங்களுக்கும் இதுக்கும் எந்தவிதமான நம்பந்தமும் இல்லைனு நிரூபணமாகிச்சு...
இது வேண்டுமென்று நடத்தப்பட்ட விபத்துன்னு ஊர்ஜிமாகுது…
நீங்க கவலைப்படாதிங்க….கூடிய சீக்கிரத்தில் அந்தக் கொலைகாரனை கண்டுபிடிச்சிடுவோம்….”இன்ஸ்பெக்டர் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டகன்றார்….

அர்ஜுன்.. மானிஷாவின் ..இறுதிக்கிரியைகளை நடத்துவதற்காய் மனதைத் திடப்படுத்திக்கொண்டான்….. ரிஷி ..

                                தொடரும்...

நீயாகிப்போனபோது....

நீ
என்னைப் பாராமல்
இருந்தால்
நான் எழுதும் எழுத்துக்கு
கவிதையென்று
பெயர் வந்திருக்காது....

என்னோடு 
பழகாமல் இருந்தால்
இந்தக் கவிதைகளில்
ஏற்ற இரக்கங்கள்
இருந்திருக்காது....

எனக்குள் உன்னை
திணிக்காதிருந்தால்
சமூகம் என்னை
அறிந்துவிடும் வாய்ப்பை
இழந்திருப்பேன்....

என்னைவிட்டும் 
நீ
பிரியாமல் இருந்தால்
என் கவிதைகளில்
இத்துனைசோகம்
முகாமிடுவதற்கு
அவகாசமே இருந்திருக்காது....

நான்
நீயாகிப்போனபோது
எனக்குள் இருந்த
நீ
விலகிப்போனதைத்தான்....
இன்னும் நம்பமுடியாதவளாய்....
              00000
நீ
என்னைப் பாராமல்
இருந்தால்
நான் எழுதும் எழுத்துக்கு
கவிதையென்று
பெயர் வந்திருக்காது....

என்னோடு 
பழகாமல் இருந்தால்
இந்தக் கவிதைகளில்
ஏற்ற இரக்கங்கள்
இருந்திருக்காது....

எனக்குள் உன்னை
திணிக்காதிருந்தால்
சமூகம் என்னை
அறிந்துவிடும் வாய்ப்பை
இழந்திருப்பேன்....

என்னைவிட்டும் 
நீ
பிரியாமல் இருந்தால்
என் கவிதைகளில்
இத்துனைசோகம்
முகாமிடுவதற்கு
அவகாசமே இருந்திருக்காது....

நான்
நீயாகிப்போனபோது
எனக்குள் இருந்த
நீ
விலகிப்போனதைத்தான்....
இன்னும் நம்பமுடியாதவளாய்....
              00000

Thursday, October 20, 2011

நீயே என் சுவாசம் 10

அத்தியாயம் 10

டயரியில்……
முதல் ஓரிரண்டு மாதம் வரை சுமுகமான நடவடிக்கைகள்….
அன்றாட நடவடிக்கைகள்….பாட்டி…அம்மா.. தங்கை…வேலை..விட்டால் வீடு…
.எந்தவித சலனமுமில்லாத….பொறுப்புள்ள மூத்தபையனுக்குறிய அம்சத்துடன் பதியப்பட்ட நாளாந்த நடவடிக்கைகள்…
இதுதான் ரிஷி அறிந்த அர்ஜுனின் உண்மையான முகம்….

பக்கங்களப் புரட்டினான்….

முதன் முதலாய்….காதல் வயப்பட்ட….வரிகள்….மின்னின….
பெயர் குறிப்பிட்டிருக்கவில்லை அங்க வர்ணிப்பெல்லாம் மானிஷாவுக்கு அப்படியே பொருந்திநின்றது….
முதல் சந்திப்பு….இரண்டாம் சந்திப்பு….படிப்படியாக காதல் கனிந்தகதை….பல பக்கங்களை விழுங்கி இருந்தது….

“ இன்று என் தேவதையின் முகம் வாட்டத்தில் சுருங்க ….காரணம் கேட்டபோது….மாமா பையன் பரணி வெளிநாட்டிலிருந்து வந்த கதையை ஒப்புவித்தாள்….
தன்னை கல்யாணம் பண்ணனும் என்கிற நோக்கத்துக்காகத்தான் இங்கே வந்திருப்பதாகக் கூறவும் முதல் எதிரி முளைத்ததில் சற்று வருத்தம்தான் எனக்கு….

‘நாம கல்யாணம் பண்ணிப்போமா என்று தயங்கியபடியே நான் கேட்டக
” ரெஜிஷ்டர் மேரேஜ் பண்ணிப்போம்….அக்காவின் சம்மதம் கிடைத்தபின் மெதுவா அவகிட்ட உண்மையை சொல்லிடுவோம்….அதைவிட்டா எனக்கு வேறு வழி தோன்றவில்லை…” கண்ணீர் மல்கக் கூறுகையில்…எனக்கும் அது சரியென்றே பட்டது….

பல பக்கங்கள் வெறுமை….

இன்று ….

பரணி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு முன்வந்து நின்றபோது நம்பமுடியவில்லை….நல்லவனா இருக்கமாட்டானா என்று எதிர்பார்த்ததை உடனே தவிடு பொடியாக்கினான்…..
அவளைவிட்டு விலகிடு….இல்லை…கொடுமையான விபரீதங்களை சந்திக்கவேண்டிவரும்….
பரணியின் மிரட்டல் அடிக்கடி மிதந்தாலும்   எங்கள் சந்திப்போ காதலோ தடையின்றி அரங்கேரிக்கொண்டிருந்தது….

இன்று….

பரணியையும் எனது தங்கையையும்…..ஒன்றாய் …ஷொப்பின் கொம்ப்லெக்ஸ்ஸில் பார்த்தபோது ஆடிப்போனேன்…..
அவன் பழிவாங்குகின்றானா…..குழம்பிப்போனேன்….
எனது காதலை விட்டுக்கொடுக்கிற நிலைமைக்கு என்னை தயார்படுத்த முயலவே இல்லை….அவள் என்னவளாகிவிட்டதனால்….
பேசிப் பார்த்தேன்….பலனில்லை….

அவனோ கருனையே இன்றிப் பேரமல்லவா பேசினான்….
சொந்த ரத்தம்…..அவளுக்குச் செய்யாமல் வேறு யாருக்கு செய்யப்போகிறேன்….குடும்பத்தில் செல்லம்…குடும்பக் குத்துவிளக்கே அவள்தானே…..
எனது சக்திக்கு மீறிய தொகையை கேட்டிருந்தாலும் பாசம் கண்முன்னே ஊசலாட தயக்கமின்றி ஒத்துக்கொண்டு கையெழுத்தும் போட்டுவிட்டேன்….

….

இன்று மனசே சரியில்லை…..

இன்று வேலை அதிகம்….

…..

எனது தேவதையை இப்பொழுதெல்லாம் நினைத்தமாத்திரத்தில் பார்க்கவே முடியிரதில்லை…

பக்கங்கள் வெறுமை…

வெறுமை….

….

இன்றைய நாள் ஏன் விடிந்ததோ…..

அண்ணா மன்னிச்சிருண்ணா….நான் மோசம் போயிட்டேன்….

தங்கை கால்களைப் பற்றி அழுது புரல்கையில்…. நெஞ்சில் விழுந்தது முதல் இடி…..

“தனது விருப்பத்துக்குறிய அக்கா எங்கள் காதலுக்கு சிவப்புக் கொடியைத் தூக்கிவிட்டாள்…பரணியுடன் சேர்ந்து எங்களைப் பிரிக்க என்னவோ ப்ளேன் பண்றாங்க”

தனது அன்புக் காதலியின் வாசகங்கள் நினைவு வர….தேகம் வியர்வையில் நனைந்தது.....
….
முகம் தெரியாத அந்த அக்காமீது…கோபமும் வைராக்கியமும் கரைபுரண்டது….

அடுத்து என்ன செய்யப்போகிறோம்….ஒன்றும் புரியவில்லை….
அடுத்து செய்யப்போகும் காரியத்துக்கு தங்கையிடம் போராடி புரியவைத்து சம்மதம் வாங்குகையில் போதும் போதும் என்றாகிவிட்டது….

இன்று

தங்கையுடன் மருத்துவமனைக்குச்சென்றேன்….தெரிந்த லேடி டொக்டரிடம் எப்பொய்ன்மனட் வாங்கி இருந்தோம்…பரிசோதித்துவிட்டு….இன்னுமொரு திகதியில் மீண்டும் வந்து சந்திக்க சொன்னபோது ஏற்பட்ட பதற்றத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன்……

சொன்ன திகதியில் தங்கையுடன் மீண்டும் .போனேன்…

காரியம் கைநழுப்போயிருப்பதாகக்  டொக்டர் கூறுகையில்…..உடைந்து போனேன்….
அதையும் தாண்டிய இன்னொரு விடயத்தை கூறுகையில் உயிர்வற்றி…இடிந்து நொருங்கிப்போனேன்…. ..
தங்கைக்கும் வயிற்றில் உள்ள சிசுவுக்கும் எயிட்ஸ்…உயிர்கொல்லி எயிட்ஸாம்….

என்னென்னமோ டொக்டர் சொன்னார் காதில் விழவே இல்லை…
நடைப்பிணமாய் வீடுவந்து சேர்ந்தோம்…..தங்கையின் முகத்தை பார்க்கவே சங்கடமாகிவிட்டது….

அப்பாவிப் பெண்ணை… பாவி அவன்… எப்படிக்கவுத்தானோ….

இத்தனை நடந்தும் இலகுவான மனம் படைத்த அம்மாவிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை….எனக்குத் தெரியும்….அம்மாவுக்கு தாங்கிககொள்ள சக்தியில்லை என்று….

….

ஒருநாள்…

….பரணியினுடனான திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடக்குது என்றாள்….

சுமுகமான சூழ்நிலை இங்கில்லை….

“ஒரு முக்கிய விடயம் சொல்லியே ஆகனுமென்றாள்….”

எனது சிந்தனை தேக்கநிலையைவிட்டு மீள நாட்கள் தேவைப்பட்டன…

….

இன்று

தங்கையின் அறைக்கதவை திறந்து உள்ளே போக 
வரவேற்றது தூக்கில் தொங்கிய அவளது சடலமே…..

அதைப்பார்த்த அதிர்ச்சியில் கலங்கிப்போன அம்மாவின் சித்தத்துக்கு…செய்யாத மருத்துவம் இல்லை….

இன்று….

முகம் தெரியாத ஒ குளு என்னை அழைத்துச்சென்றபோது அச்சத்தில் சிறிது நடுங்கியது உண்மைதான்…
அவர்களின் கீழ் நான் வேலை பார்பதாகதாகவும்...இன்லீகல் விடயங்களில் அவர்களுக்கு துணைநிற்பதாகவும்… கையெழுத்துப் போட்டிருக்கிறேனாம்...ஆதாரம் காட்டினார்கள்...…விலக நினைத்தால் உயிர்சேதம் சம்பளமாகும் என்றார்கள்...
 .
தலைசுற்றினாலும்….பரணி திட்டமிட்டு என்னை சிக்கலில் மாட்டிவிட்டதை நினைக்கையில்….இருவர் மீதும் பலிவாங்கும் உணர்வு கொப்புளித்தது….

….

இந்த நேரத்தில் ஆதரவாய் இருக்கவேண்டிவளின் வருகை படிப்படியாகக் குறைந்தது….
முற்றாக வருகை நின்றேபோனது…..காதல் பற்றிய எண்ணமும் கருகிவிட்டது

இன்றுவரை அந்த முகம்தெரியாத கும்பல் பற்றி துளியும் தெரிந்துகொள்ள முடியவில்லை….அவர்கள் இட்ட வேளையை முடித்துக் கொடுத்து….நாட்களை கடத்துகிறேன்…..

காப்பகத்தில்… பார்க்க முடியாத கோலத்தில் அம்மா….
வீட்டில் துணைக்குப் பாட்டி….
கருகிய காதல்… 
கசந்த வாழ்க்கை….

பல பக்கம் வெறுமைளை விழுங்க…..

நேற்று….

மானிஷாவின் அழைப்பு…..

மனம்விட்டுப் பேசனுமாம்…
சில உண்மைகளை விவரிக்கனுமாம்….ப்ளாஸா கோணர் அருகே காத்திருக்கிறாளாம்….

அவளைப் பழிவாங்க இதைவிட்டா ஒரு சந்தர்ப்பம் கிட்டவே கிட்டாது….

முழு மூச்சாக வாசித்த ரிஷி மூச்சுவிடுவதற்கு சற்று சிரமப்பட்டான்….
என்ன பண்ணலாம் யோசித்தான்….
கையடக்கத் தொலைபேசி சிணுங்க…..

“ சொல்லுங்க….”

“ நான் இன்ஸ்பெக்டர்….இன்னுமா நீங்க கிளம்பலை….”

“ இல்ல இன்ஸ்பெக்டர்… சின்ன ஆதாரம் கிடச்சிருக்கு….இதோ வந்திட்டன்…”

தொடர்பை துண்டித்துவிட்டு….பாட்டியிடம் சொல்லாமலேயே கிளம்பிவிட்டான்

                                  தொடரும்....

Monday, October 17, 2011

நீயே என் சுவாசம் 09

அத்தியாயம் 09

 இருப்புக்கொள்ளவில்லை ரிஷியிற்கு…மணி ஆறைத்தாண்டிவிட்டது….இன்னும் மானிஷாவைக்காணவில்லை.குட்டிபோட்ட பூனைமாதிரி குறுக்கும் நெடுக்குமாக நடந்து வராண்டாவை அளந்துகொண்டிருந்தான்…அவளது கையடக்கத் தொலைபேசிக்கு முயற்சித்தான் …

“ரிங் போகுது…ஏன் ஆன்ஸர் பண்றாளில்லை…”முணுமுணுத்தவன்

 ஸோஃபாவில் அமர்ந்து பத்திரிகைகளைப் புரட்டினான்….மனம் ஒட்டவில்லை எதிலும்..
அவனது விழிகள் முன் கதவிலும் கடிகாரத்திலும்…தாவித்தாவியே கலைத்துப்போய்…இளைப்பாரத்துவங்கியது… தன்னை அறியாமலேயே உறங்கிட்ட ரிஷி…எழுந்துபார்த்தான் என்ன ஆச்சரியம் மணி காலை நான்கு என்பதை …சந்தேகமின்றி கடிகாரம் சுட்டிக்காட்டியது.திடுக்கிட்டான் ரிஷி….மானிஷா வந்துபோனதற்கான எந்தவித அடையாளமும் இருக்கவில்லை.பதரிய ரிஷி குளியலுக்காக ஓரிரு நிமிடங்களை செலவிட்டு பின் டீ சேர்ட் பேன்ட் இற்கு மாறினான்.
முன் கூடத்தில் தொலைபேசி மணி அடிக்கவும்….பதறிப்போய் பற்றிக்கொண்டான்

“ ஹலோ….மானிஷா….எங்க இருக்கே….ஏன் வரலை…” வார்த்தையில் பரபரப்பு

“  ரிஷி நீங்கதானா..?”

“ ஆமாம் நீங்க…” எதிர்முனையில் ஒரு கரகரத்த குரல்…. ரிஷியின் வார்த்தைகளில் ஒரு தெளிவின்மை தெரிந்தது

“ நான் இன்ஸ்பெக்டர் பாலாஜி…..மானிஷா என்கிறது…யாருன்னு தெரிஞ்சுக்கலாமா….”

“நான் கட்டிக்கப்போற பொண்ணுதான் மானிஷா …ஏன் இன்ஸ்பெக்டர்….ஏதாச்சும் பிரச்சனையா….”
“ஸொரி மிஸ்டர்…..சின்ன எக்சிடன்ட்…அந்தப்  பெண்ணின் மொபைலுக்கு கடைசியா கோல் பண்ணி இருப்பது நீங்கள்தான்… அதான் கோல் பண்ணினேன்….கண்போஃம் பண்ணிக்க ஜெனரல் ஹொஸ்பிடல்க்கு  வர வேண்டிஇருக்கும்….“

“வர்றேன் இன்ஸ்பெக்டர்….” கூறி முடிக்கையில்…..உலகமே சுழல்வதாய் உணர்ந்தான்….

“மிஸ்டர் ரிஷி….விபத்துக்குக் காரணமானவன் தப்பிச்சிட்டான்…..வேணுமென்று இடிச்சிட்டு தப்பிட்டதாகத்தான் எக்ஸிடன்ட்டை நேரில் பார்த்தவங்க சொல்லுறாங்க….அந்த வண்டிக்கும் நிறைய சேதம் ஏற்பட்டிருக்கலாம்…நிச்சயமா  அவன் தப்பிக்க வழி இல்லை….பக்கத்து ஹொஸ்பிடல்ஸ்….ஹெல்த் ஸென்டர்…எல்லாமே செக்பண்ணிட்டிருக்கோம்…நீங்க….சந்தேகப்படும்படியா யாராச்சும் இருக்காங்களா….”

அப்படியே இருக்கையில் அமர்ந்தவனுக்கு…சுற்றுப்புற சூழல் இருளக்கண்டான்….

“ இல்..லை…இல்லை ”

“ ஓக்கே..சீக்கிரம் சந்திக்கலாம்…”தொடர்பு துண்டிக்க…தொண்டையின் வரட்சியை உணர்ந்தான்….மெல்ல எழுந்து….ஃபிரிஜ்ஜைத்திறந்து ஜில்லென்ற தண்ணீர் போத்தலை எடுத்து மடமடவென்று அருந்தினான்…பின் தன்னை நிதானப்படுத்திக் கொண்டான்.
“ இது நிச்சயமா அர்ஜுனின் வேலையாகத்தானிருக்கும்….இனியும் தாமதிக்கக்கூடாது…நட்பையே கலங்கப்படுத்திட்டான் பாவி….. அர்ஜுனுக்கு அலைப்பை ஏற்படுத்தினான்…..“ நொட் ரீச்சபல்….” என்றது…..மொத்த சந்தேகமும் அர்ஜுனின் மேல் பதிந்தது…

“ கன்போஃமா இவன்தான்…எங்க தப்பிச்சிட்டானோ….வீட்டுக்குப் போனால் ஏதாச்சும் தடயம் கிடைக்கும்….”உடனே அர்ஜுனின் வீட்டை அடைந்தன் ரிஷி…..

“ பாட்டி அர்ஜுன் இருக்கானா….”

“ இல்லையேப்பா….நேற்று போனவன் இன்னும் வீடு திரும்பலை…..“
எக்ஸிடன்ட்டைப் பண்ணிட்டு எப்படி வீட்டுக்கு வருவான்….மனதுக்குள் புலம்பினான்

“என்னப்பா நீயா ஏதோ பேசிக்குறே….”

“இல்லைபாட்டி….நான் அர்ஜுனுக்கு ஒரு ஃபைல் கொடுத்திருந்தேன்….அது இப்ப எனக்குத் தேவைப்படுது….அதான் எப்படி எடுக்குறதுன்னு யோசிக்கிறேன்…” ஒரு பொய்யை கஷ்டப்பட்டு அவிழ்த்துவிட்டான்

“இதுல யோசிக்க என்ன இருக்கு… அவன்ட ரூமுக்குப் போயி நீயே தேடி எடுத்துக்க….”

“ சரி பாட்டி…”பாட்டி சொன்னதுதான் தாமதம் அவசர அவசரமாய் தேடுதல் வேட்டையில் இறங்கினான் ரிஷி….

ஒன்றும் தட்டுப்படவில்லை….அந்த போஃட்டோ உற்பட.சோர்ந்து போனான் ரிஷி….இதற்குமேல் என்ன செய்யப்போகிறோமென்று துளியும் புரியவில்லை…..

அங்கே மானிஷா என்ன பாடோ….கவலை வேறு அவனை வருத்த…. அர்ஜுனின் மேல் கட்டுக்கடங்காத கோபம் பீரிட்டது….ஒட்டுமொத்த கோபத்தையும் அடக்க முடியாமல்….கட்டிலில் இருந்த தலையணையை எடுத்து சுவற்றுக்கு நேரே வீசி…தனது கோபத்தை குறைத்துக்கொண்டான்…

தலையணைக்கு கீழிருந்த டயரியும் பேனாவும் சுவற்றில் பட்டுத் தெரித்து ரிஷியின் காலருகே வந்து விழுந்தது…..
குனிந்து எடுத்தான் …பிரித்தான் …அது அர்ஜுனின் டயரி….முகம் மலர….ஒவ்வொரு பக்கமாய் பிரித்து வாசித்தான்…..அதிர்ந்தன்…..

டயரியில்…..

Thursday, October 13, 2011

நீயே என் சுவாசம் 08

அத்தியாயம் 08

போக்குவரத்தும் சன நெருக்கடியும் குறைந்த சாலை ஓரம்.அந்த வெள்ளை நிற டொயோட்டா நிறுத்தப்பட்டிருந்தது…
அதிலிருந்து மானிஷாவின் மெல்லிய விசும்பல் சன்னமாகக் கேட்டது.
“ எனக்குப் பயமா இருக்கு ரிஷி….” விசும்பினாள் மானிஷா.

“ மானிஷா நான் உங்களை லவ் பண்றேன்….யார் என்ன சொன்னாலும் உங்க மேலவெச்ச அன்பில் மாற்றங்கள் வந்துபோகாது….என்கிட்ட வந்துட்டீங்க….இனி உங்களுக்கு ஆருதலா இருப்பேன் மானிஷா…”அவளது தளிர்க்கரம் பற்றி……ஆறுதல் கூறினான் ரிஷி.

“ரிஷி இந்தக் கொஞ்சநாள் பழக்கத்தில்…என்னைப்பற்றி உங்களுக்கு என்னதெரியும்….ட்ரெயினிங் முடிஞ்சு இப்பதானே சேர்ந்திருக்கேன்…”

“ இது என்ன கேள்வி மானிஷா….ஒருவரின் நடத்தைன்றது….அந்த நபரின் அடிப்படைக் குணவியல்புகளால உருவாகிறது…அது போலியா இருந்தால் …எல்லா நேரமும் எல்லா சந்தர்ப்பத்துலயும் ஒரேமாதிரி நிலைச்சிருக்க முடியாது….…ஏதாவது ஒன்று அவர்களின் சுயருபத்தை  காட்டிக் கொடுத்துவிடும்….ஆனால்….என் மானிஷா எப்பவும் மானிஷாவாகத்தான் இருந்திருக்கா…என்ன நான் சொல்றது…சரிதானே…”

இருக்கையில் சாய்ந்து… மெல்லக் கண்களை மூடினாள்….மானிஷாவைப் பார்க்கையில் பாவமாக இருந்தது ரிஷியிற்கு….
மெதுவாய் காரை முன்னோக்கி நகர விட்டான்….பாதை பிரிந்து ஹைவேயில் தொடர்ந்தது…
அவர்களது வண்டி ப்ளாஸா கோனரை அன்மிக்கவும்….

“ரிஷி….நான் இங்க இரங்கியாகனும்….முக்கியமான ஒரு ஃபிரண்டை சந்திக்கனும்….”

“ “துணைக்கு நானும் வரட்டா மானிஷா…..”

“வேணாம் ரிஷி…அவசியப்படாதுன்னு நெனக்கிறேன்…என்ன நடக்குதுன்னு இதுவறை நீங்களா என்கிட்ட எதுவும் கேட்டதில்லை…அது உங்க கள்ளமற்ற மனச பிரதிபளிக்குது… இனிமே அப்படி கேட்கிற நிலமைக்கு  இடம் வைக்காமல் என் காதலைப் புரியவைப்பேன்…  நல்லதே நடக்குமென்று நம்புவோம்…  இனிமே நமக்குள்ள எந்த ஒளிவுமறைவும் இருக்கப் போறதில்லை….”

“ என்ன மானிஷா…இன்னிக்கு இப்படி தத்துவமெல்லாம் பேசுறீங்க…கலங்கடிக்குற சோகம் வந்தால் இப்படித்தான் பேசுவாங்களோ….”

“ என்னை ரொம்ப நல்லா புரிஞ்சு வெச்சிருக்கீங்களே…”

“ புரிஞ்சு எந்தப் பயனுமில்லையே….உங்க சோகத்துல பங்கெடுக்க…நீங்க வாயைத்திறந்து ஒன்றும் சொல்ல மாட்டேங்குறீங்களே…. முடியலை மானிஷா….”

“நான் தொடக்கிவெச்சது…இதை நான்தான் முடிவுக்கு கொண்டுவரணும்… அதான் சொன்னேனே….ரிஷி….இனிமே நமக்குள்ள இப்படியொரு நிலமை வர விடமாட்டேன்…அதுக்காகத்தான் இந்தக் கஷ்டங்களை பொறுத்துக்கிறேன்….”

 “ மானிஷா…எனக்கென்னவோ…இது சரியாகப்படலை….”

தன் கைப்பையை மறந்து….காரைவிட்டிரங்கினாள் மானிஷா.கார் கண்ணாடியை கீழிறக்கினான் ரிஷி….குனிந்து ரிஷியைப் பார்த்து

 “ இல்ல ரிஷி….நீங்க போங்க…இனி எல்லாம் நல்லதே நடக்கும்….ஈவினிங் ஸிக்சுக்கெல்லாம் நான் வந்திடுவேன்….பயப்படாம இருங்க….”

மானிஷா கூறிவிட்டு ரிஷியின் பதிலுக்குக் காத்திருக்காமல் பளிச்சிடும் ப்ளாஸா கோனருள் நுழைந்தாள்….ஒரு சோடிக் கண் அவர்களை பழிவாங்கும் வெறியுடன் நோட்டமிட்டதகை் காணுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை….

ரிஷி சிவப்பு நிற சிக்னலில் சில நிமிடங்களைக் கரைத்து…யூ டேர்னில் திரும்பி வரும்போது….ப்ளாஸா கோனர் முன் அர்ஜுனும் மானிஷாவும்…சைகைகளால் ஏதோ காரசாரமாக பேசிக் கொள்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாக விளங்கிற்று…என்னசெய்வதென்று ரிஷியிற்குப் புரியவில்லை….மானிஷாவின் பேச்சை மதிக்காது அவர்களைப் பின் தொடருவது நாகரிகமாகப் படவில்லை ரிஷியிற்கு….மலைபோன்ற கணமான சோகத்தோடு….தனது வண்டியை வீடு நோக்கி நகரவிட்டான்

Wednesday, October 12, 2011

நீயே என் சுவாசம் 07

அத்தியாயம் 07

கண்கள் அசதியில் முடியிருந்தாலும்….
நினைவுகளும்…எதிர்பார்ப்புகளும்…சதா..விழிப்பிலேயே இருந்தது மானிஷாவுக்கு….
தொலைபேசி அலறவும் பதட்டமாய்..எழுந்து அமர்ந்துகொண்டாள்.
விடாமல் ஒலித்தது மணி….மணியைப்பார்த்தாள்
 இன்னும் காலை ஐந்தைத்தாண்டியிருக்கவில்லை….யாராக இருக்கும் அழுத்துக்கொண்டே கையில் தாங்கி காதுகளில் பதித்தாள்….

“ஹலோ…”

“ மோனிங் மானிஷா…..கோச்சுக்காதடா…
.என் பியூட்டிக்கு பெட்கோஃபி வேணுமாம்….ரெண்டு போட்டுத்தறியா….”

“ சீ வெக்கமாயில்ல உனக்கு….”

“கொண்டுவரப்போறியா…இல்லயா…இல்லன்னா  
விளைவுகள் என்ன என்று நான் சொல்ல தேவலைனு நெனக்கிறேன்….” வார்த்தைகளில் மிரட்டல் அதிகமாகவே இருந்தது

வேண்டா வெறுப்புடன் எழுந்த மானிஷா…
கையில் தேனீருடன் அறையை நெருங்கினாள்…
.பரணி யாருடனோ தொலைபேசியில் பேசுவது மானிஷாவின் காதுகளில் மெலிதாய் விழுந்தது…காதுகளைக் கூரிமையாக்கிக்கொண்டாள்…

“ சே.. என்ன பண்றே…நேத்து ஒரு ஆள் வேனுமென்றேன்…மப்புல இருந்துட்டு இப்பவா கோல் பண்றே….”

 “…….”

“ஓக்கே…அவனுக்கிட்ட போஃனைக் கொடு…..”

“……..”

“என்ன நான் சொன்னது புரிஞ்சுதா….
இந்த எட்ரஸ்ஸை நோட் பண்ணிக்க…..
அறைமணி நேரத்துல…நீ அங்க இருக்கனும்…புரிஞ்சுதா….”

தொடர்பை துண்டித்தான் பரணி….குறிப்பிட்ட விலாசத்தை மானிஷா…
.மனதுக்குள் குறித்துக்கொண்டாள்….சிறிது நேரம் தாமதித்து….பின்..
அவர்களது அறைக்குள் நுழைந்தாள்.
.தேனீரை மேசை மீது வைத்துவிட்டு திரும்பிப்பாராமலேயே வெளியே வந்தாள்…

“ஏய் நில்லு…."

மானிஷாவை தடுத்து நிறுத்தின அவளது அகங்காரக் குரல்…
சற்றே தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தாள் மானிஷா.

“இப்படி  வந்து என் காலைக் கொஞ்சம் பிடிச்சுவிடு…”

 வந்த மிடிகவுன் கட்டளை போட கொதித்துப்போனாள் மானிஷா…

“ பொண்ணுங்களாடி நீங்க…மானங்கெட்ட பிழைப்பு 
பொலைக்கிற உனக்கே திமிறு இப்படினெ்னா…எங்களுக்கு எப்படி இருக்கும்….”

“என்னடி சொன்னே…இப்படி வாய் நீளுது…”

மானிஷாவின் கன்னத்தைப் பதம் பார்த்துவிட்டது பரணியின் முரட்டுக்கை.
நடப்பது நடக்கட்டும்…என தைரியத்தை வரவழைத்துக்கொண்டாள் மானிஷா….

“ என்ன பரணி….எந்த தைரியத்துல இப்படி துள்ளுரீங்க….
நான் வாய்பேசாம இருந்துட்டா…எனக்கு ஒன்னுமே தெரியாதுன்னு அர்த்தமா
 உங்க மெடிகள் ரிப்போட் எல்லாம் பொய்யாயிடுமா..…”

“என்னடி…நீ என்ன கதைவிட்றே..நீ சொல்லிட்டா நா பயந்திடுவேனா…”

“ போதும் பரணி இந்த நாடகம்….உனக்கு எயிட்ஸ் இருக்கு….
ஒரு ரிப்போட்டில்  சந்தேகமென்று எத்தனையோ…மருத்துவமனைல 
டெஸ்ட் எடுத்திருக்கே……அத்தனை ரிப்போட்டும் என்ன சொல்லிச்சு…
 உனக்கு எயிட்ஸ்…. ஆரம்பக்  கட்டத்தை தாண்டியாச்சு என்று சொல்லலை?
 உன் சபல புத்திக்கு கிடைச்ச தண்டணைடா இது…”
 அவிழ்த்துவிட்டாள் ஒரு முடிச்சை

“என்னடி…என்ன கதை அளக்குறே…எனக்கு எயிட்ஸா….” 

நா தட்டுத்தடுமாறினாலும்…. பெரிதாக சிரித்து வார்த்தைகளில் கம்பீரத்தை நிலைநாட்டமுற்பட்டான்

“ நான் கதைவிட்றேனா…எங்க பாதி சொத்துகளை கரைச்சு….வெயிநாட்டுக்குகப் போயிட்டே….அங்க பொண்ணுங்களோட போட்ட கும்மாளத்தில்
…உன் நோய் அம்பலமாச்சி…அப்புறமென்ன… சொந்த நாட்டுக்குத் தொரத்திட்டாங்க…
இங்க வந்து உன் சுயநலத்துக்காக
…எங்க வாழ்க்கையை சின்னாபிண்ணமாக்கிட்டே…
எத்தனைநாளுக்குடா உன் ஆட்டமெல்லாம்…” தனது ஆவேசத்தை வார்த்தைகளில் கொட்டினாள் மானிஷா…..

“ என்னடி மிரட்டுறியா…” வெறித்தனமாய் கேட்டான் பரணி.

“ ஒரு மிரட்டலுமில்லை….இனியெனக்குப் பயமும் இல்லை….உனக்குப் பயப்பட்ற காலம் இனி எனக்கு வரவே வராது….என் தங்கையைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்…”

முச்சுவிடாமல் கூறிய மானிஷா….அவ்விடத்தைவிட்டகன்றாள்… தனது அறைக்கு வந்து தன்னை தயார் படுத்திக்கொண்டாள்…
மானிஷா…ரிஷியின் செல்போஃன் நம்பரை சுழற்றினாள்….
சீக்கிரம் சந்திப்பதாகக் கூறி…. விடைபெற்றாள்……
வேகமாக வெளியேறினாள்..வீட்டைவிட்டு… பல முடிவுகளை தன்னிலே சுமந்தவளாய்.…

பரணிக்கு மேல் முச்சு கீழ் முச்சு வாங்கியது…
பக்கத்திலிருந்த மிடிகவுன் இவனை அற்பமாய் பார்ப்பது புரிந்தது…அவளைப் பொருட்படுத்தாது ஓடிச்சென்று தன் அலுமாரியின் லாச்சுகளைத் திறந்தவன் அதிர்ந்தான்…அனைத்து ரிப்போட்டுகளும்…
அடுக்கப்பட்ட நிலைக்கு மாற்றமாக சிதறிக்கிடந்தது

உடனே மானிஷாவின் அறைக்குச் சென்றான்….
விகாரமான புன்னகையுடன் வெளிவந்தவன் தன் வண்டியை ஸ்டார்ட் செய்து….
சாலைக்குள் ஓடவிட்டான்….

                                        தொடரும்.....

Thursday, October 6, 2011

நீயே என் சுவாசம் 06

அத்தியாயம் 06

“ என்னடா ரிஷி….இப்படி சீக்கிரமா மீட் பண்ண என்னடா காரணம்….வொய்ஸ் மெயிலைப் பார்த்ததும் அலரி அடிச்சிட்டு ஓடி வந்தேன்…நீ என்னடான்னா…கூலா உக்காந்திட்டு இருக்கே…என்னடா மேட்டர்…”

தோள்களை தட்டியபடியே வந்தமர்ந்தான் அர்ஜுன்
ரிஷி மௌனமாய் கண்களாலேயே… அவனை அளந்தான்….சிறிது நேர மௌனம்…ரிஷியே அந்த மௌனத்தை உடைத்தான்….

“ டேய்….மானிஷா நல்லவளா…கெட்டவளான்னு எனக்குத் தெரியலை..எனக்கு அவளை புடிச்சிருக்கு…அவள் எப்படிப்பட்டவளா அருந்தாலும் எனக்கு ஓக்கே….அவள் இல்லாம நா இல்லைடா….”

“ இப்போ இதை ஏன் என்கிட்ட சொல்றே….”

“நீ என் உயிர் நண்பன்டா….உன்கிட்ட சொல்லாம….எங்க சீஃப் டொக்டர் கிட்வாடா சொல்லச் சொல்லுறே….”

“ அப்போ நான் சொன்னா கேட்பியா…மானிஷாக்கு கல்யாணம் ஆயிடுச்சி…”

“ என்னடா விளையாடுறியா….இப்படி பொட்டுன்னு ஒடச்சிட்டா நான் நம்பிடுவேனா…ஆமா…உனக்கு என்னடா ஆச்சு….ஏன்டா இப்படி சிடு சிடுன்னு இருக்கே…”

ரிஷி கூறவும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான் அர்ஜுன்.

“ சரிடா…இப்ப நீ என்னதான் சொல்ல வர்றே…சொல்லு….பொறுமையா கேட்க நான் தயார்….”

கூறிய ரிஷி அர்ஜுனின் முகத்தை உற்றுப் பார்த்தான்….இருண்டு கருத்திருந்தது….அவனே சொல்லும் வரை ரிஷி தன் மனக்குமுறலை அடக்கியே வாசித்தான்….

“ ம்…சொல்லு அர்ஜுன்…”

“ டேய் ….வேணாம்டா…விட்டுடு….அவள் நல்லவள் இல்லை…அவள் சூழ்ச்சிக்காரி….நம்பவெச்சி ஏமாத்திடுவாடா….”

ரிஷியிற்கு அதிர்ச்யை தாங்க முடியவில்லை. சுதாகரித்துக் கொண்டான்.

“ நீ எதை வெச்சி இப்படி அவளை எடை போடுறே….நீ சொல்றதை நான் எப்படிடா நம்புறது…”

ரிஷியின் கேள்வியிற்கு அர்ஜுனின் விடை மௌனமே…

“ டேய்…என்னடா ஸைலன்ட்….சொல்லுடா…”

பதற்றத்தை வார்த்தையில் சுமத்தவில்லை ரிஷி.

“ ஸோரிடா….இதெல்லாம் சொல்லி….என் கடந்தகால வாழ்க்கையை கிளரிப்பார்க்க முடியலைடா…வலிக்குதுடா….”

 என்றான் கண்கள் குளமாக
தர்மசங்கட நிலைக்குத் தள்ளப்பட்டான் ரிஷி….அர்ஜுன் தெடர்ந்தான்

“ உன் நண்பன் நான் சொல்றேன்….என்னை நீ நம்பு….என் வாழ்க்கையின் மாற்றத்துக்கு காரணம் அவளேதான்…வாழ்க்கையை இழந்து…காதலை இழந்து…குடும்பத்தை இழந்து நிக்கிறேன் என்றால் காரணம் மானிஷாதான்… அவளை பழிவாங்கத் துடிக்குதுடா மனசு….”

ரிஷி அழைப்பதையோ…தடுப்பதையோ…காதில் வாங்கும் மனநிலையில் இல்லைாமல்…
தனது ஆதங்கத்தையும்…ஆவேசத்தையும்….கொட்டிக்கொண்டிருந்திருந்தான் அர்ஜுன்…
விக்கித்துப்போய் நின்றான் ரிஷி……